பத்ரகாளியாக மாறிய ஜனனி..கதிருக்கு விழுந்த அடி.. சிறைக்கு போகும் குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது!
சென்னை: எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் தர்ஷனை பார்த்த குணசேகரன் கோபத்தின் உச்சத்திற்கு சென்று அவனை நெஞ்சில் எட்டி மிதிக்க, அவன் நிலை தடுமாறி கீழே விழுகிறான். மேலும், டேய், கதிர் அந்த பொண்ணையும், அப்பனையும் கொல்லுடா என்று சொல்ல, ஜீவானந்தம் பதறி போய் அவர்களை காப்பாற்ற செல்கிறார். ஆனால், அதற்குள் கதிர், பார்கவியின் அப்பா கழுத்தை பிடித்து அடி அடி என அடிக்க அவர் அப்படியே மயங்கி விழுகிறார். தர்ஷன் வருவதை தெரிந்து கொண்டால் அறிவுக்கரசி, எப்படியாவது அவன் கதையை முடித்துவிட வேண்டும் என வீட்டிற்கு அடியாட்களுடன் வர, வீட்டில் குணசேகரன் செய்வதைப் பார்த்து விட்டு, அவளும் பார்கவியை அடி அடி என அடிக்கின்றனர். பின், பார்கவியையும் அப்பாவையும் ஜீவானந்தம் காப்பாற்றி, வெளியில் கொண்டு வருகிறார். பார்கவி அப்பாவின் உடல்நிலை மோசமாக இருந்ததால், அவரை ஜீவானந்தம் மருத்துவமனையில் அனுமதிக்கிறார்.
பறிபோன உயிர்: மறுபக்கம் வீட்டில், இன்னும் ரெண்டு மணி நேரத்தில் தர்ஷனுக்கும் அறிவுகரசி தங்கச்சி அன்புக்கரசிக்கும் கல்யாணம் என்று சொல்ல, பதறிப் போனா ஈஸ்வரி, இது ரொம்ப அநியாயம், இந்த கல்யாணம் நடக்கக்கூடாது என்று சொல்ல, உடனே குணசேகரன், ஏய் வாய மூடு டி, தர்ஷன் வீட்டிற்கு வர வேண்டும் என்பதற்காகத்தான், நீ சொல்வதற்கு எல்லாம் தலையாட்டிக்கொண்டேன். இதற்கு மேல் இந்த வீட்டில் என்னை மீறி ஏதாவது நடந்தது என்றால், அனைவரையும் சுட்டுத்தள்ளி விடுவேன் என்கிறான். மறுபக்கம் மருத்துவமனையில் இருக்கும் ஜீவானந்தத்திற்கு ஜனனி ஃபோன் செய்து, பார்கவியின் அப்பா எப்படி இருக்கிறார் என்று கேட்கிறாள். அப்போது, ஜீவானந்தம், அந்த பொண்ணோட அப்பா இறந்துவிட்டதாக சொல்ல, பேரதிர்ச்சியில் அனைவரும் இருக்கின்றனர்.

எதிர்நீச்சல் தொடர்கிறது: இதையடுத்து, இன்றைய எபிசோடில், பார்கவியின் அப்பா உயிரிழந்ததை கேள்விப்பட்ட ஈஸ்வரி தலையில் அடித்துக்கொண்டு, என்னால் தான் இப்படி ஆகிவிட்டது. என் பேச்சை கேட்டு தான் அவர்கள் வீட்டுக்கு வந்தார்கள் என்று அழுது புலம்புகிறாள், அப்போது ஜனனி, இந்த விஷயத்தில் நீங்க தவறு செய்யவில்லை அக்கா, நம்மை ஏமாற்றி நாடகமாடி, அவர்களை வீட்டுக்கு வரவைத்து பார்கவியின் அப்பாவை அடித்து கொலை செய்து விட்டு, இப்போ எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாமல், கல்யாணத்திற்கு தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு மேலும், நாம் அமைதியாக இருந்தால் அது நன்றாக இருக்காது. இதற்கு நாம் ஒரு முடிவு கட்டியே ஆக வேண்டும் என கூறிவிட்டு அனைவரும் கீழே வருகின்றனர்.
பத்ரகாளியான ஜனனி: அப்போது கதிர், அனைவரையும் தடுத்து நிறுத்த பத்ரகாளியாக மாறிய நந்தினி, கொலைகார பாவி, அந்த பொண்னோட அப்பன் செத்துட்டான்டா, நீதானே அவனை அடிச்ச என்று கதிரை பிடித்து தள்ளுகிறார். அப்போது கதிர் யார் என்ன செய்தாலும், உங்களை நான் வெளியில் விட மாட்டேன் என்று கதிர் கத்திக்கொண்டு இருக்க, ஜனனி கதிரை ஓங்கி அறைந்து விட்டு இதற்கு மேலும், நாங்க பொறுமையா இருக்க மாட்டோம். என்ன செய்ய வேண்டும் என எங்களுக்கு தெரியும், என சொல்லிவிட்டு மருத்துவமனைக்கு செல்கின்றனர். மருத்துவமனையில் பார்கவி அப்பாவை இழந்து விட்டு கதறி அழுது கொண்டு இருக்கிறாள். இவர்களை பார்த்தாலும், உங்களை நம்பி தானே நாங்க வீட்டிற்கு வந்தோம், கடைசியில் இப்படி செய்து விட்டீர்களே, என்னையும் கொன்றுவிடுங்கள், என்னை மட்டும் ஏன் விட்டு வெச்கீங்க, நான் உங்களுக்கு என்ன துரோகம் செய்தேன் என்று கதறி அழுகிறாள் அவளை சமாதானப்படுத்த முடியாமல் அனைவரும் நிற்கின்றனர். அப்போது ஜீவானந்தம், அப்பா இறந்ததை பார்கவியால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. நம்மை ஏமாற்றி நாடகமாடி கடைசியில் இப்படி செய்து விட்டார்களே என்று ஜீவானந்தம் புலம்புகிறார்.
முடிவு கட்டிய ஜனனி: உடனே ஜனனி எங்களையும் நம்ப வெச்சி ஏமாற்றி விட்டார்கள், பார்கவிக்கு எங்களால் ஆறுதல் சொல்ல முடியாது. ஆனால், நியாயம் வாங்கி தர முடியும் என்று சொல்கிறாள். இதையடுத்து காவல்துறையினர் மருத்துவமனைக்கு வர, ஜனனி எங்கள் வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் பார்கவின் அப்பாவை அடித்தே கொன்றுவிட்டார்கள். அதற்கு நாங்கள் அனைவரும் சாட்சி என்று சொல்கிறாள். இதையடுத்து என்ன நடந்தது என்று பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











