ஈஸ்வரியை துப்பாக்கியால் சுட்ட குணசேகரன்.. உயிர் பயத்தில் மொத்த குடும்பம்.. எதிர்நீச்சல் தொடர்கிறது!
சென்னை: எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் தர்ஷன் காணாமல் போனதைத் தொடர்ந்து, அனைவரும் அவனை தேடிக்கொண்டு இருக்கின்றனர். ஒரு கட்டத்தில் தர்ஷன்,கொடைக்கானலுக்கு செல்கிறார். அதே ஊரில், தான் பார்கவி புதிதாக ஒரு வீட்டில் குடியேறி இருக்கிறார். இந்த விஷயம் தர்ஷனுக்கு தெரியாது. இருந்தாலும் எதர்ச்சியாகவே அந்த ஊருக்கு தர்ஷன் வர, அந்த ஊரில் இருக்கும் கடைக்காரர் தர்ஷனை விசாரித்துவிட்டு, அவருக்கு அடைக்கலம் கொடுக்கிறார். இதை தொடர்ந்து என்ன நடந்தது என்று பார்க்கலாம்.
மறுபக்கம் வீட்டில், தர்ஷன் எங்கே சென்றான் என்று தெரியாமல் கவலைகள் இருக்கும் ஈஸ்வரி, தர்ஷனின் திருமணம் குறித்து ஒரு முடிவு எடுக்க வேண்டிய கட்டாயத்தில் நான் இப்போது இருக்கிறேன். இதனால், நான் குணசேகரிடம், இது பற்றி பேசி ஒரு முடிவு எடுக்க வேண்டும் என சொல்லிவிட்டு, குணசேகரனின் அறைக்கு வருகிறாள். அப்போது பேசிய ஈஸ்வரி, இத்தனை ஆண்டுகளாக நீங்கள் என்ன சொன்னீர்களோ அதையே தான் நான் செய்தேன். ஆனால், தர்ஷன் அப்படி இல்லை' அவன் இப்பொழுது தான் படித்து முடித்து இருக்கிறான். இந்த நேரத்தில் அவனுக்கு திருமணம் செய்து வைப்பது சரியாக இருக்காது. அவர்களுடைய விருப்பத்திற்கும் நாமும் இடம் தர வேண்டும் என்று சொல்கிறாள்.

எதிர்நீச்சல் தொடர்கிறது: இதைக கேட்டு ஆத்திரப்படும் குணசேகரன், இன்றைய காலத்துல இருக்கும் பசங்க ரொம்ப மோசமாக போய்க்கொண்டு இருக்கிறது. காதல், திருமணம் செய்து கொள்ளாமலே வாழ்க்கை என பலரும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். என்னைக்கு பெண்கள் நானும் வேலைக்கு செல்கிறேன் என்று வீட்டை விட்டு வெளியில் போனார்களோ அன்றைக்கே குடும்பம் நாசமாகிவிட்டது. என்னுடைய வீட்டிலும் அதே தான் நடந்தது. இனிமேல், என்னுடைய வீட்டில் அப்படி ஒரு அசிங்கம் நடக்க விடமாட்டேன். தர்ஷன் என்னுடைய மகன் அவனுடைய திருமணத்தை செய்து முடித்து வேண்டியது என்னுடைய பொறுப்பு அவன் எங்க இருந்தாலும் அவனை தூக்கி வந்து இந்த கல்யாணத்தை நடத்துவேன் என்கிறார்.
குணசேகரன் எடுத்த விபரீத முடிவு: இதைக்கேட்டு ஆத்திரப்பட்ட ஈஸ்வரி, நீங்கள் தர்ஷன் விஷயத்தில் தவறான முடிவை எடுத்தால், அதற்காக நான் என்ன செய்ய வேண்டும் என்று எனக்கும் தெரியும் என்று சொல்ல கோபப்பட்ட குணசேகரன், துப்பாக்கியை எடுத்து சுடுகிறார். துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டு பயந்து போன பெண்கள் அனைவரும் அறையின் கதவை திறந்து கொண்டு வந்து பார்க்க குணசேகரன் சுவரில் சுட்டது தெரிகிறது. இதையடுத்து, ஈஸ்வரியை அங்கிருந்து அழைத்துச் சென்று சமாதானப்படுத்துகின்றனர். அப்போது, தாரா பயத்தில் கதறி அழுகிறாள். இதற்கு மேல் தாராவும், தர்ஷினியும் இந்த வீட்டில் இருந்தால் நன்றாக இருக்காது என அனைவரும் சேர்ந்து முடிவு எடுத்துவிட்டு நந்தினியின் தம்பி நெடுஞ்செழியனுக்கு போன் செய்து அவரை வர வைக்கின்றனர்.
அடுத்து என்ன: இன்றைய எபிசோடு காண ப்ரோமோ வெளியாக உள்ளது. அதில், நெடுஞ்செழியன் தாராவை அழைத்து செல்ல வீட்டிற்கு வருகிறார். அவனைப்பார்த்த கதிர், எதற்காக வீட்டிற்கு வந்தே என்று கேட்டு அவரிடம் சண்டை போடுகிறான். அப்போது, நெடுஞ்செழியன், அக்கா தான் வர சொன்னாங்க என்று சொல்ல, இருவருக்குள்ளும் சண்டை வருகிறது. இந்த நேரத்தில் நெடுஞ்செழியன், நீங்க தானே, என்னை கடத்து வைத்துக்கொண்டு தாராவின் சடங்கிற்கு வரவிடாமல் செய்தது என்று சொல்கிறான். இதைக்கேட்டு நந்தினி அதிர்ச்சி அடைகிறாள்.


Click it and Unblock the Notifications











