கூத்தடித்து மாட்டிக்கொண்ட மருமகள்கள்..வன்மத்துடன் காத்திருக்கும் குணசேகரன்..எதிர்நீச்சல் தொடர்கிறது!
சென்னை: தாராயின் சடங்கிற்கு வீட்டிற்கு வரும் தோழிகள் வெளியில் போய் சாப்பிடலாம் என்று சொல்கிறார்கள். நாங்கள் அனைவரும் ஓட்டலுக்கு போய் சாப்பிட்டு வருகிறோம் என்று சொல்லிவிட்டு அனைவரும் கிளம்புகின்றனர். அப்போது, நந்தினி, தனது மகள் தாரா ஆசைப்பட்டது படி, ஒரு பார்ட்டி ஹாலை புக் செய்து அதில், பாட்டு, டான்சுக்கு ஏற்பாடு செய்து இருக்கிறாள். இதைப்பார்த்து தாரா மிகுந்த மகிழ்ச்சி அடைகிறாள். வீட்டில் இவ்வளவு பிரச்சனை இருக்கும் போது, சாப்பிட போறாங்களா என்று ஆத்திரப்படும் கதிர், அவளை வெட்டி கூருப்போட்டாத்தான் நான் ஆம்பளை, அவளுக்கு என்ன திமிரு, என்ன பேச்சு. அந்த திமிரை நான் அடக்குகிறேன் என்று கிளம்புகிறான். அவனை சக்தி, தடுத்து நீ, இப்படி செய்வதில், நியாயமே இல்லை. தாராவுக்கு பிடித்தபடி தான் அண்ணி செய்திருக்காங்க. இதில் கோபப்பட ஒன்றுமே இல்லை என்று சொல்ல என்று சொல்லி சமாதானப்படுத்துகிறான். இதையடுத்து, நேற்று என்ன நடந்தது என்று பார்க்கலாம்.
பார்ட்டி ஹாலில் அனைவரும் ஜாலியாக பேசிக்கொண்டு இருக்கின்றனர். அப்போது, ஈஸ்வரி இன்றைய காலத்து குழந்தைகள் மிகவும் மெச்சூரிட்டியாக இருக்கிறார்கள். அவர்களுக்கு என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பது நன்றாகவே தெரிகிறது. ஆனால், அவர்களுக்கு ஒரே ஒரு விஷயம் மட்டும் தெரியவில்லை. மற்றவர்களிடம் எவ்வாறு அனுசரித்து போவது, எவ்வாறு விட்டுக் கொடுப்பது என்பது மட்டும் தெரியவில்லை. இந்த விஷயத்தில் மட்டும் அனைவரும் கவனமாக இருந்து கொண்டால் நன்றாக இருக்கும் என இப்படி, பல விஷயம் பற்றி அனைவரும் ஜாலியாக பேசிக் கொண்டு இருக்க, தாரா மேடையில் தனது தோழிகளுடன் நடனம் ஆடிக்கொண்டு இருக்கிறாள்.

எதிர்நீச்சல் சீரியல்: மறுபக்கம் வீட்டில் விசாலாட்சி, அவளுங்க இந்த வீட்டை விட்டு போனதுக்கு அப்புறம் தான் வீடு அமைதியாவே இருக்கு என்கிறாள். அப்போது, ஜான்சி ராணி, குணசேகர் அண்ணன் காலையில் இருந்து சாப்பிடவே இல்ல, ரூம்குள்ளேயே கவலையோட இருக்கிறார் என்று சொல்ல விசாலாட்சி குணசேகரனை அழைக்கிறார். குணசேகர் கீழே வர, கதிர், ஞானம், சக்தி அனைவரும் வந்து விடுகின்றனர். அப்போது, விசாலாட்சி, இந்த வீட்டில் நம்ப மட்டும் இருந்தோம் அப்போ எவ்வளவு சந்தோஷமா இருந்தது. வீட்டுக்கு வாரிசு வேண்டும் என்று, கல்யாணம் பண்ணி வெச்சா, இவளுங்க குடும்பத்தை கெடுத்துவிடுகிறாள் என்று கோவத்துடன் பேசிக்கொண்டு இருக்கிறார்.
தறி கெட்ட பெண்கள்: அந்த நேரம் பார்த்து தர்ஷன், லேப் டாப்பில் இருந்து ஏதோ சத்தம் வர, அதை கரிகாலன் திறந்து பார்க்க அதில், தாரா பார்ட்டி ஹாலின் லைவ் லிங்க் வந்திருக்கிறது. அதை ஓபன் செய்து பார்க்க தாரா. அதில் டான்ஸ் ஆடி கொண்டு இருக்கிறாள். இதைப்பார்த்து, மேலும் ஆத்திரமடைந்த விசாலாட்சி, வயசுக்கு வந்த பிள்ளைய கூட்டிட்டு போய், இப்படி கூத்து அடிக்கிறார்கள் என்று கோபமாக பேசிக் கொண்டிருக்கிறது. இதைப்பார்த்து விட்ட தர்ஷன் கீழே வந்து, என்னுடைய லேப்டாப்பை ஏன் எடுத்தீர்கள் என்று கேட்கிறான். உடனே குணசேகரன், நம்ம வீட்டு பொம்பளைங்க எல்லாம் தறி கெட்டவளுங்க இல்லனு அடிக்கடி சொல்லிக்கிட்டே இருப்பாளுங்க, கொஞ்சம் அமைதியா இரு பார்ட்டில என்ன செய்றாங்கன்னு பார்க்கலாம் என்று சொல்கிறார். அவர், சொன்னதுக்கு போலவே மருமகள்கள் அனைவரும் பார்ட்டி ஹாலில் டான்ஸ் ஆடுகின்றனர். அதை வீட்டில் இருக்கும் அனைவரும் பார்த்துவிட்டு உச்சகட்ட கோபத்தில் இருக்கின்றனர்.
இதை அடுத்து இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில், அப்பத்தா பார்ட்டி ஹாலில் என்ட்ரி கொடுக்கிறார். வீட்டில் இருக்கும் அனைவரும் படிக்காதவர்கள். ஆனால், நீங்கள், படித்த பெண்கள் தானே அவர்களிடம் சரிக்கு சரி சமம் சண்டை போடுவது சரியில்லை என்று சொல்கிறார். மறுபக்கம், தர்ஷன் ஈஸ்வரிக்கு ஃபோன் செய்து, பார்ட்டி ஹாலில் நீங்கள் டான்ஸ் ஆடியதை வீட்டில் இருக்கும் அனைவரும் பார்த்து விட்டார்கள் என்று சொல்கிறான். இதையடுத்து என்ன நடந்தது என்று பார்க்கலாம்


Click it and Unblock the Notifications











