பேயாட்டம் ஆடிய அறிவுக்கரசி... தர்ஷனின் உயிர் தப்புமா? எதிர்நீச்சல் தொடர்கிறது!
சென்னை: பதற்றத்தோடு வந்து, தர்ஷன் காலேஜில் இருந்து சுவர் ஏறி குதித்து தப்பித்து சென்றுவிட்டான் என சொல்கிறாள். இதை கேட்டு ஈஸ்வரி அதிர்ச்சி அடைந்து, என்னது தர்ஷனை காணவில்லை. நீ தான் வேண்டும் என்றே என் மகனை ஏதோ செய்துவிட்டே, எங்கடி என் மகன் என அறிவுக்கரசியை அடிக்க ஈஸ்வரி பாய்கிறாள். அப்போது குறுக்கே வரும் குணசேகரன், என்ன நாடகமாடுறியா... பையனை ஏதோ சொல்லி தப்ப வைத்துவிட்டு, இப்படி நடிக்கிறியா... என ஈஸ்வரியை அடிக்க வருகிறார். இப்போது, ஈஸ்வரி இதுக்கு மேல, நான் சும்மா இருக்க மாட்டேன், என் மகனுக்கு மட்டும் ஏதாவது ஆச்சுனா அவ்வளவு தான், என் மகனை தானே தேடி கண்டு பிடிக்கிறேன் என்கிறாள்.
கோவத்தின் உச்சத்திற்கு சென்ற குணசேகரன், ஈஸ்வரியையும், தர்ஷினியையும் அடிக்க பாய்ந்துவிட்டு, எனக்கு என்ன வயசு ஆகிவிட்டது என்று நினைக்கிறீங்களா... ஒரே நிமிஷத்துல உங்க எல்லார் கதையும் முடிந்துவிடுவேன் என்று கத்துகிறார். அப்போது நந்தினி, நீங்களே உங்க மகனை கடத்தி வச்சிட்டு காணவில்லை என்று நாடகமாடுறீங்களா... இப்படித்தான் தர்ஷினியை கடத்தி வச்சிக்கிட்டு நாடகம் ஆடுனீங்க. அதனால் தான் ஜெயிலுக்கு போனீங்கன்றத மறந்துடாதீங்க என்று சொல்கிறாள். இதைக் கேட்டு ஆத்திரப்படும் கதிர், நந்தினியை சரியாக அடித்து உதைக்கிறான். பின் அனைவரும் கதிரை சமாதானப்படுத்துகின்றனர். அப்போது, கோபத்தின் உச்சத்தில் இருக்கும் குணசேகரன், டேய், கதிர், இவளுங்க யாரோ இந்த வீட்டை விட்டு வெளியிலேயே போகக்கூடாது. அண்ணன் பொண்டாட்டி, தம்பி பொண்டாட்டின்னு என்று, நீ யாரையும் பாக்காதே, யாராக இருந்தாலும், வீட்டை விட்டு வெளியில போனா, அவங்களுடைய கால வெட்டு என்று சொல்கிறார். இதைத்தொடர்ந்து, அனைவரையும் கதிர் ஒரு அறையில் பூட்டி வைக்கிறார்.

எதிர்நீச்சல் தொடர்கிறது: இதையடுத்து, இன்றைய எபிசோடு காண ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில், சக்தி ஈஸ்வரிக்கு ஃபோன் செய்து, நீங்க தர்ஷனை நினைச்சு கவலைப்படாதீங்க, நிச்சயமா நான் தர்ஷனுடன் தான் வீட்டுக்கு வருவேன். நீங்க ஏதாவது செய்ய போய் கடைசியில் அது பிரச்சனையாகி விடப்போகிறது. தர்ஷனை வீட்டு அழைத்து வரவேண்டியது என்றுடைய பொறுப்பு என்கிறார். மறு பக்கம், குணசேகரன், தர்ஷனின் போட்டோவை அனைவருக்கும் கொடுத்து, அவன் எங்கே இருந்தாலும், இந்த வீட்டுக்கு தூக்கிக்கிட்டு வா என்கிறான்.
நடக்கப்போவது என்ன?: அறிவுகரசி தன்னுடைய அண்ணன் முல்லைக்கு ஃபோன் செய்து, தர்ஷன் பார்கவியைத் தேடித்தான் போய் இருப்பான். அந்த பார்கவி இருக்கும் கிடைத்து இருக்கு, அவன் எப்போது, என்னை ஏமாற்றி தப்பித்து ஓடுனானோ இதுக்கு மேல, தர்ஷன் நமக்கு தேவையில்லை, அதனால, அவனை எந்த இடத்துல பாக்குறியோ அப்பவே அவன் கதையை முடித்துவிடு என்கிறாள். சக்தி உன் கூட வந்தானான காரியம் சரியாக நடக்காது. இதனால், சரியான நேரம் பார்த்து சக்தியை கழட்டிவிட்டு விட்டு, நீ மட்டும் கிளம்பு என்கிறாள். இப்படி பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் தற்போது தர்ஷன் மற்றும் பார்கவியின் உயிருக்கு பெரிய ஆபத்து வந்துள்ளது. இதை பெண்கள் எப்படி எதிர்கொள்ளப்போகிறார்கள்... தர்ஷனை எப்படி காப்பாற்றப்போகிறால்கள் என்பதை பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











