அடிச்சே கொன்னுட்டீங்களே.. எழவு வீட்டில் கல்யாணமா? ஜனனி எடுத்த முடிவு.. எதிர்நீச்சல் தொடர்கிறது!

சென்னை: ஜனனி, கதிரை ஓங்கி அறைந்து விட்டு இதற்கு மேலும், நாங்க பொறுமையா இருக்க மாட்டோம். என்ன செய்ய வேண்டும் என எங்களுக்கு தெரியும், அந்த பெண்ணோட அப்பாவின் சாவிற்கு நீங்க பதில் சொல்லியே ஆக வேண்டும் என சொல்லிவிட்டு அனைவரும் மருத்துவமனைக்கு வருகின்றனர். மருத்துவமனையில் பார்கவி அப்பாவை இழந்து விட்டு கதறி அழுது கொண்டு இருக்கிறாள். இவர்களை பார்த்தாலும், உங்களை நம்பி தானே நாங்க வீட்டிற்கு வந்தோம், கடைசியில் இப்படி செய்து விட்டீர்களே, என்னையும் கொன்றுவிடுங்கள் என கதறி அழுகிறாள். உடனே ஜனனி எங்களையும் நம்ப வெச்சி ஏமாத்திட்டாங்க, பார்கவிக்கு எங்களால் ஆறுதல் சொல்ல முடியாது. ஆனால், நியாயம் வாங்கி தர முடியும் என்று சொல்கிறாள். இதையடுத்து என்ன நடந்தது என்று பார்க்கலாம்.

வீட்டில் அறிவுக்கரசி, குணசேகரிடம் மாமா இப்போது கல்யாணத்தை செய்து வைத்து விடலாம், அவளுங்களால் எதையும் செய்ய முடியாது என்று சொல்கிறாள். இதைக்கேட்டு ஆத்திரப்படும் விசாலாட்சி, வாய மூடுடி இருடி, வீட்டில் எழவு விழுந்து இருக்கு, உனக்கு கல்யாணம் கேக்குதா... நீ என்னைக்கு இந்த வீட்டுக்குளே வந்தியோ அன்னையில் இருந்து குடும்பத்தில் ஒரே பிரச்சனையாகவே இருக்கிறது. இவளுங்க வீட்டை விட்டு வெளியில் போயிட்டாளுங்க நிச்சயம் பிரச்சனை செய்யாமல் இருக்க மாட்டாளுங்க, ஏதாவது செய்டா, இவளுங்களை தடுத்து நிறுத்து என்று பதறி அழுகிறாள் விசாலாட்சி.

Ethirneechal Thodargiradhu Suntv promo
Photo Credit:

காவல்துறை அதிகாரி செய்த வேலை: மருத்துவமனைக்கு வரும் காவல்துறை அதிகாரி, பார்கவி, ஜீவானந்தத்தை ஜீப்பில் ஏறும்படி சொல்கிறார். இதை கேட்டு ஆத்திரப்படும் ஈஸ்வரி, இவர்க ஏன் ஜீப்பில் ஏற வேண்டும் என்று கேட்க இவர்கள் தான் தர்ஷனை கடத்தி வைத்துக் கொண்டு மிரட்டியதாக எங்களுக்கு புகார் வந்து இருக்கு என்று சொல்கிறார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த ஈஸ்வரி, தர்ஷனை காப்பாற்றி வீட்டிற்கு கொண்டு வந்ததே இவர்கள் தான். வீட்டுக்கு வந்தவர்களை எல்லாரும் சேர்ந்து அடித்து கடைசியில் பார்கவின் அப்பா இறந்துவிட்டார் என்கிறார். அதைத்தொடர்ந்து ஜனனி, பார்கவியின் அப்பாவின் மரணத்திற்கு காரணம் வீட்டில் இருந்த அறிவுக்கரசி, குணசேகரன், கதிர் தான் அதனை கண்ணால் பார்த்த சாட்சி நாங்கள் தான், எப்ஐஆர் போட்டு அனைவரையும் கைது செய்யுங்கள் என்கிறார்.

ஜனனி எடுத்த முடிவு: இன்றைய எபிசோடு காண ப்ரமோ வெளியாகி உள்ளது, அந்த ப்ரோமோவில் காவல்துறை அதிகாரி அறிவுக்கரசிக்கு ஃபோன் செய்து இங்கு நிலைமை சரி இல்லை நிச்சயமாக எஃப்.ஐ.ஆர் போட வேண்டியது வரும், இதுக்கு மேல என்னால் எதுவும் செய்ய முடியாது. எஃப்.ஐ.ஆர் போட்டா வீட்டிற்கு வந்து ஆய்வு செய்வார்கள். தவறு செய்து இதுக்கு மேல எனக்கு எதுவும் தெரியாது, இனிமேல் எனக்கு போன் செய்யாதீர்கள் என்கிறார். மறுபக்கம் ஜனனி, காவல்துறை அதிகாரி சரியான நடவடிக்கை எடுக்காததால் பேஸ்புக் நேரலையில் மருத்துவமனையில் நடந்த அவலத்தை பற்றி பேசுகிறார். அப்போது அங்கு வரும் காவல்துறை அதிகாரி அதை தடுக்க, நீங்க நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்து என்ன செய்ய வேண்டுமோ அதை செய்வேன் என்கிறாள். இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X