கர்ப்பமாக இருக்கும் ஜனனி.. கொடைக்கானலில் வர போகும் ஆபத்து.. எதிர்நீச்சல் தொடர்கிறது!
சென்னை: கொடைக்கானலுக்கு வரும் சக்தி, ஜனனி இருவரும் இயற்கையிக்ன அழகை ரசித்து பார்த்துவிட்டு காட்டேஜ்க்குள் வருகின்றனர். காட்டேஜை பார்த்த ஜனனி,ரொம்ப நல்ல இருக்கு சக்தி, இப்படி இதெல்லம் செய்தே என்று கேட்க, சக்தி, இனிமேல் என் குழந்தை பிறக்கும் வரை இனி எல்லாமே உனக்கு சர்ப்ரைஸ் ஆக தான் இருக்கும் என சொல்கிறார். அதேநேரம், அந்த காட்டேஜில் டவர் இருக்காது, உங்களுக்கு ஏதாவது எமர்ஜென்சி என்றால் கீழே ஒரு காட்டேஜ் இருக்கிறது. அங்கு சென்று நீங்கள் போனில் பேசிக்கொள்ளலாம் என சொல்கிறார். கீழே இருக்கும் காட்டேஜில் தேவசகாயம் இருப்பது தெரியவருகிறது.
இதையடுத்து, தேவசகாயத்தில் அங்கு இருப்பவர், மேலே இருக்கும் காட்டேஜுக்கு கணவன் மனைவி வந்து இருக்கிறார்கள் சார். அங்கு டவர் கிடைக்காது என்பதால், இங்கு வந்து போன் செய்து கொள்வார்கள் என சொல்கிறார். இதைக்கேட்டு தேவசகாயத்திற்கு, ஒருவேலை அது ஜனனியாக இருக்கமோ என்கிற சந்தேகம் வருகிறது. இதையடுத்து, யாருக்கும் தெரியாமேல், அங்கு யார் இருக்கிறார்கள் என்பதை நோட்டமிடும் தேவசகாயம் மறைந்திருந்து பார்க்கிறார். அப்போது, சக்தி, ஜனனி இருவரும் சுற்றி பார்ப்பதற்காக வெளியில் கிளப்புகின்றனர்.

எதிர்நீச்சல் தொடர்கிறது: வெளியே வரும் ஜனனி, மலை மற்றும் அங்கு இருக்கும் பூக்களை பார்த்துக்கொண்டு இருக்க, பின்னால் தேவசகாயம் பார்க்கிறார். ஒரு கட்டத்தில் இருவரும் காரில் ஏறி செல்ல, தூரத்தில் இருக்கும் தேவசகாயம் ஜனனியை பார்த்து விடுகிறான். பார்த்ததும் ஆத்திரப்படும் தேவசகாயம், அங்க சுத்தி, இங்க சுத்தி கடைசியில் கொடைக்கானலில் வசமா மாட்டிக்கிட்டியே ஜனனி. என்னையை அடிச்சிட்டா ஓடி போற, இந்த இடத்தில் உன்னை நான் என்ன செய்கிறேன் பார் என மனசுக்குள் சந்தோஷப்படுகிறார். இதனால், கொடைக்கானலில் ஜனனிக்கு ஏதோ பெரிய ஆபத்து வரப்போகிறது என்பது தெரிகிறது. ஆனால், சக்தி உடன் இருப்பதால், அந்த ஆபத்தை தடுத்துவிடுவாரா.. இல்லையா.. என்பதை நாம் பொருத்து இருந்து தான் பார்க்க வேண்டும். அமைதியாக இருக்கலாம் என கொடைக்கானல் சென்றதே ஜனனிக்கு பெரிய ஆப்பாக அமைந்துவிட்டது. இனி அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











