கனிகாவிற்கு பதில் ஈஸ்வரியாக வரப்போவது யார்? எதிர்நீச்சல் தொடர்கிறது!
சென்னை: ஜனனி கர்ப்பமாக இருக்கும் நிலையில், வீட்டிற்கு வரப்போகும் வாரிசு பற்றி தெரிந்து கொள்வதற்காக வீட்டிற்கு ஜோசியரை அழைத்து வந்துள்ளார் கதிர். வீட்டிற்கு வரும் ஜோசியர் ஜனனியின் ஜாதகத்தை பார்த்துவிட்டு, ஜனனிக்கு நல்ல நேரத்தில் தான் குழந்தை உண்டாகி இருக்கு, இந்த குழந்தையால் இந்த வீட்டில் செல்வம், சந்தோஷம் எல்லாம் இருக்கும். ஆனால், குழந்தையின் பெரியப்பாவிற்கு இந்த குழந்தையால் ஆபத்து. இந்த குடும்பத்திற்கு எதிரானவர்களை இந்த குழந்தை வதம் செய்துவிடும் என்று சொல்கிறார். இதைக் கேட்டு ஒட்டுமொத்த குடும்பத்தினரும் அதிர்ச்சி அடைகின்றனர்.
இதையடுத்து, அனைவரும் பேசிக்கொண்டு இருக்கும் போது, மருத்துவமனையில் இருந்து போன் வருகிறது. அதில், ஈஸ்வரி கோமா நிலையில் இருந்து மீண்டுவிட்டார். அவர் இன்னும் இரண்டு நாளில் வீட்டுக்கு போய்விடலாம் என சொல்ல அனைவரும் மகிழ்ச்சி அடைகின்றனர். இதைக்கேட்டு நந்தினி, பாத்தியா சக்தி, ஜனனி கர்ப்பமாக இருக்கும் நேரம், அக்கா வீட்டுக்கு வர போறாங்க இந்த குழந்தை உண்மையில் ராசியான குழந்தை என்று சொல்லி அனைவரும் சந்தோஷப்படுகின்றனர்.

எதிர்நீச்சல் தொடர்கிறது: இன்றைய எபிசோடில், நந்தினி, ரேணுகா இருவரும் மருத்துவமனையில் கண் விழித்திருக்கும் ஈஸ்வரியை பார்ப்பதற்காக கிளம்புகின்றனர். அப்போது கதிர் எங்கே போகிறீர்கள் என கேட்க நந்தினி, ஈஸ்வரி கண்விழித்த விஷயம் தெரிந்தால், உடனே அண்ணன் குணசேகரிடம் சொல்லிவிடுவார், அக்காவை ஏதாவது செய்து விடுவார்கள் என்ற பயத்தில் மருத்துவமனைக்கு செல்கிறோம் என சொல்லாமல் ஏதேதோ சொல்கின்றனர்.
அடுத்த நடக்கபோவது என்ன: கதிர், ஞானம் தொடர்ந்து கேட்க, இருவரும் நாங்க மருத்துவமனையில் இருக்கும் அக்காவை பார்க்க போகிறோம் என சொல்கின்றனர். உடனே இருவரும் நாங்களும் வருகிறோம், அண்ணியை பார்த்து ரொம்ப நாள் ஆகிவிட்டது என்று சொல்ல ஆததிரப்படும் நந்தினி, அக்கா இந்த நிலையில் இருப்பதற்கே உங்க அண்ணன் தான் காரணம், இப்போ என்னமோ, அண்ணியை பற்றி பேசுகிறீர்கள் என்று சொல்கிறார். அப்போது கதிர், பழைய கதையை இப்போது பேச வேண்டாம், நீங்க தான் அவங்களை பார்க்க விடவே இல்லை, அதுமட்டுமில்லாமல் அண்ணனுக்கும் அண்ணி மீது பாசம் இருக்கு என்ற சொல்கிறார். இப்படி இருவரும்பேசிக்கொண்டு இருக்க அங்கு வரும் விசாலாட்சி, என்னடி இன்னும் கிளம்பவில்லையா என்று கேட்கிறாள். இதையடுத்து, எதிர்நீச்சல் சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.
கனிகாவிற்கு பதில் யார்?: எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் இருந்து கனிகா சில மாதங்களுக்கு முன் விலகினார். இதனால், அவர் மருத்துவமனையில் கோமாவில் இருப்பது போல காட்டப்பட்டு வந்த நிலையில், தற்போது அவர் குணமடைந்துவிட்டதாகவும், இன்னும் ரெண்டு நாளில் அவர் வீட்டுக்கு வந்துவிடுவார் என்று சீரியல் செல்கிறது. இந்த சீரியலில் கனிகாவிற்கு பதில் தேவயானி களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதுயார் என்பது இன்னும் இரண்டு நாளில் தெரிந்துவிடும்.


Click it and Unblock the Notifications











