குணசேகரனின் சதி என்ன? புதிய தொழிலை தொடங்கிய பெண்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது!
சென்னை: எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஈஸ்வரியோட அப்பா, நாகப்பன் என்கிற ஓட்டல் உரிமையாளரை வீட்டிற்கு அழைத்து வந்து குணசேகரிடம் அறிமுகப்படுத்தி வைக்கிறார். இவர் பெரிய ஹோட்டல் அதிபர், இவரு, பாரம்பரியை உணவு சமைப்பவர்கள் தேவை என்று என்னிடம் கேட்டார். உடனே எனக்கு உங்களுடைய மருமகளுடைய ஞாபகம் தான் வந்தது மாப்பிள்ளை. இவங்க தான் ஏதாவது சாதிக்கண வேண்டும் என நினைச்சிட்டு இருக்காங்க. அதான் நான் இங்கே அழைத்து வந்தேன் என்று அவரை அறிமுகப்படுத்தி வைக்கிறார் ஈஸ்வரின் அப்பா. இதற்கு வீட்ல இருக்கிற எல்லாருமே எதிர்ப்பு தெரிவித்த போதும், குணசேகரன் ஆதரவு தெரிவிக்கிறார்.
இந்த விஷயத்துல குணசேகரன் ஆதரவு தெரிவித்ததால், மருமகள்களுக்கு அவர் மேல ஒரு டவுட் இருந்தாலும், இந்த நாகப்பன் யார் என்பதை தெரிஞ்சு கொண்டு. அதன் பிறகு, இந்த பிஸ்னசை நாம பண்ணலாமா... வேண்டாமா என்று யோசிக்கின்றனர். இதையடுத்து ஜனனி, நந்தினி ரெண்டு பேருமே நாகப்பன் பற்றி அலசி ஆராய்கின்றனர். பின் இந்த பிசினசை தொடங்க அனைவரும் முடிவு செய்கின்றனர். இதை குணசேகரிடம் சொல்ல, அவரும் உங்களுடைய பிசினஸுக்கு நான் பணம் கொடுத்து உதவி செய்கிறேன் என பணத்தை கொடுக்கிறார். ஆனால், ஜனனி அதை வாங்காமல், இப்போதைக்கு எங்களுக்கு பணம் தேவையில்லை. நாங்க பெரிய அளவில் கடன் எல்லாம் வாங்க வேண்டாம் என்று இருக்கிறறோம். எங்களுக்கு சக்தி கூட இருந்தா போதும் என்று சொல்ல, கதிர் ஞானம் ரெண்டு பேருமே முடியாது என்கின்றனர். ஆனால், குணசேகர பெண்கள் எல்லாரும் சேர்ந்து ஒரு தொழிலை தொடங்கும் போது, ஒரு ஆண் துணை தேவைதான். சக்தி உங்க கூட இருப்பான் நல்லா பிசினசை பண்ணுங்க என்றகிறார்.
எதிர்நீச்சல் தொடர்கிறது: இதைத்தொடர்ந்து அனைவரும் சேர்ந்து கம்பெனிக்கு தமிழ் சோறு என அழகான தமிழ் பெயரை வைக்கிறார்கள். பின், ஜனனி ஆதி குணசேகரிடம் நீங்க தான், இந்த வீட்டில், நாங்க நல்லா இருக்க வேண்டும் என நினைக்கும ஆள். இதனால நீங்களே விளக்கை ஏற்றி வைத்து. இந்த பிசினஸை ஆரம்பித்து வைங்க என்று கேட்க, குணசேகரனும் விளக்கு ஏற்றி பிசினஸை தொடங்கி வைக்கிறார். இதை பார்த்த அனைவருக்குமே அதிர்ச்சி அடைகின்றனர்.

பெரிய சம்பவம் இருக்கு: இதையடுத்து, இன்றைய எபிசோடு காண ப்ரோமோ வெளியாகி உள்ளது. பிசினசை தொடங்கிய பெண்கள் அனைவரும் காலையிலேயே விறுவிறுப்பாக வகையான உணவுகளையும் சமைத்து கொடுத்து அனுப்பி வைக்கிறார்கள். இதை குணசேகரன் மாடியில் இருந்து பார்க்கிறார். ஞானம், கதிர் இருவரும் குணசேகரிடம் நாங்க இதெல்லாம் வேண்டம் என்று சொன்னோம் நீங்க கேட்கவே இல்லை. கடைசியில் இவங்க வேலை ஆரம்பிச்சிட்டாங்க, இது எங்க போகப்போகிறது என்று தெரியவில்லை என்கின்றனர். அப்போது, குணசேகரன், நான் இந்த விஷயத்துக்கு வேண்டாம் என்று சொன்னால், அவங்க வேற விதமாக யோசனை பண்ணி ஆட்டத்தையே கலைத்து விடுவார்கள் என்கிறார். இந்த வார்த்தையின் மூலம் குணசேகரன் ஏதோ ஒரு பெரிய சம்பவத்தை செய்வதற்காக தான் அமைதியாக இருக்கிறார் என்பது தெரிகிறது. இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











