தாரா சடங்கிலும் மண்ணை கவ்விய குணசேகரன்.. அசிங்கப்பட்டுப்போன அறிவுக்கரசி.. எதிர்நீச்சல் தொடர்கிறது!

சென்னை: தாரா சடங்கு வந்துவிடக்கூடாது என, நந்தினியின் தம்பி நெடுஞ்செழியனை கதிர் ஆள் வைத்து கடத்தி வைத்து இருக்கிறார். கடத்தி வைக்கப்பட்டிருக்கும் நெடுஞ்செழியன் ரவுடிகளிடம் ஃபோனை கேட்கிறான். அப்போது ரவுடி பேசாமல் இருந்தால், பிரச்சனை முடிந்ததும் வீட்டுக்கு போகலாம். இப்படி பேசிக் கொண்டே இருந்தால், உன் கதை முடிந்து விடும் என்று மிரட்டுகிறான். ஆனால், யாருக்கும் தெரியாமல் நெடுஞ்செழியன், ரௌடி ஒருவரின் ஃபோனை பார்க்க, அதில் கதிர் நம்பர் இருப்பதை பார்த்துவிடுகிறான். பிறகு தான் இது எல்லாம் கதிரின் வேலை என்பது தெரியவருகிறது.

மறுபக்கம், வீட்டில் நெடுஞ்செழியனுக்காக அனைவரும் காத்துக் கொண்டு இருக்கின்றனர், அப்போது நந்தினியின் அப்பா, நெடுஞ்செழியன் வருகிறேன் என்று சொல்லி நம்ப வைத்து கழுத்தை அறுத்து விட்டான் இனிமேல், அவன் வர வாய்ப்பே இல்லை என்று சொல்ல நந்தினி கதறி அழுகிறாள். உடனே, விசாலாட்சி, டேய்... கதிர், இருக்குமேல யாருக்காகவும் நம்ம காத்துக் கொண்டு இருக்க வேண்டிய அவசியம் இல்ல தண்ணி ஊத்துற வேலையை பார்க்கலாம் என்கிறாள். இதையடுத்து என்ன நடந்தது என்று பார்க்கலாம்.

Ethirneechal Thodargiradhu Suntv promo
Photo Credit:

எதிர்நீச்சல் தொடர்கிறது: இதையடுத்து, நேற்றை எபிசோடில், சடங்கு செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்ட நிலையில், முதல் ஆளாக விசாலாட்சி தாராவிற்கு நலங்கு வைத்துவிட்டு தண்ணீர் ஊற்றுகிறார். இரண்டாவதாக அறிவுக்கரசியை தண்ணீர் ஊற்றும் படி அழைக்க, நந்தினியின் அப்பா கோபப்பட்டு, அவங்க எப்படி முறை செய்யலாம். தாத்தா பாட்டி நாங்க இருக்கிறோம், எங்களுக்குத் தான் முதல் உரிமை உண்டு என்று சத்தம் போடுகிறார். அப்போது, விசாலாட்சி, உங்களுடைய லட்சணத்தை தான் நான் பார்த்தேனே தம்பி வாரான்.. தம்பி வரான்னு சொல்லிட்டு கடைசியில வரவே இல்ல, முறை செய்ய வக்கில்லாதவன் எதுக்கு வரேணு சொல்லணும். நீங்க ஒன்னும் முறை செஞ்சு கிழிக்க தேவையில்லை. இனிமேல் அறிவுகரசிதான் தண்ணி ஊத்துவா என்று சொல்கிறாள். பின் அறிவுக்கரசி திமிராக வந்து தண்ணீர் ஊற்றும் நேரத்தில், நெடுஞ்செழியன் பைக்கில் வருகிறான்.

மண்ணை கவ்விய குணசேகரன்: அவனைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்த, நந்தினி என்னடா ஆச்சு எங்க போன என்று கேட்க, என்னை ஒரு சிலர் பிடித்து வைத்துக் கொண்டார்கள். அதனால் தாமதம் ஆகிவிட்டது. அதைப்பற்றி இப்போது பேச வேண்டாம், நாம் அடுத்ததாக நடக்கும் சடங்கு வேலையை பார்க்கலாம் என்று சொல்லி, தாராவிற்கு நலங்கு வைத்து முறை செய்கிறான் நெடுஞ்செழியன். தாரா இனிமேல் எதுவேண்டும் என்றாலும், மாமா இருக்கேன், மாமா என்ன கேட்டாலும் வாங்கித் தருவேன் என்று சொல்கிறான். இதையடுத்து, ஒவ்வொருவராக நலங்குவைத்து முறை செய்கின்றனர். பின் நந்தியின் அப்பா, ஆதி குணசேகரனிடம் தாராவை வாழ்த்துங்கள் என அழைக்க, அவர் அவமானத்தால் தலைகுனிந்து கொண்டு உள்ளே சென்றுவிடுகிறார். பின் கதிரை அழைக்க, அவன் நான் வரமாட்டேன் என்று சொல்கிறான். அப்போது, தாரா அப்பா வாங்கப்பா ப்ளீஸ் என்று அழைத்ததும், மறக்க முடியாமல் கதிர், தாராவிற்கு நலங்கு வைத்து தண்ணீர் ஊற்றுகிறார். இதைப்பார்த்து கொண்டு இருந்த அறிவுக்கரசி கோவத்தில் வீட்டை விட்டு போகிறாள். குணசேகரன் என்ன திட்டம் போட்டாலும், வீட்டில் இருக்கும் பெண்கள் அவரை மண்ணை கவ்வ வைத்து விடுகின்றனர். இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X