மொத்த குடும்பத்தையும் அழிச்சிடுவேன்.. கோவத்தின் உச்சத்தில் குணசேரகன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது!

சென்னை: நேற்றைய எபிசோடில், அறிவுக்கரசியிடம், தர்ஷன் நான் படிக்க போகிறேன், இப்போதைக்கு கல்யாணம் வேண்டாம் என்று சொல்ல, ஆத்திரப்படும் அறிவுக்கரசி, படிக்க போகிறேன் என்று சொல்லி ஏமாற்றிவிட்டு, கடைசியில் அந்த பார்கவியை கல்யாணம் பண்ணிக்க நினைக்கிறியா... நீ தினமும் பரீட்சை எழுத போகும் போது என்ன பண்ண, யார் கூட பேசுன, எல்லாம் எனக்கும் தெரியும் என்று சொல்லிவிட்டு, தர்ஷனின் போனை வாங்கி பாருங்க, பார்கவியும் இவனும் சேர்ந்து என்னென்ன செய்தார்கள் என்று தெரியும் என்று சொல்கிறாள். கதிர், தர்ஷனின் ஃபோனை வாங்கி பார்க்கிறான். அதில், பார்கவியிடம் பேசியது தெரியவர, அண்ணன் நேத்துக்கூட பார்கவியிடம் பேசி இருக்கான் என்று சொல்ல, குணசேகரன் ஆத்திரப்படுகிறான்.

இதையடுத்து, எதிர்நீச்சல் சீரியலில், தர்ஷன் செய்ததைப்பார்த்து கோவப்பட்டு குணசேகரன் அவனை அடித்து உதைத்து, இனிமேல் நீ இந்த வீட்டை விட்டு எங்கும் போகக்கூடாது. இவன் கிட்ட எந்த பொம்பளையும் பேசக்கூடாது. டேய், கதிர், இவன வெட்டுவியோ, குத்துவியோ எனக்கு தெரியாது. ஆனால், குறுச்ச நேரத்தில் இந்த கல்யாணம் மட்டும் நடக்கவில்லை என்றால், இந்த வீட்டில ஒருத்தர் உயிரோட இருக்க முடியாது. எல்லாரையும் கொன்றுவிட்டு, நானும் ஜெயிலுக்கு போய் விடுவேன் என்று மிரட்டி விட்டு வெளியே செல்கிறார்.

Ethirneechal Thodargiradhu Suntv promo
Photo Credit:

எதிர்நீச்சல் தொடர்கிறது: இதனால் ஒட்டு மொத்த குடும்பமும் பயந்து போய் இருக்க, அப்போது வரும் கதிர், நந்தினி இடம் இனிமேல், தர்ஷன் என்கூட ஏன் அறையில் தான் இருப்பான். யாரும் அவன் கூட பேசவே கூடாது, நீங்க எல்லாம் சேர்ந்து என்ன பண்றீங்க, என்ன திட்டம் போட்டாலும் அந்த திட்டம் இந்த வாட்டி ஜெயிக்காது என்று சொல்ல, அப்போது குறுக்கிடும் ஈஸ்வரி, தர்ஷன் என்னுடைய பையன் அவனுக்கு விருப்பமில்லாத ஒரு விஷயத்தை செய்ய நான் ஒத்துக்கவே மாட்டேன் என்று சொல்கிறாள். இதனால், மேலும் ஆத்திரம் அடையும் கதிர் நந்தினியின் கழுத்தை பிடித்துக்கொண்டு, இனிமேல், அந்த பொம்பளை ஏதாவது ஒரு வார்த்தை பேசினால், உன் அப்படியே கொன்று விடுவேன் என்று மிரட்ட, வேறு வழியே இல்லாமல் ஈஸ்வரி அமைதியாக விடுகிறாள். பின், ஈஸ்வரி, தர்ஷன் என்னுடைய பையன் அவனுக்கு பக்க பலமா நான் இருப்பேன். இந்த கல்யாணத்தை நான் எப்படியாவது தடுத்துவிடுவேன் என்கிறாள்.

அறிவுக்கரசியின் திட்டம்: இதையடுத்து, இன்றைய எபிசோடில், இனிமே இந்த வீட்ல இருந்தா, அன்புக்கரசிக்கு கல்யாணம் பண்ணி வச்சிருவாங்க. அதனால், இனிமே இந்த வீட்டில் இருக்க கூடாது ஏதாவது ஒரு பொய்யை சொல்லிட்டு வீட்டை விட்டு வெளியில் போக வேண்டும் என்று திட்டம் போடுகிறான். இதையடுத்து, வீட்டுக்கு வரும் அறிவுக்கரசி இதுவரைக்கும் மாப்பிள்ளை உங்க வீட்ல இருந்ததெல்லாம் போதும் இனிமே மாப்பிள்ளை எங்க வீட்ல இருக்கட்டும், கல்யாணம் முடிகிற வரைக்கும் எங்க வீட்டில் இருப்பது தான் சரி என்று சொல்லிவிட்டு அவனிடமிருந்த ஃபோனை வாங்கிவிட்டு, இனிமே இதுதான் உங்களுடைய ஃபோன், இதுல புது நம்பர் இருக்கு, நீங்க யாருக்கு ஃபோன் செய்யவேண்டும் என்றாலும் இதுல பண்ணுங்க என்கிறாள். அப்போது, சக்தி, ஏற்கனவே தர்ஷன் உங்க வீட்டுக்கு வரமாட்டான் என்று பேசி முடிவு செய்துவிட்டோம். இப்போது எதுக்கு அவன் உங்க வீட்டுக்கு வரவேண்டும் என்று கேட்க, உங்க மாப்பிள்ளை செய்த வேலை அப்படி இனி மேல் அவர் எங்க வீட்டில் இருந்தால் தான் சரிப்பட்டு வரும் என்கிறாள். இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X