குறிச்ச நேரத்தில் கல்யாணம் நடக்கணும்.. தர்ஷனுக்கு விழுந்த அடி உதை.. எதிர்நீச்சல் தொடர்கிறது!

சென்னை: பரீட்சை எழுதிய தர்ஷன், இதற்கு உதவியாக இருந்த பார்கவிக்கு ஃபோன் போட்டு நன்றி சொல்ல, இந்த ஊரைவிட்டு போகிறேன். எந்த இடத்திற்கு போகிறேன் என்று கூட தெரியாது. அப்பா, இதற்கு மேல் இந்த ஊரில் இருக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டார் என்று சொல்லி கண் கலங்குகிறாள். இதைகேட்டு, தர்ஷன் வருத்தப்படுகிறான். பின் வீட்டிற்கு வரும் தர்ஷன், அப்பாவிடம் ஒரு முக்கியமான விஷயம் பற்றி பேசி முடிவு எடுக்க வேண்டும் என்று வீட்டிற்குள் செல்கிறான். அப்போது, குணசேகரன்,பரிட்சை முடிந்துவிட்டதா என்று கேட்டுவிட்டு, இனி மேல், உன் அம்மா, உன் சித்திகளிடம் இருந்த தள்ளியே இரு, அது தான் உன் வாழ்க்கைக்கு நல்லது என்று சொல்லிவிட்டு, தர்ஷனிடம் கல்யாண பத்திரிக்கையை கொடுக்கிறார்.

இதைப்பார்த்து, தர்ஷன் அதிர்ச்சி அடைகிறான், பின் ஈஸ்வரியிடம் சென்று, இந்த கல்யாணத்தில் எனக்கு விருப்பம் இல்லை என்று சொல்கிறான். இதைக்கேட்டு அனைவரும் கோவப்படுகின்றனர். அப்போது, ஜனனி, அவன் வாழ்க்கையை அவன் தான் முடிவு செய்வான் என்று சொல்கிறாள். இதையடுத்து, சக்தியிடம் விஷயத்தை சொல்கின்றனர். இதைக்கேட்டு கோவப்படும் சக்தி, என்னடா இப்படி சொல்ற, கல்யாணத்திற்கு பத்திரிக்கையை எல்லாம் ரெடியாகி இருக்கு, இந்த நேரத்தில் கல்யாணம் வேண்டாம் என்று சொன்னால் என்ன அர்த்தம் என்று கேட்டு சத்தம் போடுகிறான். அப்போது, தர்ஷன் அந்த பொண்ணுக்கும் எனக்கும் செட்டாகவே இல்லை சித்தப்பா, அந்த பெண்ணுக்கு கொஞ்சம் கூட மெச்சூரிட்டியே இல்லை என்று சொல்கிறான். இதைக்கேட்டு ஈஸ்வரி, சக்தி, நீ தான் என் மூத்த மகன், இந்த விஷயத்தில் பிரச்சனை ஆகாமல், உங்க அண்ணாகிட்ட பேசி முடிவு எடுக்க வேண்டும் என்று சொல்கிறாள்.

Ethirneechal Thodargiradhu Suntv promo
Photo Credit:

எதிர்நீச்சல் தொடர்கிறது: இதையடுத்து, தர்ஷனை கீழ் அழைத்துவரும் சக்தி, குணசேகரனிடம், தர்ஷன் உங்களிடம் ஒரு விஷயம் பற்றி பேச வேண்டும் என்று சொன்னான் என்று சொல்கிறான். உடனே, குணசேகரன் என்ன தர்ஷா, உன் கல்யாணத்தை எப்படி நடத்த வேண்டும் என்று எதாவது பிளான் இருக்கா, எதுவாக இருந்தாலும் சொல்லு என்று சொல்கிறான். அப்போது, தர்ஷன், எனக்கு படித்துவிட்டு, வேலைக்கு போக வேண்டும் என்கிற ஆசை இருக்கிறது. இதனால், இப்போதைக்கு எனக்கு கல்யாணம் வேண்டாம் என்று சொல்கிறான். இதைக்கேட்ட கதிர், தர்ஷனின் கன்னத்தில் பளார் என்று அறைவிடுகிறான். சக்தி கதிரை தடுத்து நிறுத்தி, தர்ஷன் அவங்க அப்பாவிடம் பேசுகிறான். இதில், நீ செய்வது சரி இல்லை என்று சொல்கிறான். அப்போது, குணசேகரன், கதிர் என் மகனை அடிக்க எல்லா உரிமையில் இருக்கு என்று சொல்லிவிட்டு, டேய் கதிர் அறிவுக்கரசியை ஃபோட்டு வர சொல் என்கிறான்.

சும்மா விடமாட்டேன்: சிறிது நேரத்தில் வீட்டிற்கு வரும் அறிவுக்கரசியிடம், தர்ஷன் நான் படிக்க போகிறேன், இப்போதைக்கு கல்யாணம் வேண்டாம் என்று சொல்ல, ஆத்திரப்படும் அறிவுக்கரசி, படிக்க போகிறேன் என்று சொல்லி ஏமாற்றிவிட்டு, கடைசியில் அந்த பார்கவியை கல்யாணம் பண்ணிக்க நினைக்கிறியா... நீ தினமும் பரீட்சை எழுத போகும் போது என்ன பண்ண, யார் கூட பேசுன, எல்லாம் எனக்கும் தெரியும் என்று சொல்லிவிட்டு, தர்ஷனின் போனை வாங்கி பாருங்க, பார்கவியும் இவனும் சேர்ந்து என்னென்ன செய்தார்கள் என்று தெரியும் என்று சொல்ல, கதிர், தர்ஷனின் ஃபோனை வாங்கி பார்க்கிறான். அதில், பார்கவியிடம் பேசியது தெரியவர, அண்ணன் நேத்துக்கூட பார்கவியிடம் பேசி இருக்கான் என்று சொல்ல, குணசேகரன் ஆத்திரப்பட்டு, தர்ஷனை வெளு வெளுவென அடித்து துவைக்கிறார். இதையடுத்து, என்ன நடக்கப்போகிறது என்பதை பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X