அருவாளை கையில் எடுத்த நந்தினி.. பேரதிர்ச்சியில் குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது!
சென்னை: அறிவுக்கரசி சீர் கொண்டு வந்ததால், ஆத்திரப்பட்ட நந்தினி சீர் வரிசை தட்டை தட்டிவிட்டு, தகராறு செய்கிறாள். இதையடுத்து, பிரச்சனையானதை அடுத்து ஜனனி அவளை சமாதானப்படுத்தி அழைத்து செல்கிறாள். இதையடுத்து, நந்தினி,ஈஸ்வரி, ஜனனி அனைவரும் பேசிக்கொண்டு இருக்கின்றனர். அப்போது, ஈஸ்வரி, சக்தியிடம் சென்று, இந்த வீட்டில் இருக்கும் மற்ற ஆண்கள் போல நீ இல்லை. பெண்களுக்கு மரியாதை கொடுக்கக்கூடியவன், ஆனால், இப்போது, நீ உங்க அண்ணன் பக்கத்துல இருக்க, அது ஏன் என்று தெரியவில்லை. இந்த வீட்டில் இப்போ என்ன நடந்துக்கொண்டு இருக்கு என்று உனக்கு தெரியுமா... எல்லாத்தையும் பார்த்து கொண்டு ஏன் சக்தி இப்படி அமைதியா இருக்க. தாரா விருப்பப்படும் படி சடங்கு நடக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறாள். எங்க விருப்பப்படி நடக்கவில்லை என்றாலும், தாரா விருப்பப்படி சடங்கு நடக்க வேண்டும் சக்தி, நீ தான் உங்க அண்ணன் கிட்ட பேச வேண்டும் என்று சொல்ல, சக்தி நான் போய் பேசுகிறேன் என்கிறான். இதையடுத்து என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்.
இதையடுத்து சக்தி, கீழே வந்து குணசேகரிடம், அண்ணா, அண்ணி தாரா விருப்பப்படி சடங்கு நடக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். அவர்கள் விருப்பப்படியே நடக்கட்டுமே என்று சொல்கிறான். உடனே குணசேகரன், சக்தி அவங்க பேச்சை கேட்டுக்கொண்டு என் சம்மந்தியை நீ அவமானப்படுத்துவது சரி இல்லை என்று சொல்கிறான்.உடனே சக்தி, அப்படி இல்லை அண்ணா, அவர்களுக்கு அறிவுக்கரசி தண்ணீர் ஊற்றுவதில் விருப்பம் இல்லை என்று சொல்கிறான். இதைக்கேட்ட அறிவுக்கரசி, நான் உரிமையோடு தான் இந்த வீட்டிற்கு வந்தேன். ஆனால், என்னால் இந்த வீட்டில் சண்டை வருகிறது என்றால், நான் வீட்டை விட்டு போகிறேன் என்று சொல்லிவிட்டு வெளியில் கிளம்புகிறாள். அப்போது, அறிவுக்கரசியை தடுத்த குணசேகரன், நான் தான் இந்த வீட்டுக்க உன்னை அழைத்தேன். நான் சொல்லாமல் இந்த வீட்டை விட்டு நீ போகக்கூடாது என்று சொல்கிறார். பின், சக்தியிடம், தாரா சடங்கில் அறிவுக்கரசியால் எந்த பிரச்சனையும் வராது, அவங்க அம்மா விருப்படியே விசேஷம் நடக்கட்டும் என்று சொல்கிறார்.

எதிர்நீச்சல் சீரியல்: இதையடுத்து, தாராவின் சடங்குக்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டு இருக்க, வீட்டைவிட்டு வெளியே வரும், கதிர் ரௌடிகளுக்கு போன் போட்டு, சடங்கு செய்ய வரும், தாராவின் தாய் மாமன் நெடுஞ்செழியனை பற்றி சொல்லி அவனை விசேஷத்திற்கு சீர் செய்ய வராதபடி வேலைகளை செய்கிறார். அந்த நேரம் நந்தினி, தம்பி நெடுஞ்செழியனுக்கு ஃபோன் போட்டு பேசுகிறாள், அப்போது தம்பி, அக்கா உன் குரலை கேட்டு எத்தனை ஆள் ஆச்சி என்று சொல்லிவிட்டு, அக்கா தாரா சடங்குக்கு தேவையான அனைத்தையும் வாங்கிவிட்டேன், அரைமணி நேரத்தில் வீட்டில் இருப்பேன் என்று சொல்விட்டு ஃபோனை வைக்கிறான். அப்போது, கதிர் ஏற்பாடு செய்த அடி ஆள் நீ தானே நெடுஞ்செழியன் கேட்டதோடு எபிசோடு முடிகிறது.
அருவாளை எடுத்த நந்தினி: இதையடுத்து, இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகி உள்ளது. அந்த ப்ரோமோவில் கதிர், அறிவுக்கரசியை முறை செய்ய வரும்படி அழைக்க, அப்போது, ஆத்திரத்தோடு இருக்கும் நந்தினி அருவாளை எடுத்துக்கொண்டு, இன்னும் ஒரு அடி எடுத்து வெச்ச அவ்வளவு தான், நாலு தலையாவது உருலும் என்று ஆத்திரத்தோடு கத்துகிறாள். மேலும், கதிர், தாராவை பிடித்து இழுக்க, நந்தினி கதிரிடம் கையெடுத்து கும்பிட்டு கதறி அழுகிறாள் இதையடுத்து என்ன ஆனது என்று அடுத்த செய்தியில் பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











