ஜனனியை பின் தொடர்ந்து வரும் தேவசகாயம்.. நடக்கப் போகும் அசம்பாவிதம் என்ன? எதிர்நீச்சல் தொடர்கிறது!

சென்னை: வீட்டில் எப்போதும் ஏதாவது ஒரு பிரச்சனை நடந்து கொண்டே இருப்பதால், கர்ப்பமாக இருக்கும் ஜனனிக்கு நல்ல சூழ்நிலையை ஏற்படுத்தி தர வேண்டும் என்பதற்காக சக்தி அவளை கொடைக்கானலுக்கு அழைத்து செல்கிறார். இருவரும் காரில் ஜாலியாக பேசிக்கொண்டு செல்கின்றனர். ஒரு இடத்தில், சக்தி காரை நிறுத்திவிட்டு சிறிது தூரம் நடந்து சென்று டவர் கிடைக்குமா என பார்க்கிறார். அப்போது ஜனனி, காரிலேயே படுத்து தூங்குகிறார்.

அந்த நேரம் பார்த்து கிட்னி கடத்தல் மன்னன் தேவசகாயம் அந்த இடத்துக்கு வருகிறார். அவர் ஜனனியின் காரை தாண்டி இருக்கும் கடைக்கு செல்கிறார். போகும் போது ஜனனியை அவர் பார்க்கவில்லை. ஆனால், வரும் போது ஜனனியை பார்த்துவிடுகிறார். ஆனால், ஜனனி தூங்கிக் கொண்டிருந்ததால், அவள் தேவசகாயத்தை பார்க்கவில்லை. இப்போது, ஜனனி தன்னை பார்த்துவிட்டால் மீண்டும் பிரச்சனை வந்துவிடும் என நினைத்து அங்கிருந்து சென்றுவிடுகிறார்.

Ethirneechal Thodargiradhu Suntv promo
Photo Credit:

எதிர்நீச்சல் தொடர்கிறது: மறுபக்கம் வீட்டில், குணசேகரன் சொத்துக்களை தனது தம்பிகளான கதிர், ஞானத்தின் பேரில் எழுதி கொடுத்துவிடுவதால், அதன் கணக்கு வழக்கை இருவரும் பார்க்கின்றனர். ஆனால், எதுவுமே புரியாததால், ரேணுகா, நந்தினி இருவரும் கணக்கை எப்படி பார்க்க வேண்டும் என சொல்லி கொடுக்கின்றனர். அப்போது, விசாலாட்சி, உங்களுக்கு மட்டும் எப்படி இந்த கணக்கு வழக்கு தெரியுது என்று கேட்கிறார். அப்போது நந்தினி, அத்தை நான் பிடெக், ரேணுகா அக்கா பிகாம் படிச்சி இருக்கும் என்பதை மறந்துவிட்டீங்களா, நீங்க மட்டும் இல்ல நாங்களும் என்ன படிச்சோம் என்பதை மறந்துவிட்டோம் என்கிறாள்.

தேவசகாயம்: கொடைக்கானலுக்கு வரும் சக்தி, ஜனனி இருவரும் இயற்கை அழகை ரசித்து பார்த்துவிட்டு காட்டேஜ்க்குள் வருகின்றனர். காட்டேஜை பார்த்த ஜனனி,ரொம்ப நல்ல இருக்கு சக்தி என்கிறாள். அப்போது சக்தி, இனிமேல் என் குழந்தை பிறக்கும் வரை இனி எல்லாமே உனக்கு சர்ப்ரைஸ் ஆக இருக்கும் என சொல்கிறார். அதேநேரம், அந்த காட்டேஜில் டவர் இருக்காது, உங்களுக்கு ஏதாவது எமர்ஜென்சி என்றால் கீழே ஒரு காட்டேஜ் இருக்கிறது. அங்கு சென்று நீங்கள் போனில் பேசிக்கொள்ளலாம் என சொல்கிறார். கீழே இருக்கும் காட்டேஜில் தேவசகாயம் இருப்பது தெரியவருகிறது. இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X