தர்ஷனுக்கு பார்கவி மேல் வந்த காதல்.. குணசேகரனின் அடுத்த பிளான்.. எதிர்நீச்சல் தொடர்கிறது!
சென்னை: குணசேகரன் தனது தம்பிகளை அழைத்து, வீட்டு பெண்கள் ஏதோ செய்துவிட்டு போகட்டும். அவர்களைப் பற்றி கவலைய விட்டுவிட்டு அடுத்து நீங்க என்ன தொழில் செய்யலாம் என்று யோசித்து முடிவு எடுங்கள். நான் கொடுத்த சொத்து கால் பகுதி தான் அதை எப்படி இரட்டிப்பாக்குவது என்று யோசனை செய்யுங்கள், அது தான் எனக்கு மகிழ்ச்சி. இந்த வீட்டில் இருக்கும் பொம்பளைங்களே என்னிடம் பணத்தை வாங்காமல் தானே முன்னேற நினைக்கும் போது நீங்களும், சொந்தமாக ஏதாவது செய்து, முன்னேறப்பாருங்க, அப்போத்தான் நாம மீசை வைத்தற்கு அர்த்தம் என்கிறார்.
அடுத்ததாக, தர்ஷன், அனைத்து பரீட்சையை முடித்துவிட்டு ஆட்டோவில் வரும் போது, ஈஸ்வரியிடம் உருக்கமாக பேசுகிறான். நீ மட்டும் இல்லை என்றால், என்னால், எல்லா பரிட்சையையும் எழுதி இருக்க முடியாது,எல்லாத்துக்கும் காரணம் நீ தான் அம்மா என்று கட்டியணைத்து நன்றி சொல்லுகிறான். மறுபக்கம் தர்ஷினியிடம், சாரி தர்ஷினி, நான் உன்னை எவ்வளவோ காயப்படுத்தி இருக்கிறேன். ஆனால், நீ சரியான நேரத்தில் என்கூட இருந்த, இதை நான் என்னைக்கும் மறக்கவே மாட்டேன் என்கிறான். அப்போது, தர்ஷினி, நீ இப்படி பேசியதே இல்லை தர்ஷா, உண்மையில் நீ மாறிவிட்ட, ஆனால், எங்களுக்கு நன்றி சொல்வதற்கு முன்னாடி நீ, பார்கவிக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். அவள் தான், உனக்காக கஷ்டப்பட்டால் என்று சொல்லிவிட்டு, பார்கவிக்கு ஃபோன் போடுகிறாள்.

எதிர்நீச்சல் தொடர்கிறது: அப்போது, பார்கவி, நான் இன்னைக்கு இந்த ஊரைவிட்டு போகிறேன். எந்த இடத்திற்கு போகிறோன் என்று கூட தெரியாது. அப்பா, இதற்கு மேல் இந்த ஊரில் இருக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டார் என்று சொல்லி கண் கலங்குகிறாள். இதைகேட்டு, தர்ஷன் வருத்தப்படுகிறான். பின் வீட்டிற்கு வரும் தர்ஷன், அப்பாவிடம் ஒரு முக்கியமான விஷயம் பற்றி பேசி முடிவு எடுக்க வேண்டும் என்று வீட்டிற்குள் செல்கிறான். அப்போது, குணசேகரன், என்ன தர்ஷா பரிட்சை முடிந்துவிட்டதா என்று கேட்டுவிட்டு, இனி மேல், உன் அம்மா, உன் சித்திகளிடம் இருந்த தள்ளியே இரு, அது தான் உன் வாழ்க்கைக்கு நல்லது என்று சொல்லிவிட்டு, தர்ஷனிடம் கல்யாண பத்திரிக்கையை கொடுக்கிறார். இதைப்பார்த்து தர்ஷன் அதிர்ச்சியில் இருக்க, என்ன தர்ஷா பத்திரிக்கை எப்படி இருக்கு, பிரித்துப்பார். உன் கல்யாணத்திற்காகத்தான் நான் ஜெயிலில் இருந்து வெளியே வந்தேன். இந்த கல்யாணம் நடந்தே ஆக வேண்டும் என்று சொல்ல, தர்ஷன் எதுவுமே பேசாமல் அமைதியாக மேல வந்துவிடுகிறான்.
குழப்பத்தில் தர்ஷன்: இதையடுத்து, ஈஸ்வரி,ஜனனி என அனைவரும் தர்ஷனிடம் என்னடா எதுவுமே பேசாமல் வந்துவிட்ட என்று கேட்கின்றனர். அப்போது, எனக்கு இந்த கல்யாணத்தில் விருப்பம் இல்லை என்கிறான். இதை நீ, அப்பாவிடமே சொல்லி இருக்கலாமே என்று சொல்ல, அதைப்பற்றி பேசுவதற்குத்தான் நான் போனேன். ஆனால், கல்யாண பத்திரிக்கையை கொடுக்கிறார், அப்படியே நான் பேசினாலும், அவர் அதைபுரிந்து கொள்ள மாட்டார் என்று சொல்கிறான். அப்போது, ஈஸ்வரி இது உன் வாழ்க்கை தர்ஷன் நீ தான் முடிவு எடுக்க வேண்டும், இப்போது நீ பேசவில்லை என்றால், பின்னாடி பெரிய பிரச்சனையாகிவிடும் என்று சொல்கிறாள். இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











