எல்லாத்தையும் மறந்த ஈஸ்வரி.. கதறி அழும் பார்கவி.. எதிர்நீச்சல் தொடர்கிறது!

சென்னை: எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஈஸ்வரி கோமாவில் இருந்து மீண்டு வருகிறாள். ஈஸ்வரி எழுந்து வந்ததும் அவரிடம் வாக்குமூலம் வாங்கி ஆதி குணசேகரனை ஜெயிலுக்கு அனுப்பிவிடலாம் என்கிற கனவோடு ஜனனி இருந்தார். ஆனால், அவரின் கனவில் மண்ணை அள்ளிப் போடும் விதமாக ஈஸ்வரிக்கு கடந்த 2 ஆண்டுகளாக நடந்த விஷயங்கள் எல்லாம் சுத்தமாக மறந்துவிட்டார்.

அதை யாரும் மீண்டும் நினைவுபடுத்தக்கூடாது, அப்படி நினைவுபடுத்தினால் அது அவரின் மனநிலையை பாதிக்கும் என்று மருத்துவர் சொல்கிறார். இதைக்கேட்ட அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். ஆதி குணசேகரன் தன்னை அடித்தது ஈஸ்வரிக்கு சுத்தமாக நியாபகத்தில் இல்லை. இதை அறிந்த ஜனனி இடிந்துபோய் இருக்கிறார். அதோடு மட்டுமில்லாமல் பார்கவி, ஈஸ்வரி அம்மாவிற்கு என்னை யார் என்று தெரியாதுல என்று சொல்லி வருத்தப்படுகிறாள். ஆனால், இந்த விஷயத்தை தெரிந்து கொண்ட குணசேகரன் மற்றும் தம்பிகள் சந்தோஷப்படுகின்றனர்.

Ethirneechal Thodargiradhu Suntv promo
Photo Credit:

எதிர்நீச்சல் தொடர்கிறது: இதையடுத்து ஈஸ்வரி வீட்டுக்கு வர, விசாலாட்சி அவருக்கு ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்து செல்கிறார். அப்போது, விசாலாட்சி உங்காரு ஈஸ்வரி என்று சொல்ல, அங்கிருந்த ரேணுகா, அக்கா எப்போ அவங்களுக்கு சரிசமமா உட்கார்ந்து பேசிருக்காங்க என சொல்கிறார். ஆனால், குணசேகரன் யாரும் எதிர்பாரா விதமாக ஈஸ்வரியை அங்கிருந்த சேரில் அமரச் சொல்கிறார். இதனால் இன்ப அதிர்ச்சி அடையும் ஈஸ்வரி, சேரில் ஆதி குணசேகரன் அருகில் அமர்ந்து பேசுகிறார். அப்போது உடல்நலம் எப்படி இருக்கிறது என்று விசாரிக்கிறார் குணசேகரன்.

பார்கவியை மறந்த ஈஸ்வரி: பின்னர் ஈஸ்வரியை அங்கிருந்து அனைவரும் மாடிக்கு அழைத்து சென்று பேசுகின்றனர். அப்போது, ஜனனி கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை சொல்ல, ஈஸ்வரி சந்தோஷப்படுகிறாள். அப்போது, பார்கவியை பார்த்த ஈஸ்வரி, இது யார் என்று கேட்க, அப்போது நந்தினி, இவன் என் சொந்தக்கார பெண்ணு பார்கவி என்று சொல்லி அறிமுகப்படுத்தி வைக்கிறார்.இதையடுத்து, உனக்கு யாரும் இல்லை என்று வருத்தப்படாதே அம்மாவா நான் இருக்கிறேன் என்று சொல்ல பார்கவி, ஈஸ்வரியை கட்டிப்பிடித்து கதறி அழகிறாள். இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X