தப்பி ஓடிய தர்ஷன்.. சுயரூபத்தை காட்டிய குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது!
சென்னை: எதிர்நீச்சல் தொடர்கிறது, நேற்றைய எபிசோடில், இனிமே இந்த வீட்ல இருந்தா, அன்புக்கரசிக்கு கல்யாணம் பண்ணி வச்சிருவாங்க. அதனால், இனிமே இந்த வீட்டில் இருக்க கூடாது ஏதாவது ஒரு பொய்யை சொல்லிட்டு வீட்டை விட்டு வெளியில் போக வேண்டும் என்று திட்டம் போடுகிறான் தர்ஷன். உடனே அப்பாவிடம் காலேஜுக்கு போக வேண்டும் என்று சொல்ல, அது எல்லாம் வேண்டாம் என்கிறார். அந்த நேரம் வீட்டிற்கு வரும் அறிவுக்கரசி இதுவரைக்கும் மாப்பிள்ளை உங்க வீட்ல இருந்ததெல்லாம் போதும் இனிமே மாப்பிள்ளை எங்க வீட்ல இருக்கட்டும், கல்யாணம் முடிகிற வரைக்கும் எங்க வீட்டில் இருப்பது தான் சரி என்று சொல்கிறாள்.
மேலும், தர்ஷனிடம் இருந்த ஃபோனை வாங்கிவிட்டு, இனிமே இதுதான் உங்களுடைய ஃபோன், இதுல புது நம்பர் இருக்கு, நீங்க யாருக்கும் ஃபோன் செய்ய வேண்டும் என்றாலும் இதுல பண்ணுங்க என்கிறாள். இதையடுத்து, அறிவுக்கரசி தர்ஷனை காலேஜுக்கு அழைத்து செல்கிறாள். இதையடுத்து என்ன நடந்தது என்று பார்க்கலாம்.

எதிர்நீச்சல் தொடர்கிறது: நேற்றை எபிசோடில், கல்லூரிக்கு தர்ஷனை அனைத்து வரும் அறிவுக்கரசி, கூடவே அன்புக்கரசியையும் அழைத்து செல்லுங்க என்று சொல்கிறாள். அப்போது, தர்ஷன் ஏன் இப்படி செய்றீங்க, நான் போய்விட்டு உடனே வந்து விடுகிறேன் என்று சொல்கிறான். அதெல்லாம் வேண்டாம், நீ செய்த வேலை எல்லாம் எனக்கு நல்லா தெரியும் ஒழுங்காக இரு, இல்லை என்றால் மாப்பிள்ளை என்று கூட பார்க்க மாட்டேன் என்று சொல்ல, தர்ஷன் வேறு வழியே இல்லாமல், அன்புக்கரசியை அழைத்து செல்கிறான்.
தப்பி ஓடிய தர்ஷன்: அப்போது, தர்ஷன் அன்புக்கரசியிடம் இந்த கல்யாணம் இப்போ வேண்டாம், எனக்கு படிக்க வேண்டும், வேலைக்கு போக வேண்டும் என்கிற ஆசை இருக்கு, நீ தான் உங்க அக்கா கிட்ட சொல்லி இந்த கல்யாணத்தை நிறுத்த வேண்டும் என்று சொல்கிறான். இதைக்கேட்டு கடுப்பான, அறிவுக்கரசி என்னது கல்யாணம் வேண்டாமா, எங்க அக்கா நகை கொடுத்ததை எல்லாம் வாங்கிக் வைத்துக்கொண்டு. இப்போ கல்யாணம் வேண்டாம் என்று சொன்னால் எப்படி என்று அழுது ஆர்ப்பாட்டம் செய்கிறாள். இதுக்கு மேல எதுவும் செய்ய முடியாது என்பதை புரிந்து கொண்ட தர்ஷன், பாத்ரூமில் இருந்து வேறு வழியாக தப்பித்து கல்லூரியை விட்டு ஓடிவிடுகிறான்.
யாரையும் சும்மாவிடமாட்டேன்: இதையடுத்து, இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில், அறிவுக்கரசி பதற்றத்தோடு வந்து, தர்ஷன் காலேஜில் இருந்து சுவர் ஏறி குதித்து தப்பித்து சென்றுவிட்டான் என சொல்கிறாள். இதை கேட்டு ஈஸ்வரி அதிர்ச்சி அடைந்து, என்னது தர்ஷனை காணவில்லை. நீ தான் வேண்டும் என்றே என் மகனை ஏதோ செய்துவிட்டே, எங்கடி என் மகன் என அறிவுக்கரசியை அடிக்க ஈஸ்வரி பாய்கிறாள். அப்போது குறுக்கே வரும் குணசேகரன், என்ன நாடகமாடுறியா... பையனை ஏதோ சொல்லி தப்ப வைத்துவிட்டு, இப்படி நடிக்கிறியா... என ஈஸ்வரியை அடிக்க வருகிறார். இப்போது, ஈஸ்வரி இதுக்கு மேல, நான் சும்மா இருக்க மாட்டேன், என் மகனுக்கு மட்டும் ஏதாவது ஆச்சுனா அவ்வளவு தான் என்கிறாள். அதே நேரம், தர்ஷன் ஒரு ஆட்டோவில் சென்று கொண்டு இருக்கிறார். இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











