ஃபயர் மூடில் சக்தி, ஜனனி.. 10 மணிக்கு மேல.. சின்னபசங்க பாக்காதீங்க.. எதிர்நீச்சல் தொடர்கிறது!
சென்னை: கதிர்,ஞானம் இருவரும் வீட்டில் பூஜை நடத்த வேண்டும் என பிடிவாதமாக இருக்கின்றனர். அண்ணா சொன்னபடியே நாம பூஜை செய்துவிடுவோம் என சொல்கின்றனர். இதையடுத்து, சக்தியை வரசொன்னா கண்டிப்பா ஜனனிய கூட்டிட்டு வரமாட்டான். அதனால், அவங்க ரெண்டு பேரும் இல்லாமலே இந்த பூஜையை பண்ணலாம் என்கிறார். ஆனால், விசாலாட்சி நான் சக்தியை வர சொல்கிறேன். நாம் அனைவரும் சேர்ந்து பூஜை செய்யலாம் என சொல்ல கதிர் ஆத்திரப்படுகிறான்.
இதையடுத்து, கதிர், குணசேகரிடம் வந்து, இந்த பூஜையை ஜனனியினை ஒழிக்கத்தான். ஆனால், அம்மா ஜனனி வரவேண்டும் என சொல்கிறார்கள் என்ன செய்வது என்று கேட்க, குணசேகரன், இந்த அம்மாவிடம் நான் கெஞ்சியும் பார்த்துவிட்டேன், நம்ம வழிக்கு வரல, இதுக்கு மேல நாம என்ன செய்வது என்று யோசித்துக்கொண்டு இருக்கின்றனர்.
எதிர்நீச்சல் தொடர்கிறது: இன்றைய எபிசோடில், அவர்கள் பேசிக்கொண்டு இருக்கும் போது அறைக்குள் வரும் அறிவுக்கரசி, ஜனனி இல்லாமல் தான் இந்த பூஜையை நாம நடத்த வேண்டும். அப்போது தான் அவள் காலியாவாள், அவ வயித்துல வளரும் வாரிசும் காலியாகும் இல்லை என்றால், அவளைப்போலவே அவளின் குழந்தையும் வாய் பேசும் அதுமட்டுமில்லாமல் இப்போ இந்த சொத்து வேண்டாம் என்று சொல்லலாம். ஆனால், குழந்தை பிறந்த பிறகு அதைக்காட்டி சொத்தை கேட்டா என்ன செய்வது என்று அனைவர் மனதிலும் தீயை வைக்கிறாள்.

என் தங்கச்சிதான் உன் பொண்டாட்டி: இதையடுத்து, வீட்டில் பூஜைக்கான அனைத்து வேலைகளையும் அனைவரும் செய்து கொண்டு இருக்கின்றனர். அப்போது, பார்கவி வீட்டை துடைத்துக்கொண்டு இருக்க, அறிவுக்கரசி அவளை வம்பு இழுக்கும் வகையில் அழுக்கு காலுடன் நடந்து வருகிறாள். இதைப்பார்த்து தர்ஷன் ஆத்திரப்பட, அப்போது அறிவுக்கரசி, என் தங்கச்சி தான் உன்னோட முறைப்படி பொண்டாட்டி, அவளை இந்த வீட்டில் வாழவைக்காமல் நான் இந்த வீட்டை விட்டு போக மாட்டேன் என பிரச்சனை செய்கிறாள்.
செம ரொமான்ஸ்: மறுபக்கம் கொடைக்கானலில் சக்தி ஜனனி இருவரும் ஜாலியாக அனைத்து இடத்தையும் சுற்றி பார்த்துவிட்டு தங்களின் அறைக்கு வெளியில் பேசிக்கொண்டு இருக்கின்றனர். அப்போது, ஜனனி சக்தியிடம் காலையில ரொமான்ஸ் பண்றேனு சொன்ன, இன்னும் பண்ணவில்லையே என்று கேட்க, இருவரும் போர்வைக்குள் ரொமான்ஸ் செய்ய, "அம்மாடி அம்மாடி நெருங்கி ஒருமுறை பார்க்கவா" என்கிற பாடல் பேக்கிரவுண்டில் வருகிறது. அவை அனைத்தையும் ஆலிவர் தேவசகாயம் நோட்டமிட்டுக்கொண்டு சரியான நேரத்தில் ஜனனியின் கதையை முடிக்க துப்பாக்கியுடன் இருக்கிறார்.


Click it and Unblock the Notifications











