ஈஸ்வரியை அறைந்த குணசேகரன்.. ஜனனியின் நெற்றியில் துப்பாக்கி.. எதிர்நீச்சல் தொடர்கிறது!

சென்னை: அறிவுக்கரசி, மாமா இன்னைக்கு ரொம்ப நல்ல நாள், நல்ல நேரத்தில் தான் பந்தக்கால் நடும் விழா நடந்து இருக்கு, இன்னைக்கு தர்ஷன் வீட்டுக்கு வந்துவிடுவான், அவனுக்கு யார் உதவி செய்தது, அவன் யார் கூட இருக்கான் என்கிற எல்லா விஷயமும் எனக்கு தெரியும், நான் வரும் போது தர்ஷன் கூடத்தான் வருவேன் என்கிறாள். இதை கேட்டுக்கொண்டிருந்த பெண்கள் அனைவரும், என்ன நடக்கிறது என்று தெரியாமல் குழப்பத்தில் இருக்கின்றனர். இதைத்தொடர்ந்து என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்.

பார்கவியின் அப்பா மற்றும் பார்கவியை ஜீவானந்தம் ஒரு இடத்தில் இறக்கிவிட்டு அவர்களிடம் என்ன பிரச்சனை என்று கேட்கிறார். அப்போது, பார்கவியின் அப்பா, என் மகள் ஒருவனை காதலித்தால் அவன் பணக்கார வீட்டு பையன், நல்ல நடிச்சி எங்களை ஏமாத்தி கடைசியில் என் மகளை நம்ப வெச்சு ஏமாற்றிவிட்டான். அதோடு, மட்டுமல்லாமல் அந்த குடும்பத்தில் இருக்கும் அனைவரும் நாங்கள் சாகவேண்டும் என, அடி ஆட்களை அனுப்பி எங்களை கொல்ல பார்க்கிறார்கள் என்கிறார்.

Ethirneechal Thodargiradhu Suntv promo
Photo Credit:

எதிர்நீச்சல் தொடர்கிறது: பின், ஜீவானந்தம் எனக்கும் ஒரு மகள் இருக்கிறாள், மகளுக்காக நீங்கள் இவ்வளவு தூரம் வந்திருக்கும் போது உங்களுக்கு நான் நிச்சயம் உதவி செய்கிறேன் என்று இருவரையும் காரில் அழைத்துக் கொண்டு செல்கிறார். அப்போது, தர்ஷனை தேடி வரும் ரௌடிகள் தர்ஷனை பார்த்து விட்டு துரத்துகின்றனர். அவர்கள் கையில் சிக்காமல், தர்ஷன் தலைதரிக்க ஓடி வந்து ஜீவானந்தத்தின் காரின் மீது மோதுகிறான். பின் தர்ஷன் காரில் ஏறுகிறான். தர்ஷனை பார்த்த பார்கவியின் அப்பா, இவன் தான் எல்லா பிரச்சனைக்கும் காரணம், என் மகளின் வாழ்க்கையை கெடுத்தது இவன் தான், என தர்ஷனின் கழுத்தை பிடித்துக்கொண்டு அடிக்கிறார். இந்த சண்டையில் பார்கவியின் அப்பா மயங்கி விடுகிறார். அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்கிறார் ஜீவானந்தம்.

ஜனனியின் நெற்றியில் துப்பாக்கி: இன்றைய எபிசோடு காண ப்ரோமோ வெளியாகியுள்ளது. அந்த ப்ரோமோவில், கொடைக்கானலில் இருந்து பார்கவியும் தர்ஷனும் தப்பி விட்டதாகவும், அவர்கள் இருவரும் ஒரு காரில் ஏறி சென்றதை பார்த்தோம் என்று, காரில் ஏறிய வீடியோவை காட்ட அதில் ஜீவானந்தம் இருப்பதை பார்த்து குணசேகரன் அதிர்ச்சி அடைகிறார். இது எல்லாம் ஈஸ்வரியின் திட்டம் தான் என நினைத்துக் கொள்ளும் குணசேகரன், ஈஸ்வரியை அடித்து, அவனுக்கு ஃபோன் போட்டு என் மகனை அனுப்ப சொல்லு என்று கோவத்தில் உச்சத்திற்கு சென்று கத்துகிறார். அப்போது, ஈஸ்வரி இதற்கும் அவருக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று சொல்கிறாள்.

ஆனால், அதை காதில் வாங்கிக்கொள்ளலாத குணசேகரன், துப்பாக்கியை எடுத்து, இப்பொழுது என் மகன் தர்ஷன் இங்கே வரவேண்டும். அவனுக்கு ஃபோன் போடு என்று மிரட்டுகிறார். அப்போது, ஜனனி குறுக்கே வந்து, இந்த விஷயத்திற்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. உண்மையிலேயே என்ன நடக்கிறது என்று எங்களுக்கு எதுவுமே தெரியவில்லை என்று சொல்கிறாள். ஆனால், கோவத்தின் உச்சத்தில் இருக்கும் குணசேகரன், இந்த விஷயத்தில் நீ தலையிடாதே, உன்னை சுட்டுக்கொன்றுவிடுவேன் என சொல்லி ஜனனியின் நெற்றியில் துப்பாக்கியை வைத்து மிரட்டுகிறார். இதைத்தொடர்ந்து என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X