முகத்தில் சாணி அடிச்சிட்டாங்க.. கதிரிடம் குமுறி அழுத குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது!
சென்னை: அறிவுக்கரசி தாராவிற்கு நலங்கு வைக்கும் கடைசி நேரத்தில் நெடுஞ்செழியன் வந்துவிடுகிறான். அவனைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்த, நந்தினி என்னடா ஆச்சு, ஃபோனை ஏன் எடுக்கவில்லை என்று கேட்க, என்னை ஒரு சிலர் பிடித்து வைத்துக் கொண்டார்கள். அதான் லேட் ஆகிவிட்டது. அதைப்பற்றி இப்போது பேச வேண்டாம், நாம் அடுத்ததாக நடக்கும் சடங்கு வேலையை பார்க்கலாம் என்று சொல்லி, தாராவிற்கு நலங்கு வைத்து முறை செய்கிறான் நெடுஞ்செழியன். இதையடுத்து, ஒவ்வொருவராக நலங்குவைத்து முறை செய்கின்றனர். பின் நந்தினியின் அப்பா, ஆதி குணசேகரனிடம் தாராவை வாழ்த்துங்கள் என அழைக்க, அவர் அவமானத்தால் தலைகுனிந்து கொண்டு உள்ளே சென்றுவிடுகிறார். இதைப்பார்த்து கொண்டு இருந்த அறிவுக்கரசி கோவத்தில் வீட்டை விட்டு போகிறாள். இதையடுத்து என்ன நடந்தது என்று பார்க்கலாம்.
நேற்றைய எபிசோடில், நலங்கு வைக்கும் நிகழ்ச்சி நடக்கிறது, இதில் விசாலாட்சி விருப்பமே இல்லாமல் இருக்கிறார். அப்போது, நந்தினி, விசாலாட்சியிடம் வந்து, தாரா விருப்பப்படி இந்த சடங்கு நடக்க வேண்டும் என்பதற்காகத்தான் நான் அப்படி நடந்து கொண்டேன், மற்றபடி உங்களை அவமானப்படுத்த வேண்டும் என்கிற எண்ணம் இல்லை, நீங்க வந்து என் மகளை வாழ்த்தினால் தான், என் மகள் நன்றாக இருப்பாள் என்று கேட்க, விசாலாட்சி, தாராவிற்கு நலங்கு வைத்து அவளை வாழ்த்துகிறாள். இதையடுத்து, குணசேகரன் முரண்டு பிடித்துக்கொண்டு இருக்கிறார். அவரிடம் வரும், நந்தினி, மாமா நான், கிண்டலாக பேசுவேன். ஆனால், உங்க மேல என்னைக்கும் மரியாதை இருக்கு உங்களை, காயப்படுத்தும் எண்ணம் இல்லை, தயவு செய்து, நீ என் மகளுக்கு நலங்கு வைத்து வாழ்த்துக்கள் என்று சொல்லிவிட்டு, காலில் விழுகிறாள். உடனே நந்தினியை தடுத்த குணசேகரன், தாராவை ஆசிர்வாதம் செய்துவிட்டு, மேலே சென்றுவிடுகிறாள். பின் அனைவரும் ஒவ்வொருவராக நலங்கு வைக்கின்றனர்.

எதிர்நீச்சல் தொடர்கிறது: இதையடுத்து, கதிர், அண்ணனின் அறைக்கு வந்து, அவரின் காலில் விழுந்து என்னை மன்னித்து விடுங்க, நான் அந்த நெடுஞ்செழியனை, ஆட்களை வைத்து பிடித்து வைத்து இருந்தேன். ஆனால், அவன் எப்படி வந்தான் என்றே தெரியவில்லை. இப்படி நடக்கும் என்று நான் நினைக்கவில்லை என்று, குணசேகரிடம் கதிர் அழுதுகொண்டு இருக்கிறான். உடனே குணசேகர், நீ எதுக்குப்பா அழுற, அதான் எல்லாம் சேர்ந்து முகத்தில் சாணி அடித்து விட்டார்களே... இன்னும் என்ன எனக்கு அவமானம் நடக்க வேண்டி இருக்கு,ஞானம் , சக்தி மாதிரி நீ இல்ல, எப்போதும் என் பக்கம் நிக்கிறவன் நீ, அதனால் தான், உன் மகளுக்கு செய்ய வேண்டியதை செய்துவிட்டேன்.
இந்த வீட்டில் இருக்கும் பொம்பளைங்க எல்லாரும் திட்டம் போட்டு, எல்லாத்தையும் சாதிக்கிறாள்கள். இத்தனை நாள் உன் பொண்டாட்டியிடம் கிண்டல் இருந்தது. ஆனால், இப்போ அவ ஏதோ ஒரு விஷயத்தை மனதில் வைத்துக்கொண்டு எல்லாத்தையும் செய்கிறாள். இந்த விஷயத்தில் நான் அவமானப்பட்டதை விட, அறிவுக்கரசி அசிங்கப்பட்டு, தலைகுனிந்து போனாள், இனிமேல் அவள் முகத்தில் நான் எப்படி முழிப்பேன் என்று தெரியவில்லை. எனக்கு ஒரே விஷயத்தில் தான் உன் மேல வருத்தம், எந்த விஷயம் செய்தாலும், அதை சரியாக செய்யணும் இல்லை என்றால், இப்படித்தான் அவமானப்பட்டு நின்ற வேண்டும் என்று குணசேகரன் கதிரிடம் கண் கலங்கி பேசுகிறார். இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











