மனைவி என்றும் பார்க்காமல் கதிர் செய்த வேலை.. கதறி அழுத நந்தினி.. எதிர்நீச்சல் தொடர்கிறது!
சென்னை: கதிர், தனது அண்ணனிடம் நீங்கள் எப்படி விருப்பப்பட்டீர்களோ... அதுபோலத்தான் சடங்கு நடக்கும், நெடுஞ்செழியன் வருவதற்கு வாய்ப்பே இல்லை. அவன் வராதபடி என்ன செய்ய வேண்டுமோ அதை நான் செய்து விட்டேன்' நீங்கள் வந்தால் தான், சடங்கு நடக்கும், தாரா, நந்தினிக்கு மட்டும் மகள் இல்லை, எனக்கும் மகள் தான் என்று குணசேகரனை சமாதானப்படுத்தி அழைத்து வருகிறான். இதையடுத்து என்ன ஆனாது என்பதை பார்க்கலாம்.
நந்தினியின் அப்பா, நெடுஞ்செழியனுக்கு ஃபோன் செய்து செய்து பார்த்துக்கொண்ட இருக்கிறார். அப்போது கதிர், அவன் இனிமேல் வர மாட்டான் முல்லை, நீ வா.. நீ வந்து முறை செய் என்று சொல்கிறான். இதனால், ஆத்திரமடையும் நந்தினி. என் மகளுக்கு, எவனோ வந்து முறை செய்வானா, நான் விட மாட்டேன். ஏய்.... முல்லை கிட்டவந்தீனா அவ்வளவு தான் என்று கத்துகிறாள். இதையடுத்து, ஆத்திரத்தில் அருவாளை எடுத்துக்கொண்டு யாராவது கிட்ட வந்தீங்க என்றால், நாலு தலை உருளும், நீங்க வெட்டுனாத்தான் அருவாள் வெட்டுமா நான் வெட்டுனாலும் வெட்டும் என்று சொல்லி, நந்தினி ரகளை செய்கிறாள். இதைப்பார்த்த கதிர், என்னடி... நீ ஓவரா போய்விட்டு இருக்க என்று நந்தினியை அடிக்கிறான்.

கதறி அழுத தாரா: அப்போது, ஈஸ்வரி மற்றும் ஜனனி, நந்தினியை அங்கிருந்து அழைத்து சென்று சமாதானப்படுத்துகின்றனர். என்ன நந்தினி, நீயும் அவங்களைப் போல அருவாளை எடுத்து சண்டை போட்டால் என்ன அர்த்தம். அவங்களும் நாமும் ஒன்றாக ஆகிவிடுவோம். தாராவிற்கு சடங்கு செய்வதைத்தான் அவர்கள் பெருமையாக நினைத்து கொண்டு இருக்கிறார்கள், அவர்கள் விருப்பப்படியே சடங்கு செய்து கொள்ளட்டும். ஒரு நல்ல அம்மாவா நாம தாராவிற்கு தைரியத்தை சொல்லி கொடுக்க வேண்டும். நீ அருவாளை எடுத்தா, தாராவும் நாளைக்கு பிரச்சனை என்று வந்தால், அருவாளை எடுப்பா, இந்த மாதிரியான ஒரு பழக்கத்தை நாம நம்மளுடைய குழந்தைகளுக்கு கற்றுத்தரக்கூடாது நந்தினி. நீ முதல்ல தாராவை சமாதானம் படுத்து, அவ பயந்து போய் அழுதுகிட்டே இருக்கா என்று ஈஸ்வரி நந்தினியை சமாதானப்படுத்தி அனுப்புகிறாள். அழுது கொண்டிருக்கும் தாராவை சமாதானப்படுத்திய நந்தினி, அம்மா உனக்காக எல்லா விஷயத்திலும் கூட இருப்பேன், நீ எதை நினைத்தும் கவலைப்படாதே, அம்மா இருப்பதே உனக்காகத்தான். நீ நன்றாக படித்து உன் ஆசைப்படி வாழு, நீ என்ன செய்தாலும், அதில், நியாயம் இருந்தால் அம்மா உன் கூட இருப்பேன் என்று சமாதானப்படுத்துகிறாள்.
உடைந்துபோன நந்தினி: இதையடுத்து இன்றைய எபிசோடு காண ப்ரோமோ வெளியாகி உள்ளது. கடத்தி வைக்கப்பட்டிருக்கும் நெடுஞ்செழியன் ரவுடிகளிடம் ஃபோனை கேட்கிறான். அப்போது ரவுடி பேசாமல் இருந்தால், பிரச்சனை முடிந்ததும் வீட்டுக்கு போகலாம். இப்படி பேசிக் கொண்டே இருந்தால், உன் கதை முடிந்து விடும் என்று மிரட்டுகிறான். மறுபக்கம், வீட்டில் நெடுஞ்செழியனுக்காக அனைவரும் காத்துக் கொண்டு இருக்கின்றனர், அப்போது நந்தினியின் அப்பா, நெடுஞ்செழியன் வருகிறேன் என்று சொல்லி நம்ப வைத்து கழுத்தை அறுத்து விட்டான் இனிமேல், அவன் வர வாய்ப்பே இல்லை என்று சொல்ல நந்தினி கதறி அழுகிறாள். உடனே, விசாலாட்சி, என்னடி நந்தினி, தம்பி வருவான், சீர் செய்வான் என்று வானத்திற்கும் பூமிக்கும் குதிச்ச, இப்போ உன் தம்பி வரலையாமே, இதுக்குத்தான் ஓவரா ஆட்டம் போடக்கூடாது, பாத்தியா ஆண்டவன் உன்னை தலையில் அடிச்சி உங்கார வைத்துவிட்டான் என்று கிண்டலா பேசுகிறாள். நந்தினியோ என்ன செய்வது என்று தெரியாமல், இடித்துப்போய் இருக்கிறாள். டேய்... கதிர், இருக்குமேல யாருக்காகவும் நம்ம காத்துக் கொண்டு இருக்க வேண்டிய அவசியம் இல்ல தண்ணி ஊத்துற வேலையை பார்க்கலாம் என்று சொல்லிவிட்டு, அறிவுக்கரசி வாடி நீ வந்து முறைசெய் என்கிறாள். இதயடுத்து என்ன நடந்தது என்று பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











