கையில் துப்பாக்கியை எடுத்த குணசேகரன்.. தர்ஷனின் உயிர் தப்புமா? எதிர்நீச்சல் தொடர்கிறது!
சென்னை: தர்ஷன் தப்பி சென்றுவிட்டதால், கோபத்தின் உச்சத்தில் இருக்கும் குணசேகரன், டேய், கதிர், இந்த வீட்டு பொம்பளைங்கா யாரும், இந்த வீட்டை விட்டு வெளியிலேயே போகக்கூடாது. அண்ணன் பொண்டாட்டி, தம்பி பொண்டாட்டின்னு என்று, நீ யாரையும் பாக்காதே, யாராக இருந்தாலும், வீட்டை விட்டு வெளியில போனா, அவங்களுடைய கால வெட்டு என்று சொல்கிறார். இதைத்தொடர்ந்து, அனைவரையும் கதிர் ஒரு அறையில் பூட்டி வைக்கிறார். இதையடுத்து என்ன நடந்தது என்று பார்க்கலாம்.
தர்ஷன் மீது கோவத்தில் இருக்கும் குணசேகரன், அவன் இந்த ஊரைவிட்டு எங்கேயும் போகக்கூடாது, அவன் காலை உடைத்து என் காலடியில் கொண்டு வந்து போடு, இது என் மான பிரச்சனை என்று அனைவரையும் அனைத்து இடத்திற்கும் அனுப்பி வைக்கிறார். இதைத்தொடர்ந்து, அறிவுக்கரசி, முல்லையிடம் அந்த பார்கவி எங்கே போனால் என்று தெரியுமா என்று விசாரிக்க அவள் வீட்டை காலி செய்துவிட்டு எங்கே போய்விட்டாள், நிச்சயம் அவளை தேடிக்கொண்டு தான் தர்ஷன் போய் இருப்பான் அவனை சும்மாவிடக்கூடாது என்று சொல்கிறாள். இதையடுத்து அனைவரும் தர்ஷனை தேடி செல்கின்றனர்.

எதிர்நீச்சல் தொடர்கிறது: மறு பக்கம், தர்ஷன் செலவுக்கு பணம் இல்லாததால், கழுத்தில் இருந்த செயினை அடமான கடையில் வைத்து பணத்தை எடுத்துக்கொண்டு எங்கே போவது என்று தெரியாமல் கொடைக்கானல் செல்கிறான். அதே போல, வீட்டை காலி செய்துவிட்டு சென்ற பார்கவி, தனது அப்பாவுடன் கொடைக்கானலில் இருக்கிறாள். இதே நேரம், சக்தி ஈஸ்வரிக்கு ஃபோன் செய்து, நீங்க தர்ஷனை நினைச்சு கவலைப்படாதீங்க, நிச்சயமா நான் தர்ஷனுடன் தான் வீட்டுக்கு வருவேன். நீங்க ஏதாவது செய்ய போய் கடைசியில் அது பிரச்சனையாகி விடப்போகிறது. தர்ஷனை வீட்டு அழைத்து வரவேண்டியது என்றுடைய பொறுப்பு என்கிறார். அறிவுகரசிக்கு முல்லை ஃபோன் செய்து, தர்ஷன் பார்கவியைத் தேடித்தான் போய் இருப்பான். தர்ஷனை எப்படியும் தேடி கண்டுபிடித்துவிடலாம். ஆனால், பார்கவி அவளுடைய அப்பா கதையை முடித்துவிட வேண்டும் என்கிறான். சக்தி கூட வந்தா காரியம் சரியாக நடக்காது. இதனால், சரியான நேரம் பார்த்து சக்தியை கழட்டிவிட்டு விட்டு, நான் மட்டும் கிளம்பி பார்கவி கதையை முடிக்கிறேன் என்கிறான்.
மிரட்டிய குணசேகரன்: இதையடுத்து இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகி உள்ளது. அந்த ப்ரோமோவில் குணசேகரன் கையில் துப்பாக்கியை வைத்து இருக்கிறார். இதைப்பார்த்து, அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். அப்போது, விசாலாட்சி, என்னப்பா இதெல்லாம், வேண்டாம்பா எனக்கு ரொம்ப பயமா இருக்கு, கொஞ்சம் அமைதியா இருப்பா என்று சொல்கிறார். உடனே குணசேகரன், இது என் மானபிரச்சனை இதுக்கு மேல நான் அமைதியா இருக்க மாட்டேன், என் கோவம் உச்சத்தில் இருக்கு, இனி குடும்பம் குட்டி எல்லாம் இல்ல. வீட்டைவிட்டு எவளாவது காலை எடுத்து வைத்தால், மொத்தமாக காலி பண்ணிவிடுவேன். தர்ஷன் கல்யாணம் நடந்தே ஆக வேண்டும், அதற்கு யார் குறுக்கே வந்தாலும், அவங்களை பலி கொடுக்க நான் தயாராக இருக்கிறேன் என்று சொல்கிறார். இதைக்கேட்டு மொத்த பெண்களும் என்ன செய்வது என்று தெரியாமல் பயத்தில் இருக்கிறார். இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











