கதிர் பொண்டாட்டி பண்ணிய காரியம்..நந்தினியிடம் எகிறிய குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது!

சென்னை: விசாலாட்சி, கதிரிடம், இந்த வீட்டில் உன் பொண்டாட்டி மட்டுமில்லாமல் நாலு பேரு ஒரு தினுசா இருக்குறாங்க, என்ன பிரச்சனை செய்ய காத்து இருக்கிறார்கள். மணி விழாவில் பெரியவனை அவமானப்படுத்திவிட்டார்கள், மறுபடியும் இந்த சடங்குல ஏதாவது நடந்தால், நான் சும்மா இருக்க மாட்டேன் என்று சொல்கிறாள். அந்த நேரம் பார்த்து, நந்தினியின் அம்மா வீட்டிற்கு வர, அவரைப் பார்த்த விசாலாட்சி, என்ன இவ்வளவு சீக்கிரம் வந்துவிட்டீங்க என கிண்டலாக கேட்க, கடுப்பான நந்தினி, நான் தான் சீக்கிரம் வர சொன்னேன். கடைசி நேரத்தில் வரசொல்விட்டு, அப்புறம் அவங்க வருவதற்குள் தண்ணீரை ஊத்திடுவீங்க, அதான் சீக்கிரமா வர சொனேன் என்கிறாள். இதையடுத்து என்ன நடந்தது என்று பார்க்கலாம்.

இதையடுத்து, அறிவுக்கரசி, தனது அண்ணன் முல்லையுடன் வீட்டுக்கு வந்து, நந்தினிக்கு தாரா மகள் என்றால், எனக்கும் மகள் தான், எனக்கும் முறை இருக்கிறது. அதற்காகத்தான் சீர் கொண்டு வந்தேன் என்று சொல்கிறாள். இதைக்கேட்டு கடுப்பான நந்தினி, அறிவுக்கரசி கொண்டு வந்த சீர் தட்டை தட்டிவிட்டுவிட்டு, உங்களுக்கு எல்லாம் அறிவுகெட்டுப்போச்சா, என் மகளுக்கு எவனோ ஒருத்தன் சீர் செய்வானா... என் அப்பா வந்து இருக்கிறார். தம்பி வருவான் அவன் வந்து சீர் செய்வான் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறேன். அதை கேட்காமல், எவனோ ஒருத்தனை சீர் கொண்டு வந்து இருக்கான் என்று சொல்லி சத்தம் போடுகிறாள். இதைக்கேட்டு ஆத்திரப்பட்ட கதிர், அவளை அடித்துவிட்டு என்னடி ரொம்ப பேசுற, நான் தான் அறிவுக்கரசியை கூப்பிட்டேன் என்று சொல்கிறான்.

Ethirneechal Thodargiradhu Suntv promo

கடுப்பான நந்தினி: இவர்கள் இருவரும் இப்படி சண்டை போட்டுக்கொண்டு இருக்க, அப்போது குறுக்கே வரும் அறிவுக்கரசி, எனக்கு இந்த சொந்தம் வேண்டும் என்று நினைக்கிறேன். இதனால், தான் கதிர் அழைத்ததும் சீர் செய்ய வீட்டுக்கு வந்தேன். என்னால் உங்க குடும்பத்தில் பிரச்சனை தேவையில்லை. யாருக்கு சீர் செய்ய உரிமை இருக்கிறதோ அவங்க சீர் செய்து கொள்ளட்டும் என்று சொல்கிறாள். அப்போது, நந்தினி... ஏய், அறிவுக்கரசி உன்னுடைய நாடகத்தை எல்லாம் வெளியில வெச்சிக்கோ, இந்த வீட்டுக்கு வந்தீனா, அவ்வளவு தான் என்று சொல்கிறாள். அப்போது பேசும், குணசேகரன், என்ன நந்தினி ஆட்டம் போட்டுக்கிட்டு இருக்க, ஒழுங்கா அமைதியா இருக்க மாட்டீயா, தம்பி பொண்டாட்டினு பாக்குறேன், வீட்டில் நடக்கும் விசேஷத்தை ஒழுங்கா நடத்தவிடு என்று சொல்கிறான். அந்த நேரம் ஜனனி வந்த நந்தினி சமாதானப்படுத்தி அழைத்து செல்கிறாள். அப்போது, ஈஸ்வரி, நீ என்னத்தான் சண்டை போட்டாலும் அவங்க செய்வதைத்தான் செய்வார்கள். இதனால், நம்ம பொண்ணு தாரா தான் மனசு உடைத்து போவாள், இதை நீ புரிஞ்சிக்கோ என்று சொல்கிறாள்.

மனம் மாறிய சக்தி: நந்தினி,ஈஸ்வரி, ஜனனி அனைவரும் பேசிக்கொண்டு இருக்கும் போது சக்தி அங்கு வர, அப்போது, ஈஸ்வரி, க்தியிடம் சென்று, இந்த வீட்டில் இருக்கும் மற்ற ஆண்கள் போல நீ இல்லை. பெண்களுக்கு மரியாதை கொடுக்கக்கூடியவன், ஆனால், இப்போது, நீ உங்க அண்ணன் பக்கத்துல இருக்க, அது ஏன் என்று தெரியவில்லை. இந்த வீட்டில் இப்போ என்ன நடந்துக்கொண்டு இருக்கு என்று உனக்கு தெரியுமா... எல்லாத்தையும் பார்த்து கொண்டு ஏன் சக்தி இப்படி அமைதியா இருக்க. தாரா விருப்பப்படும் படி சடங்கு நடக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறாள். அதுகூட இந்த வீட்டில் நடக்கக்கூடாதா... நந்தினியை கோவப்படுத்த வேண்டும் என்பதற்காகவே கதிர், அறிவுக்கரசியை கூப்பிட்டு இருக்காரு.. இதையெல்லாம் நீ தான் போய் கேட்க வேண்டும் என்று சொல்கிறாள். இதையடுத்து என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X