வீட்டையே ஆட்டி வைத்த நந்தினி.. தாராவின் சடங்கு நடக்குமா? எதிர்நீச்சல் தொடர்கிறது!
சென்னை: நந்தினி விருப்பப்படி தாராவின் சடங்கு நடக்கட்டும் என்று குணசேகரன் பொடி வைத்து சொல்லியதை புரிந்து கொண்ட, கதிர் ரௌடிகளுக்கு ஃபோன் போட்டு, சடங்கு செய்ய வரும், தாராவின் தாய் மாமன் நெடுஞ்செழியனை பற்றி சொல்லி அவனை கடத்தி விடுகிறான். இதையடுத்து என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்.
கடத்தப்பட்ட நெடுஞ்செழியன் நீங்க ஆளை மாற்றி கடத்தி வந்து விட்டீர்கள், நான் எந்த வம்புக்கும் பிரச்சனைக்கும் போகாதவன் என்று சொல்கிறான். அப்போது, ரௌடிகள், உன் பெயர் தானே நெடுஞ்செழியன், குணசேகரன் வீட்டில் தானே, உன் சித்தப்பாவின் மகளை கல்யாணம் பண்ணி கொடுத்து இருக்கிறீர்கள் என்று கேட்க, ஆமாம் என்கிறான் நெடுஞ்செழியன். அப்போ சரியான ஆளைத்தான் தூக்கிட்டு வந்து இருக்கிறோம். பிரச்சனை செய்யாமல் அமைதியாக இருந்தால், ஒழுங்க வீடு போய் சேரலாம், இல்லை என்றால், இங்கேயே கதை முடிந்துவிடும் என்று சொல்லி, ரௌடிகள் நெடுஞ்செழியனை மிரட்டுகின்றனர்.
எதிர்நீச்சர் தொடர்கிறது: மறுபக்கம் விசாலாட்சி, நந்தினியிடம் இன்னும் உன்னுடைய தம்பி வரவில்லையா... எவ்வளவு நேரம் காத்துக் கொண்டு இருக்கிறது என்று கேட்கிறாள். இதையடுத்து நந்தினி தனது அப்பாவிடம் நெடுஞ்செழியன் எங்கே இருக்கிறான், அவனுக்கு ஃபோன் போடுங்கள் என்கிறாள். நந்தினி அப்பா, நெடுஞ்செழியனுக்கு பலமுறை ஃபோன் போட்டும் அவன் போனை எடுக்காததால், நந்தினியின் அப்பா, அம்மா இருவரும் பதற்றப்படுகின்றனர்.
என்னால் அவமானப்பட முடியாது: இதைத்தொடர்ந்து விசாலாட்சி, கதிரிடம் நந்தினி செய்த பிரச்சனையால் பெரியவன் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கிறான். அவன் இல்லாமல் இந்த வீட்டில் நல்ல விஷயம் நடக்கக்கூடாது. அவனை சமாதானப்படுத்தி அழைத்து வாங்க என்று சொல்ல, மூன்று தம்பிகளும், அண்ணனை சமாதானப்படுத்துவதற்காக செல்கின்றனர். அப்போது, குணசேகரன், நான் எங்கேயும் வரவில்லை, ஒவ்வொரு முறையும், நான் அவமானப்பட முடியாது. என்னை அவமானப்படுத்துவதாக நினைத்துக்கொண்டு உன் பொண்டாட்டி என் சம்மந்தியை அவமானப்படுத்துவது சரியில்லை. தாராவிற்கு அவளுடைய அம்மா விருப்பப்படியே சடங்கு செய்து கொள்ளட்டும் நான் இங்கேயே இருக்கிறேன் என்கிறார்.
அப்போது கதிர், நீங்கள் எப்படி விருப்பப்பட்டீர்களோ... அதுபோலத்தான் சடங்கு நடக்கும், நெடுஞ்செழியன் வருவதற்கு வாய்ப்பே இல்லை. அவன் வராதபடி என்ன செய்ய வேண்டுமோ அதை நான் செய்து விட்டேன்' நீங்கள் வந்தால் தான், சடங்கு நடக்கும் என்று சொல்கிறான். அப்போது, குணசேகரன், நான் பரோலில் வந்ததில் இருந்து யாருக்கும் எந்த பிரச்சனையும் கொடுத்ததில்லை. நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான், ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்கிறேன்.

சமாதானமான குணசேகரன்: ஆனால், உங்களுடைய மனைவி மார்களுக்கு என்னை கண்டாலே பிடிக்கவில்லை. என்னை அவமானப்படுத்துவதற்காக தயாராக இருக்கிறார்கள். மீண்டும் மீண்டும் நான் அவமானப்பட தயாராக இல்லை. உன்னுடைய மகளுக்கு உன் மனைவியின் விருப்பப்படியே சடங்கு செய்து கொள் என்று சொல்கிறார். இதைக்கேட்டு பதறிப்போனா கதிர், தாரா நந்தினிக்கு மட்டும் மகள் இல்லை, எனக்கு மகள் தான் அவளுக்கு சடங்கு செய்வதில் எனக்கும் பங்கு இருக்கிறது. இந்த வீட்டில் நடக்கும் விசேஷத்திற்கு நீங்கள் இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்காது என கெஞ்சி கேட்கிறான். இதையடுத்து குணசேகரன் சடங்கில் கலந்து கொள்வதற்காக கீழே இறங்கி வருகிறார்.
கதறி அழுத நந்தினி: இதையடுத்து இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில், விசாலாட்சி வீட்டு இருக்கும் பொம்பளை அருவாளை எடுத்து மிரட்டுறா, இதையெல்லாம் நல்லதுக்கு இல்ல கதிர் என்கிறாள். மறுபக்கம், நந்தினி தனது மகள் தாராவை பிடித்துக் கொண்டு உனக்கு எந்தவித பிரச்சனையும் வரக்கூடாது என்பதற்காகத்தான் ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்கிறேன். ஆனால், மேலும் உனக்கு பிரச்சனையே வந்து கொண்டு இருக்கிறது. அம்மா இருக்கும் வரை உன்னுடைய ஆசை படி தான் எல்லாமும் நடக்கும் என்று கட்டிப்பிடித்து அழுகிறாள் இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











