ஜனனியை அழிக்க சூனியம்.. வீட்டில் நடக்கப்போகும் பூஜை.. எதிர்நீச்சல் தொடர்கிறது!
சென்னை: கோடைகானலில் ஜனனி, சக்தி இருக்கும் சுற்றி பார்த்துக் கொண்டு இருக்க,
ஜனனியின் காரை பார்த்துவிட்ட தேவசகாயம் அந்த காரை பின் தொடர்ந்து வேகமாக செல்கிறார், ஜனனியின் கார் முன் செல்ல, அடுத்து தேவசகாயத்தின் கார் வேகமாக செல்கிறது. இதை கவனித்த இன்ஸ்பெக்டர் அந்த காரை பின் தொடர்ந்து செல்கிறார். அதைத்தொடர்ந்து நள்ளிரவில் சக்தி, ஜனனி இருவரும் தூங்கிக் கொண்டு இருக்க, அப்போது தேவசகாயம் துப்பாக்கிய எடுத்துக் கொண்டு ஜனனியை கொல்ல சொல்கிறார். ஆனால் அது முடியாமல் போய்விடுகிறது.
எதிர்நீச்சல் தொடர்கிறது: இன்றைய எபிசோடில், கதிர், ஞானம் இருவரும் சென்று அறிவுக்கரசியிடம் பேசுகின்றனர். அப்போது கதிர், நான் பேசுவதை எல்லாம் மனதில் வைத்துக் கொள்ளாதே, சில விஷயத்திற்காக தான் நான் அப்படி பேசுகிறேன். நான் என்னைக்கும் உனக்கு துணையாக தான் இருப்பேன். என்னை நம்பு என அறிவுகரசியின் கையில் அடித்து சத்தியம் செய்கிறார். அதைத்தொடர்ந்து, இன்று நடக்கப் போகும் பூஜை ஜனனியை காலி செய்வதற்காக தான் நடக்கிறது. அதற்காக நீ எங்களுக்கு ஒரு உதவி செய்ய வேண்டும். ஜனனியின் அறையில் இருந்து அவள் பயன்படுத்திய சிகப்பு நிற துணியை யாருக்கும் தெரியாமல் எடுத்து வர வேண்டும். அந்த துணியை வைத்து தான் வீட்டிற்கு வருபவர் பூஜை செய்வார் என சொல்கிறார். அப்போது தான் ஜனனி இந்த வீட்டை ஒழிவாள், அவள் இந்த வீட்டை விட்டு போனால், மொத்த குடும்பமும் அமைதியாக இருக்கும் என சொல்கிறான்.

ஜனனிக்கு சூனியம்: இதைக்கேட்ட அறிவுக்கரசி, அவ்வளவுதானே நான் நிச்சயமாக செய்து விடுகிறேன் என சொல்கிறார். ஆனால், வீட்டுக்குள் அனைவரும் இருப்பதால், எப்படி ஜனனியின் அறைக்கு சென்று துணியை எடுப்பது என தெரியாமல் இருக்க, கதிர், ஞானம் இருவரும் வந்து அங்கு இருப்பவர்களை திசைதிருப்புகின்றனர். இவர்களின் சைகையை பார்த்த ரேணுகா, நந்தினி இருவரும் நேற்று வரை அறிவுக்கரசியிடம் சண்டை போட்டுக்கொண்டு இருந்தார்கள். ஆனால், இன்றைக்கு அவளுடன் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். இவர்கள் ஏதோ ஒரு பெரிய திட்டத்தோடு தான் இருக்கிறார்கள், அது என்ன என்று தெரியவில்லையே என இருவரும் பேசிக் கொண்டு இருக்கின்றனர். அப்போது அறிவுக்கரசி யாருக்கும் தெரியாமல் ஜனனியின் அறைக்குள் சென்று விடுகிறாள். இதை அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதை பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











