பாம்பா? விழுதா? அமைதியாக ஆட்டத்தை ஆரம்பித்த குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது!
சென்னை: சமையல் பிஸ்னசை தொடங்கிய பெண்கள் கம்பெனிக்கு தமிழ் சோறு என அழகான தமிழ் பெயரை வைக்கின்றனர். பின், ஜனனி ஆதி குணசேகரிடம் நீங்க தான், இந்த வீட்டில், நாங்க நல்லா இருக்க வேண்டும் என நினைக்கும ஆள். இதனால், நீங்களே விளக்கை ஏற்றி வைத்து. இந்த பிசினஸை ஆரம்பித்து வைங்க என்று கேட்க, குணசேகரனும் விளக்கு ஏற்றி பிஸ்னசை தொடங்கி வைக்கிறார். இதை பார்த்த அனைவருக்குமே அதிர்ச்சி அடைகின்றனர். இதையடுத்து, என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.
எதிர்நீச்சல் சீரியலில், காலையிலேயே அனைவரும் விறுவிறுப்பாக உணவுகளையும் சமைத்து கொடுத்து அனுப்பி வைக்கிறார்கள். இதை குணசேகரன் மாடியில் இருந்து பார்க்கிறார். ஞானம், கதிர் இருவரும் குணசேகரிடம் நாங்க இதெல்லாம் வேண்டாம் என்று சொன்னோம் நீங்க கேட்கவே இல்லை. கடைசியில் இவங்க வேலை ஆரம்பிச்சிட்டாங்க, இது எங்க போகப்போகிறது என்று தெரியவில்லை என்கின்றனர். அப்போது, குணசேகரன், நான் இந்த விஷயத்துக்கு வேண்டாம் என்று சொன்னால், அவங்க வேற விதமாக யோசனை பண்ணி ஆட்டத்தையே கலைத்து விடுவார்கள். இன்னைக்குத் தானே ஆரம்பித்து இருக்கிறார்கள், என்ன செய்கிறார்கள் என்று பெருமையாக இருந்து பார்ப்போம் என்கிறார்.

எதிர்நீச்சல் தொடர்கிறது: அடுத்ததாக, நாகப்பனிடம் இருந்து போன் வரவில்லையே என அனைவரும் கவலையில் இருக்க, அப்போது நந்தினி, சாப்பாடு எப்படி இருக்கு என்று ஒரு ஃபோன் செய்து சொல்லி இருக்கலாமே. எதுவுமே சொல்லாமல் இப்படி இருந்தால் எனக்கு பதட்டமாக இருக்கிறது என்று சொல்கிறாள். அந்த நேரம் பார்த்து நாகப்பனிடம் இருந்து ஃபோன் வருகிறது. நீங்கள் இப்படி செய்வீர்கள் என்று நான் நினைக்கவே இல்லை, என்று சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். நீங்க சமைத்த உணவு மிகவும் சுவையாகவும், அருமையாகவும் இருந்தது பொதுவாக நான் யாரையும் பாராட்டவே மாட்டேன். ஆனால், நானே பாராட்டுகிறேன் என்றால் உங்களுடைய உணவு உண்மையிலேயே நன்றாக இருந்தது என்கிறார்.
சமையல் சூப்பர்: மேலும் வெளிநாட்டில் என்னுடைய மகன் இருக்கிறான். நீங்கள் இத்தனை நாள் உழைத்ததெல்லாம் போதும் வெளிநாட்டில் வந்து செட்டில் ஆகிவிடுங்கள் என்று சொல்கிறான். நானும் வெளிநாட்டிற்கு போவதற்கு ரெடியாக விட்டேன். இங்கு இருக்கும் கம்பெனியை யாரிடம் ஒப்படைத்து விட்டுப் போவது என்று நினைத்துக் கொண்டிருந்தேன். இப்போது நீங்கள் இருக்கிறீர்கள். நீங்களே என்னுடைய கம்பெனியில் ஒரு பார்ட்னராகி விடுங்கள் என்று சொல்ல அனைவரும் மகிழ்ச்சி அடைகின்றனர். இதை ஜான்சி ராணி, கரிகாலன் இருவரும் ஒட்டு கேட்ட விட்டு கீழே வந்து குணசேகரனிடம் சொல்கின்றனர். இதைக்கேட்டு, கதிர் இவளுங்கள இப்படியே விட்ட அவ்வளவு தான் என ஆவேசமடைகிறான். கதிரை சமாதானப்படுத்திய குணசேகரன். கதிர்,ஞானம் இருவரையும் தனியாக அழைத்து சென்று, உங்க பொண்டாட்டிகள் என்னமோ செய்துவிட்டு போகட்டும், அவர்களைப் பற்றி கவலைய விட்டுவிட்டு அடுத்து நீங்க என்ன தொழில் செய்யலாம் என்று யோசித்து முடிவு எடுங்கள். நான் கொடுத்த சொத்து கால் பகுதி தான் அதை எப்படி இரட்டிப்பாக்குவது என்று யோசனை செய்யுங்கள், அது தான் எனக்கு மகிழ்ச்சி என்கிறார். இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











