நந்தினிக்கு வீட்டில் காத்திருக்கும் அதிர்ச்சி.. நடக்கப்போவது என்ன? எதிர்நீச்சல் தொடர்கிறது!
சென்னை: நந்தினி நினைத்தது போல, தாராவிற்கு நெடுஞ்செழியன் சீர் செய்து முறை செய்து விடுகிறார். இதனால், ஆத்திரம் அடைந்த குணசேகரன் தனது அறைக்கு சென்று விடுகிறார். இதையடுத்து, கதிர், அண்ணனின் அறைக்கு வந்து, அவரின் காலில் விழுந்து என்னை மன்னித்து விடுங்க, நான் அந்த நெடுஞ்செழியனை, ஆட்களை வைத்து பிடித்து வைத்து இருந்தேன். ஆனால், அவன் எப்படி வந்தான் என்றே தெரியவில்லை. இப்படி நடக்கும் என்று நான் நினைக்கவில்லை என்று, குணசேகரிடம் காலை பிடித்துக்கொண்ட கதிர் அழுகிறார்.
கதிரை சமாதானப்படுத்தும், குணசேகர், நீ எதுக்குப்பா அழுற, அதான் அனைவரும் சேர்ந்து முகத்தில் சாணி அடித்து விட்டார்களே... இன்னும் எனக்கு அவமானம் நடக்க வேண்டி இருக்கு, ஞானம் , சக்தி மாதிரி நீ இல்ல, எப்போதும் என் பக்கம் நிக்கிறவன் நீ, அதனால் தான், உன் மகளுக்கு செய்ய வேண்டியதை அனைத்தையும் செய்தேன். இந்த வீட்டில் இருக்கும் பொம்பளைங்க எல்லாரும் திட்டம் போட்டு, எல்லாத்தையும் சாதிக்கிறாள்கள். இத்தனை நாள் உன் பொண்டாட்டி கிண்டல் மட்டும் செய்தார்ல, ஆனால், இப்போ அவ ஏதோ ஒரு விஷயத்தை மனதில் வைத்துக்கொண்டு எல்லாத்தையும் செய்கிறாள். இந்த விஷயத்தில் நான் அவமானப்பட்டதை விட, அறிவுக்கரசி அசிங்கப்பட்டு, தலைகுனிந்து போனாள், இனிமேல் அவள் முகத்தில் நான் எப்படி முழிப்பேன் என்று கண் கலங்குகிறார். இதையடுத்து என்ன நடந்தது என்று பார்க்கலாம்.


எதிர்நீச்சல் சீரியல்: இதையடுத்து, நேற்றைய எபிசோடில், நந்தினி தோழிகள் வீட்டுக்கு வருகின்றனர். இதைப்பார்த்து மகிழ்ச்சி அடையும் தாரா, நான் உங்களை கூப்பிடவே இல்லை என்று சொல்ல, அம்மா தான் ஃபோன் செய்து, சடங்குக்கு வர சொன்னார்கள் என்று சொல்கின்றனர். இதையடுத்து, அனைவரும், கேக் வெட்டவேண்டும் என்று சொல்ல, அப்போது, கதிர் வராமல் இருக்கிறான். அவனிடம் செல்லும் நந்தினி, இதற்கு மேலும்., ஏன் இப்படி இருக்கிறீர்கள், தாரா கூட படிக்கும் பசங்க கேக் வெட்ட வந்து இருக்கிறார்கள், நீங்க வந்து நின்றால் தான் நன்றாக இருக்கும் என்று சொல்கிறாள். மறுக்க முடியாத கதிர் வந்து, கேக் வெட்டி, தாராவிற்கு கேக் ஊட்டி விடுகிறார். பின், நந்தினி, தாராவின் தோழிகள் வெளியில் போய் சாப்பிடலாம் என்று சொல்கிறார்கள். நாங்கள் அனைவரும் ஓட்டலுக்கு போய் சாப்பிட்டு வருகிறோம் என்று சொல்லிவிட்டு அனைவரும் கிளம்புகின்றனர். அப்போது, நந்தினி, தனது மகள் தாரா ஆசைப்பட்டது படி, ஒரு பார்ட்டி ஹாலை புக் செய்து அதில், பாட்டு, டான்சுக்கு ஏற்பாடு செய்து இருக்கிறாள். இதைப்பார்த்து தாரா மிகுந்த மகிழ்ச்சி அடைகிறாள்.
தப்புக்கு மேல தப்பு செய்ற கதிர்: மறுபக்கம், கதிருக்கு பார்ட்டி ஹால் புக் செய்த விஷயம் தெரிந்து விடுகிறது. இதனால் ஆத்திரப்படும் கதிர், அவளை வெட்டி கூருப்போட்டாத்தான் நான் ஆம்பளை, அவளுக்கு என்ன திமிரு, என்ன பேச்சு. அந்த திமிரை நான் அடக்குகிறேன் என்று கிளம்புகிறான். அவனை சக்தி, தடுத்து நீ, இப்படி செய்வதில், நியாயமே இல்லை. தாராவுக்கு பிடித்தபடி தான் அண்ணி செய்திருக்காக. இதில் கோபப்பட ஒன்றுமே இல்லை என்று சொல்ல அப்போது கோவப்படும் கதிர், உனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை. இதனால் அண்ணன் தான் அவமானப்பட்டு இருக்கிறார். அவரை நான் எப்படி சமாதானப்படுத்துவேன். நெடுஞ்செழியன் வரக்கூடாது என்பதற்காக நான் என்ன எல்லாம் வேலை செய்தேன். அப்படியும் அவன் வந்து விட்டான் என்று உண்மையை போட்டு உடைக்க ஞானம், சக்தி இருவரும் அதிர்ச்சியடைந்து அவன் வரக்கூடாது நீ தான் கடத்துனியா. நீ தப்புக்கு மேல தப்பு பண்ணிக்கிட்டு இருக்க என்று சக்தி, கதிரை எச்சரிக்கிறான். அப்போது, கதிர், நான் ஒன்னும் பொம்பளை இல்லை, இப்போவே அவளுங்களை உண்டு இல்லை என்று ஆக்குகிறேன் என்று வெளியில் கிளம்புகிறான். இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்றுபார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











