சைலண்ட் கில்லர் குணசேகரின்.. ஜனனியை கருவை கலைக்க திட்டமா? எதிர்நீச்சல் தொடர்கிறது!
சென்னை: சக்தி, ஜனனி ரெண்டு பேரும் கொடைக்கானலில் ஜாலியா சுற்றி பார்த்துவிட்டு இருக்க, அவங்களுக்கு தெரியாமல், ஒரு பெரிய ஆபத்து அவங்களை பின்தொடர்ந்துட்டு வருகிறது. அதாவது தேவ சகாயம் ஜனனியை எப்படியாவது கடத்த வேண்டும் என்கிற திட்டத்தோடு அவங்களை ஃபாலோ செய்து வருகிறார்.
எதிர்நீச்சல் தொடர்கிறது: ஜனனி, சக்தி வீட்ல இல்லாத இந்த நேரத்துல கதிர், ஞானம் ரெண்டு பேருமே தங்களுடைய மனைவி கிட்ட ரொம்ப அன்பா, பாசமா நடந்து கொள்கிறார்கள். இதெல்லாம் பார்த்த நந்தினி, ரேணுகா ரெண்டு பேருமே இதுக்கு பின்னாடி குணசேகரனின் திட்டம் இருக்கு அதுக்காக தான் ரெண்டு பேருமே இப்படி அமைதியா நடந்து கொள்கிறார்கள். இது உண்மையான மாற்றமே கிடையாது என ரேணுகா தீர்க்கமா சொல்கிறாள். ஆனா, நந்தினி இல்ல என்னுடைய கணவரோட பேச்சில பல வித்தியாசங்கள் தெரிஞ்சது என்கிறார்.

குணசேகரின் பிளான்: இதையடுத்து, கதிர், ஞானம் ரெண்டு பேரும் நாளைக்கு வீட்டில ஒரு பூஜை நடக்க போகுது. அந்த பூஜையில் நாம எல்லாரும் கலந்து கொள்ள வேண்டும் என்கிறார். அந்த பூஜையில் கலந்து கொண்டால் அனைவருக்கும் நல்லது நடக்கும் என்கிறார். இதைக்கேட்ட ரேணுகா, வீட்டில் சக்தி, ஜனனி இல்லாத போது, எதுக்காக இந்த பூஜையை இவ்வளவு அவசரமாக செய்ய வேண்டும் என கேட்கிறார். ஆனால், இந்த பூஜையை உடனே செய்து ஆக வேண்டும் என சொல்கிறான் கதிர். அவங்க ரெண்டு பேரும் நல்லா இருக்க வேண்டாமா... அவங்க வந்த பிறகுதான் பூஜையை செய்யலாம் என விசாலாட்சியும் தீர்க்கமாக சொல்கிறாள்.
வாரிசு இருக்கவே கூடாது: ஆனா கதிர், அண்ணன் தான் இந்த பூஜையை செய்ய சொன்னார். அவர் சொன்னபடியே நாம செய்துவிடுவோம். சக்தியை வரசொன்னா கண்டிப்பா ஜனனிய கூட்டிட்டு வரமாட்டான். அதனால், அவங்க ரெண்டு பேரும் இல்லாமலே இந்த பூஜையை பண்ணலாம் என்கிறார். அதே நேரத்துல, அறிவுக்கரசியும், ஜனனி இல்லாமல் தான் இந்த பூஜை நாம நடத்த வேண்டும். அப்போது தான் அவள் காலியாவாள், அவ வயித்துல வளரும் வாரிசும் காலியாகும் என்கிறாள். இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











