உயிர் பயத்தில் ஓடும் சக்தி,ஜனனி.. நடக்கப்போகும் விபரீதம்.. எதிர்நீச்சல் தொடர்கிறது!

சென்னை: எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் வீட்டில் ஜனனிக்கு எதிராக பூஜையை நடத்தி முடித்துள்ள ஆதி குணசேகரன், தன் தம்பிகளுடன் சேர்ந்து டிஸ்கஸ் பண்ணும்போது வக்கீல் சொன்னதை அவர்களுக்கு நியாபகப்படுத்துகிறார். தனது ஜாமீன் விரைவில் முடிய உள்ளதால் மீண்டும் சிறை செல்ல நேரிடும் என்கிற பயத்தில் தன் தம்பிகளை ஏவிவிட்டு, அந்த கேஸை வாபஸ் பெறச் சொல்லி பேசுகிறார். முதலில் விசாலாட்சியிடம் சென்று பேசும் கதிர், எங்களுக்காக அண்ணனின் கேஸை பற்றி பேசி, ஒரு நல்ல முடிவா எடுங்கம்மா என மண்டியிட்டு கேட்கிறார்.

அதன்பின், ஆதி குணசேகரனே தன்னுடைய தாய் விசாலாட்சியை அழைத்து, நான் இந்த வீட்டுக்காக மாடாக உழைத்திருக்கிறேன்.அந்த வீடு நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக பல கஷ்டத்தை அனுபவித்து இந்த வீட்டை உருவாக்கி இருக்கிறேன். இந்த வீடு, நான் ஆசையா கட்டி காப்பாத்துன கூடு, இந்த கூட்டை யாரும் பிரிச்சிடக் கூடாது என செண்டிமெண்டாக பேசி விசாலாட்சியை லாக் செய்கிறான். குணசேகரன் பேசியதை கேட்ட விசாலாட்சியும் கதறி அழுகிறாள்.

எதிர்நீச்சல் தொடர்கிறது: இதையடுத்து இன்றைய எபிசோடில், தேவசகாயத்திற்கு ஜனனி அங்கு தான் இருக்கிறார் என்பதை தெரிந்து கொண்டு அவளின் கதையை முடிக்க ஆட்களை அனுப்புகிறான். அதோடு மட்டுமில்லாமல் இந்த வழக்கை விசாரித்து வரும் போலீஸ், ஜனனிக்கு ஒரு போட்டோவை அனுப்பி இவர் தானே நீங்க சொன்ன தேவசகாயம், இப்போது இவர் கோடைக்கானலில் இருக்கிறார் நீங்க கொஞ்சம் கவனமாக இருங்கள் என்று சொல்கிறார். இந்த விஷயத்தை கேட்ட சக்தி, ஜனனி இருவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.

Ethirneechal Thodargiradhu Suntv promo
Photo Credit:

பயந்து ஓடும் சக்தி,ஜனனி: அதற்குள்ளாகவே தேவசகாயத்தின் ஆட்கள் ஜனனியின் காரை கட்டுப்பிடித்து துரத்துகின்றனர். அவர்களிடம் இருந்து தப்பிக்கும் ஜனனி, சக்தி இருவரும் ஒரு பாட்டியின் வீட்டில் தஞ்சமடைகின்றனர். அந்த பாட்டி ஜனனி கர்ப்பமாக இருப்பதை தெரிந்து கொண்டு சத்து உள்ள உணவாக கொடுத்து அவளை நன்றாக கவனித்துக்கொள்கிறார். மறுபக்கம் தேவசகாயம் தனது ஆட்களிடம், நாம தான் அவளை துரத்துகிறோம் என்கிற விஷயம் அவளுக்கு இந்த நேரம் தெரிந்து இருக்கும், அவ போலீசுக்கு தகவல் கொடுப்பதற்குள், அவ கதையை முடித்துவிட வேண்டும். அவ உயிரோட இந்த மலையைவிட்டு இறங்கக்கூடாது என தனது ஆட்களிடம் சொல்கிறார். இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X