பார்கவியின் உயிர் தப்புமா? அடுத்து நடக்கப்போவது என்ன? எதிர்நீச்சல் தொடர்கிறது!

சென்னை: கொடைக்கானலில் தர்ஷன் இருக்கும் வீட்டிற்கு சென்று தர்ஷனிடமே பார்கவியின் போட்டோவை காண்பித்து, இந்த பெண்ணை தெரியுமா என்று கேட்க போட்டோவை பார்க்காத தர்ஷன் எனக்கு யாரையும் தெரியாது, தயவு செய்து போங்க என்று சொல்ல, ரௌடி ஒருவன் தர்ஷனை போட்டோ எடுத்து கொள்கிறான். அந்த போட்டோவை அறிவுக்கரசிக்கு அனுப்ப, அவளுக்கு தர்ஷன் இருக்கும் இடம் தெரிந்து விடுகிறது.

நேற்றைய எபிசோடில், அறிவுக்கரசி, இவன் தான் நாம தேடிக்கொண்டு இருக்கும் பையன் இவன் கால், கைடிய உடைச்சி இங்கே தூக்கிட்டு வாங்க என்று சொல்ல, ரௌடிகள் அவன் இருக்கும் இடத்திற்கு செல்ல, தர்ஷன் இவர்கள் வருவதை பார்த்து தப்பித்து சென்று விடுகிறான். அப்போது, ஒருவன் தர்ஷனை விடுடா, அந்த பெண்ணு பார்கவி கதையைத்தான் நாம முடிக்க வேண்டும் என்று சொல்லிவிட்டு பார்கவியை தேடி செல்ல, அவர்கள் வீட்டில் இருந்து தப்பித்து சென்று விடுகின்றனர்.

Ethirneechal Thodargiradhu Suntv promo
Photo Credit:

எதிர்நீச்சல் தொடர்கிறது: அடி ஆட்கள் இவர்களை தேடி வர, அங்கு இருக்கும் காருக்குள் பார்கவி மற்றும் அவரின் தந்தை மறைந்து இருக்க ரவுடிகள் அந்த காரை திறக்க வருகின்றனர். அப்போது, டேய் என்று ஒரு குரல் வர, ரவுடிகள் பயந்து ஒடுவிடுகின்றனர். அப்போது, ஜீவானந்தம் காரை திறந்து பார்க்க, அதில் பார்கவி, தந்தையுடன் ஒளிந்து கொண்டு இருக்கிறாள். அப்போது பார்கவி, ரௌடிகள் எங்களை துரத்துகிறார்கள் தயவு செய்து எங்களை வேறு எங்காவது இறக்கி விடுங்கள் என்கிறாள். இதைத்தொடர்ந்து ஜீவானந்தம் காரை வேகமாக ஓட்டி சென்று ஒரு இடத்தில் அவர்களை இறக்கிவிடுகிறார். என்ன பிரச்சனை என்று கேட்க, உயிரை காப்பாற்றியதற்கு நன்றி தயவு செய்து, என்ன பிரச்சனை என்று கேட்காதீர்கள், எங்களை அவர்கள் கொல்லாமல் விட மாட்டார்கள், நானும் என் மகளும் சாக வேண்டியது தான் என்று கதறி அழுகிறார் பார்கவியின் அப்பா.

அறிவுக்கரசியின் பிளான்: மறுபக்கம் பந்தக்கால் நடும் விழா, சிறப்பாக நடந்து கொண்டு இருக்க, அப்போது, குணசேகரன், அந்த வீட்டில் இருக்கும் பெண்களை அழைத்து பூஜை செய்ய சொல்கிறார். அப்போது, அறிவுக்கரசி, மாமா இன்னைக்கு ரொம்ப நல்ல நாள், நல்ல நேரத்தில் தான் பந்தக்கால் நடும் விழா நடந்து இருக்கு, இன்னைக்க தர்ஷன் வீட்டுக்கு வந்துவிடுவான், அவனுக்கு யார் உதவி செய்தது, அவன் யார் கூட இருக்கான் என்கிற எல்லா விஷயமும் எனக்கு தெரியும், நான் வரும் போது தர்ஷன் கூடத்தான் வருவேன். என்கூட கதிர் மாமாவை அனுப்பி வையுங்கள் என்கிறார். இதை கேட்டுக்கொண்டிருந்த பெண்கள் அனைவரும், என்ன நடக்கிறது என்று தெரியாமல் குழப்பத்தில் இருக்கின்றனர். இதைத்தொடர்ந்து ஜனனி சக்திக்கு போன் செய்து. அறிவுக்கரசி, தர்ஷன் இருக்கும் இடம் தெரிந்துவிட்டது என்று சொல்கிறாள். என்ன நடக்கிறது சக்தி என்று கேட்க, சக்தி எனக்கு எதுவும் தெரியவில்லை என்கிறான்.

நடக்கப்போவது என்ன: இதையடுத்து, இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில், ஜீவனந்தம் காரில் பார்கவி, அவரின் அப்பா இருக்கின்றனர். அப்போது, தர்ஷன் ரௌடிகள் துரத்திக்கொண்டு வந்ததால், ஓடி வந்து, ஜீவானந்தத்தின் காரில் விழ, ஜீவானந்தம், என்ன தர்ஷன் ஆச்சு என்று விசாரிக்கிறார். இதையடுத்து, காரின் பின் இருக்கையில் அமர்ந்து இருந்த பார்கவியின் அப்பா, இவனால் தான் எல்லா பிரச்சனையும் என தர்ஷனை கழுத்தை பிடித்து கொல்லப்பார்க்கிறார். இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X