ஜீவானந்தத்திற்கும் எனக்கும் சம்மந்தம் இல்ல.. சத்தியம் செய்த ஈஸ்வரி.. எதிர்நீச்சல் தொடர்கிறது!

சென்னை: தர்ஷன் காணாமல் போனதுக்கு காரணம் ஈஸ்வரி தான் ஏதோ திட்டம் போட்டு, ஜீவானந்தத்திடம் சொல்லி அவனை ஏதோ ஒரு இடத்தில் ஒளித்து வைத்திருப்பதாக குணசேகரன் நினைக்கிறார். இதனால், சக்தியிடம் விஷயத்தி சொல்லி ஜீவானந்தம் பற்றி ஈஸ்வரியிடம் விசாரிக்க சொல்கிறார். இதுபற்றி ஈஸ்வரியிடம் சக்தி கேட்க, வருத்தப்படும் ஈஸ்வரி, தர்ஷன் காணாமல் போனதற்கும் ஜீவானந்தத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை, தர்ஷன் எங்க போனான் என்று உண்மையில் எனக்கு தெரியவே தெரியாது என கண்கலங்குகிறாள்

கீழே இதை கேட்டுக்கொண்டிருந்த விசாலாட்சி, ஈஸ்வரியிடம் அந்த ஜீவானந்தம் தான் தர்ஷனை கடத்தி வைத்து இருக்கான் என்று எனக்கு நன்றாக தெரியும், ஒழுங்காக உண்மையை சொல்லு என்று கேட்கிறாள். அப்போது ஈஸ்வரி, இவருக்கு இந்த விஷயத்தில் எந்த சம்பந்தமும் இல்லை. நீங்கள் அனைவரும் தேவையில்லை வரம்பு மீறி பேசுகிறீர்கள் என்கிறாள். உடனே, விசாலாட்சி, அந்த ஜீவானந்தத்தை பற்றி பேசியதும், கோவம் வருதா, எவனோ ஒருவனுக்காக குடும்பத்தை விட்டு கொடுத்து பேசுறியா.. ஆறு மாதம் அவன் கூட இருந்த விட்ட குறை, தொட்ட குறையா என்கிறாள். இந்த வார்த்தையை கேட்டு தலைகுனிந்து போன ஈஸ்வரி, இதுக்கு மேல ஒருவார்த்தை தப்பா பேசீனீங்கனா அவ்வளவு தான் என்று சொல்ல, அருகில் இருந்த கதிர், என்ன பண்ணுவா... அழுது ஆர்பாட்டம் பண்ண நீ சொன்னதை நம்பிவிடுவோமா என்று சொல்கிறான்.

Ethirneechal Thodargiradhu Suntv promo
Photo Credit:

எதிர்நீச்சல் தொடர்கிறது: அப்போது, விசாலாட்சி, உன் மகன் தர்ஷன் மீது உனக்கு உண்மையான பாசம் இருந்தால், அந்த மீனாட்சி படத்தின் முன்பு சத்தியம் செய்து சொல், தர்ஷன் காணாமல் போனதற்கும் ஜீவனந்தத்திற்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று சொல்கிறாள். அழுது கொண்டே இருந்த ஈஸ்வரி, மீனாட்சி அம்மன் படத்தின் முன் நின்று, தர்ஷன் காணாமல் போனதற்கும் ஜீவானந்ததிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என சத்தியம் செய்கிறாள். மேலும், இந்த விஷயத்தில் ஜீவானந்தத்தை தயவுசெய்து கஷ்டப்படுத்தாதீங்க, எனக்காக அவர் நிறைய கஷ்டப்பட்டு விட்டார். இனிமேலாவது அவரை நிம்மதியாக இருக்க விடுங்கள் என்று சொல்லி அனைவரிடமும் கையெடுத்து கும்பிடுகிறாள். இதைத்தொடர்ந்து, ஜனனி, நந்தினி என அனைவரும் ஈஸ்வரியை சமாதானப்படுத்தி அழைத்து செல்கின்றனர். விசாலாட்சி பேசிய அசிங்கமான வார்த்தையை தாங்கிக்கொள்ள முடியாத ஈஸ்வரி தொடர்ந்து அழுதுக்கொண்டே இருந்ததால், அவருக்கு நெஞ்சி வந்து மயங்கி விடுகிறாள்.

பயத்தில் பார்கவி: மறுபக்கம், கொடைக்கானலில் பார்கவியின் அப்பா, கடையில் பொருளை வாங்கிவிட்டு வந்து கொண்டு இருக்கும்போது, தூரத்தில் தர்ஷன் இருப்பதை பார்த்து விடுகிறார். இதனால் பதறிப்போன அவர், வேக வேகமாக வீட்டுக்குள் வந்து, வீட்டின் கதவை சாத்திவிட்டு, இரண்டு நாளைக்கு வெளியில் போகக்கூடாது, வீட்டிற்குள்ளே தான் இருக்க வேண்டும் என, கதவு ஜன்னல் என அனைத்தையும் மூடி வைக்கிறார். உடனே, பார்கவி என்ன ஆச்சுப்பா என கேட்க, இப்போதைக்கு எதையும் என்னால் சொல்ல முடியாது, அப்பா உன் நல்லதுக்குத்தான் சொல்வேன் என்கிறார். நம்ம சந்தோஷம் எல்லாம் கேட்டு போகப்போகிறது என பதறுகிறார். இதைப்பார்த்து பார்கவி பயத்தில் இருக்கிறார். இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X