மாஸ் என்ட்ரி கொடுத்த ஜீவானந்தம்.. சூடு பிடிக்கும் எதிர்நீச்சல் தொடர்கிறது!

சென்னை: மறுபக்கம், அறிவுக்கரசி மற்றும் முல்லை இருவரும் காரில் தர்ஷனை தேடி சென்று கொண்டு இருக்க, அப்போது, முல்லைக்கு சுரேஷ் என்பவரிடம் இருந்த ஃபோன் வருகிறது. அதில், பார்கவியையும் அவரது அப்பாவும் கொடைக்கானிலில் விட்டதாக சொல்கிறான். இதைக்கேட்ட அறிவுக்கரசி, கொடைக்கானலில் ஒவ்வொரு வீடாக சென்று ஆட்களை விட்டு தேடுங்கள், பார்கவியும் அவளுடைய அப்பாவும் கிடைத்தால், அந்த இடத்தியே கதையை முடித்துவிடுங்கள் என்று சொல்கிறாள். இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

சக்தி மற்றும் கரிகாலனும் என்ன செய்வது என்று தெரியாமல் நின்று கொண்டு இருக்க, அப்போது, கரிகாலன் எனக்கு, வீட்டில் இருக்கும் பெண்கள் தான், தர்ஷனை ஜீவனந்தத்தின் துணையுடன் மறைத்து வைத்து இருப்பார்களோ என்று தோன்றுகிறது என்று சொல்கிறான். அப்போது சக்தி, ஈஸ்வரி அண்ணி அப்படி செய்து இருக்க வாய்ப்பு இல்லை என்று சொல்கிறான். உடனே, கரிகாலன், இருந்தாலும் கொடைக்கானலில் இருக்கும் உனது நண்பனுக்கு ஃபோன் செய்து விஷயத்தை சொல்லி தேட சொல் என்று சொல்கிறான்.

Ethirneechal Thodargiradhu Suntv promo
Photo Credit:

எதிர்நீச்சல் தொடர்கிறது: இதைக்கேட்ட சக்தியும் கொடைக்கானலில் இருக்கும் தினேஷ் என்ற நண்பனுக்கு தர்ஷன் காணாமல் போன விஷயத்தை சொல்லி போட்டோவை வாட்ஸ் அப்பில் அனுப்பி வைக்கிறான். அப்போது சக்திக்கு, ஃபோன் செய்யும் ஜனனி, தர்ஷன் கிடைத்து விட்டானா.. வீட்டில் உங்கள் அண்ணன் பந்தக்கால் நடுவதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டு இருக்கிறார். இன்னும் பத்து நாளில் கல்யாணம் என்று சொல்கிறார். எங்களுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை என்கிறாள். உடனே சக்தி, இதைப் பற்றி யாரும் வருத்தப்பட வேண்டாம் எல்லாம் சரியாகிவிடும் என்கிறான்.

பார்கவிக்கு என்ன ஆகும்: மறுபக்கம் கொடைக்கானலில் பார்கவியின் அப்பா ஜன்னலில் இருந்து பார்க்க, அப்போது தர்ஷன் வெளியில் நின்று கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறான். உடனே பார்கவியிடம் நீதான், அவனை வர வைச்சியா, நேற்று அவனை பார்த்துத்தான் நான் பயந்து வீட்டை விட்டே வெளியில் வரக்கூடாது என்று சொன்னேன். ஆனால், பக்கத்து வீட்டிலேயே அவன் இருக்கிறான், உன்னை எவ்வளவு நம்புனேன் என்னை ஏமாற்றிவிட்டியா என்று அழுகிறார். அந்த நேரம், பார்த்து ரவுடிகள் வீட்டில் கதவை தட்ட பயந்து போன, பார்கவியின் அப்பா, மகளை ஒரு அறையில் மறைத்து வைத்து கதவை திறக்கிறார். அங்கு வந்த ரவுடிகள், பார்கவியின் போட்டோவை காண்பித்து இந்த பெண்ணை தெரியுமா என்று கேட்க, அவர் எனக்கு தெரியாது என்று சொல்லிவிட்டு உள்ளே சென்று விடுகிறார். இதையடுத்து, பார்கவியின் அப்பா, ரௌடிகள் உன்னை தேடி இங்கே வந்துவிட்டார்கள், இனிமேல் நம்மை வாழ விட மாட்டார்கள் என்று புலம்புகிறார்.

வசமாக சிக்கிய தர்ஷன்: பின் ரவுடிகள் தர்ஷன் இருக்கும் வீட்டிற்கு சென்று தர்ஷனிடமே பார்கவியின் போட்டோவை காண்பித்து, இந்த பெண் தெரியுமா என்று கேட்க போட்டோவை பார்க்காத தர்ஷன் எனக்கு யாரையும் தெரியாது, தயவு செய்து போங்க என்று சொல்ல, ரௌடி ஒருவன் தர்ஷனை போட்டோ எடுத்து கொள்கிறான். அந்த போட்டோவை அறிவுக்கரசிக்கு அனுப்ப, அவளுக்கு தர்ஷன் இருக்கும் இடம் தெரிந்து விடுகிறது.

ஜீவானந்தம் மாஸ் என்ட்ரி: இதைத்தொடர்ந்து, இன்றைய எபிசோடு காணப்படும் ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில், காருக்குள் பார்கவி மற்றும் அவரின் தந்தை மறைந்து இருக்க ரவுடிகள் அந்த காரை திறக்க வருகின்றனர். அப்போது, டேய் என்று ஒரு குரல் வர, ரவுடிகள் பயந்து ஒடுவிடுகின்றனர். அப்போது, ஜீவானந்தம் காரை திறந்து பார்க்க, அதில் பார்கவி, அவளின் தந்தை ஒளிந்து கொண்டு இருக்கின்றனர். அப்போது பார்கவி, ரௌடிகள் எங்களை துரத்துகிறார்கள் தயவு செய்து எங்களை மதுரையில் இறக்கி விடுங்கள் என்கிறாள். இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X