கையில் துப்பாக்கியுடன் ஆலிவர்.. தொக்காக மாட்டிக்கொண்ட ஜனனி.. எதிர்நீச்சல் தொடர்கிறது!
சென்னை: கொடைக்கானலில் சக்தி ஜனனி இருவரும் செம ஜாலியாக அனைத்து இடத்தையும் சுற்றி பார்த்துவிட்டு இருக்கின்றனர். அதோடு மட்டுமில்லாமல் நேற்றைய எபிசோடில், ஜனனி, சக்தியின் ரொமான்ஸ் ரசிக்கும் படி இருந்தது. குறிப்பாக, அந்த காட்சியில் வந்த "அம்மாடி அம்மாடி நெருங்கி ஒருமுறை பார்க்கவா" பாடல் ரசிகர்களை கவர்ந்தது. இப்படி இவர்கள் ஜாலியாக இருந்த போதும், தேவசகாயம் என்ன செய்ய போகிறானோ என்கிற பயம் இருந்தது.
எதிர்நீச்சல் தொடர்கிறது: வீட்டில் பூஜைக்கான ஏற்பாடுகளை அனைவரும் செய்து கொண்டு இருக்க, அறிவுக்கரசி வேண்டும் என்றே பிரச்சனை செய்கிறாள். அப்போது, நந்தினி எதற்காக வாரா வாரம் வீட்டில் பூஜை நடத்த என்ன தேவை இருக்கிறது என கேட்கிறாள். இதைக்கேட்ட குணசேகரன், அனைவரும் ஒத்துமையாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த பூஜை நடத்தப்படுகிறது. சக்தி, ஜனனி இருவரும் பூஜைக்கு வருகிறார்களா? என கேட்கிறார். அப்போது நந்தினி, அவர்களுக்கு ஃபோன் செய்தோம், ஃபோன் போகவில்லை என சொல்கிறாள். இதையடுத்து குணசேகரன், சக்தி வரவில்லை என்றால் என்ன, நாமே அவர்களுக்காக வேண்டிக்கலாம் என்கிறார். இதையடுத்து, பூஜையை தொடங்குவதற்கான வேலைகள் நடக்கிறது.

பின் தொடரும் ஆலிவர்: மறுபக்கம் கோடைகானலில் ஆலிவர், ஜனனியை பின் தொடர்ந்து செய்கிறார். அப்போது தேவசகாயம் போனில் ஒருவரிடம் இந்த ஊரில் இருந்து நான் உடனே கிளம்ப வேண்டும் அதற்கான ஏற்பாடுகளை செய் என சொல்கிறார். ஆனால், எதிரில் இருப்பவரோ இப்போதைக்கு முடியாது இன்னும் இரண்டு நாட்கள் நீங்கள் அங்கேயே இருங்க, இங்கு நிலைமை சரியானதும் நான் கூப்பிடுகிறேன் என சொல்கிறார். ஆனால், தேவசகாயம் முடியாது நான் நிச்சயமாக கிளம்பி விடுவேன் என பேசிக்கொண்டு இருக்கும் நேரம், ஜனனி சக்தியின் கார் கடந்து செல்கிறது.
துப்பாக்கியுடன் ஆலிவர்: காரை பார்த்துவிட்ட தேவசகாயம் அந்த காரை பின் தொடர்ந்து வேகமாக செல்கிறார், ஜனனியின் கார் முன் செல்ல, அடுத்து தேவசகாயத்தின் கார் வேகமாக செல்கிறது. இதை கவனித்த இன்ஸ்பெக்டர் அந்த காரை பின் தொடர்ந்து செல்கிறார். அதைத்தொடர்ந்து நள்ளிரவில் சக்தி, ஜனனி இருவரும் தூங்கிக் கொண்டு இருக்க, அப்போது தேவசகாயம் துப்பாக்கிய எடுத்துக் கொண்டு ஜனனியை கொல்ல செல்கிறார். இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











