அறிவுக்கரசியிடம் சிக்கும் தர்ஷன்.. பார்கவி நிலை என்னவாகும்.. எதிர்நீச்சல் தொடர்கிறது!

சென்னை: கொடைக்கானலில் பார்கவியின் அப்பா, கடையில் பொருளை வாங்கிவிட்டு வந்து கொண்டு இருக்கும்போது, தூரத்தில் தர்ஷன் இருப்பதை பார்த்து விடுகிறார். இதனால் பதறிப்போன அவர், வேக வேகமாக வீட்டுக்குள் வந்து, வீட்டின் கதவை சாத்திவிட்டு, இரண்டு நாளைக்கு வெளியில் போகக்கூடாது, வீட்டிற்குள்ளே தான் இருக்க வேண்டும் என, கதவு ஜன்னல் என அனைத்தையும் மூடி வைக்கிறார். உடனே, பார்கவி என்ன ஆச்சுப்பா என கேட்க, இப்போதைக்கு எதையும் என்னால் சொல்ல முடியாது, அப்பா உன் நல்லதுக்குத்தான் சொல்வேன் என்கிறார்.

இதையடுத்து, நேற்றைய எபிசோடில், குணசேகரன், பந்தக்கால் நடுவதற்கான ஏற்பாடுகளை செய்கிறான். இந்த விஷயத்தை வீட்டில் இருக்கும் பெண்களிடம் சொல்கிறான். நாளைக்கு பந்தக்கால் நடப்போகிறோம். வீட்டிற்கு சொந்தக்காரர்கள் வருவார்கள் அவரிகளை கவனித்து கொள்ள வேண்டும் என்று சொல்கிறார். அப்போது, நந்தினி, தர்ஷன் கிடைத்து விட்டானா என்று கேட்க, அவன் வீட்டில் இருந்தாலும் இல்லை என்றாலும் பந்தக்கால் நட்டு, இன்னும் பத்து நாளில் கல்யாணம் நடக்கும் என்கிறார். இதையடுத்து, பந்தக்கால் நடுவதற்காக வீட்டிற்கு வரும் சொந்தங்கள் தர்ஷன் எங்கே என்று கேட்க, கதிர் கோவப்படுகிறான். பின், குணசேகரன் தர்ஷன் வீட்டில் இல்லை என்று சொல்ல, பந்தக்கால் நடப்படுகிறது.

Ethirneechal Thodargiradhu Suntv promo
Photo Credit:

எதிர்நீச்சல் தொடர்கிறது: மறுபக்கம், அறிவுக்கரசி மற்றும் முல்லை இருவரும் காரில் தர்ஷனை தேடி சென்று கொண்டு இருக்க, அப்போது, முல்லைக்கு சுரேஷ் என்பவரிடம் இருந்த போன் வருகிறது. அதில், பார்கவியையும் அவரது அப்பாவும் கொடைக்கானிலில் விட்டதாக சொல்கிறான். இதைக்கேட்ட அறிவுக்கரசி, கொடைக்கானலில் ஒவ்வொரு வீடாக சென்று ஆட்களை விட்டு தேடுங்கள், பார்கவியும் அவளுடைய அப்பாவும் கிடைத்தால், அந்த இடத்தியே கதையை முடித்துவிடுங்கள் என்று சொல்கிறாள்.அப்போது, முல்லை எந்த நல்ல விஷயத்தை செய்வதற்கு முன் பலி கொடுப்பது தான் மரபு, இந்த கல்யாணத்தையும் பலி கொடுத்து ஆரம்பிக்கலாம் என்கிறான். அதே நேரம், தர்ஷன் அறையில் தண்ணீர் இல்லாததால், அவன் பார்கவி இருக்கும் வீட்டிற்கு வந்து கதவை தட்டுகிறான். கதவை யார் தட்டுகிறார்கள் என்கிற பயத்தில் இருக்கும் பார்கவியின் அப்பா, கதவை திறக்கமல் இருக்க, கதவை தட்டிதட்டிப் பார்த்த தர்ஷன் திரும்பி சென்றுவிடுகிறான். ஆனால், தர்ஷனைப் பார்த்த பார்கவியின் அப்பா பதற்றபடுகிறார்.

சிக்கிய தர்ஷன்: இதையடுத்து, இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில், சில ரௌடிகள் பார்கவி இருக்கும் வீட்டின் கதவை கட்டி, பார்கவியினை போட்டோவை காட்டி இந்த பெண்ணை நீங்கள் எங்கையாவது பார்த்து இருக்கீர்களா என்று கேட்கின்றனர். இதைப்பார்த்து பயந்துபோன பார்கவியின் அப்பா இல்லை என்று சொல்லி அனுப்பி விடுகிறார். இதைத்தொடர்ந்து வீட்டிற்குள் வரும் அப்பா, பார்கவியிடம் உன்னை மலை போல நம்பினேன் மீண்டும் என்னை ஏமாற்றி விட்ட, அந்த பையன் அடுத்த வீட்டில் தங்க வைத்து இருக்க, அப்போ ரௌடிகள் உன் போட்டோவை காட்டி தேடுகிறார்கள், இதுக்கு மேல் நான் என்ன செய்வது, நீ தானே தர்ஷனை இங்கே வரவெச்ச என்று கோவத்தில் கத்துகிறார். அதே ரௌடிகள் தர்ஷனிடம் சென்று விசாரிக்கின்றனர். பின் அந்த போட்டோவை அறிவுக்கரசிக்கு அனுப்பி இவன் தான் நீங்க தேடும் பையனா என்று போட்டோவை அனுப்ப, அறிவுக்கரசி கொடைக்கானலுக்கு செல்கிறார். இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X