குணசேகரின் குலத்தை கருவறுக்க வந்த ராவணன்.. புது வில்லன் என்ட்ரி.. எதிர்நீச்சல் தொடர்கிறது!
சென்னை: எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் நீண்ட நாட்களாக ராணா புது வில்லன் வருவார் என அனைவரும் எதிர்பார்த்துக்கொண்டு இருந்த நேரத்தில் தற்போது புதுவில்லன் என்ட்ரி கொடுத்துள்ளார். ஒரு பக்கம் ஈஸ்வரி வீட்டுக்கு வந்துவிட, அவளுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளில் நடந்த எல்லாம் மறந்துவிட்டது என்பதால், அதி குணசேகரன் இனி நமக்கு எந்தவிதமான பிரச்சனையும் இல்லை என்ற நிம்மதியில் இருக்கிறார். இந்த நேரத்தில் ராணா, ராவணனாக களம் இறங்கி குணசேகரின் குடும்பத்தை பழி தீர்க்க இருக்கிறார்.
ஜனனிக்கு போன் செய்யும் மதிவதனி, நாம் நினைக்கும்படி ஆலிவர் தேவசகாயத்தின் டீம் சாதாணமான இடத்தில் இல்லை. நாம நினைத்ததை விட பெரிய இடத்தில், நாம தொட முடியாத உயர்த்தில் இருக்கிறார்கள். ஆலிவரை கைது செய்தால் கூட , அவன் தன் தலைவன் பற்றி சொல்ல மாட்டான் என்று சொல்கிறார். மறுபக்கம், ராணாவின் என்ட்ரி காட்டப்படுகிறது. அதில், கோவத்தோடு கையில் கத்தியோடு வரும் ராணா, அந்த இடத்திலேயே 3 பேரை குத்தி கொல்கிறார். பின்னர் தன்னை நல்லவன் போல் காட்டிக் கொள்ள ரத்த தானம் செய்கிறார். இப்படி உள்ளுக்குள் கெட்டவன் வெளியில் நல்லவன் போல இரட்டை வேஷத்தை போட்டுக்கொண்டு இருக்கிறார்.

எதிர்நீச்சல் தொடர்கிறது: ராணாவின் கொடூரமான முகத்தை தெரிந்து கொண்ட ஜனனி, என்ன மேடம் சொல்றீங்க, இந்த மாதிரி கொடூரமான ஆட்களை எல்லாம் நாம உயிருடன் விடவே கூடாது. இவர்கள் நம்ம வருங்கால சன்னதிகளையே அழித்துவிடுவார்கள் என புலம்புகிறார்கள். இதையடுத்து, மதிவதனி, இந்த கூட்டத்தோட தலைவன் யார் என்பதை கண்டுபிடித்து, சரியான தாண்டனை வாங்கி தருகிறேன். அதற்கான முயற்சிகளை நான் செய்கிறேன் ஜனனி, நீங்க எதை பற்றியும் கவலைப்படாதீங்க, இப்போ தான் ஈஸ்வரி வீட்டுக்கு வந்து இருக்காங்க அவங்களை நல்லபடியாக கவனித்து பார்த்துக்கொள்ளுங்கள் என சொல்கிறார்.
மதிவதனியின் கணவன்: மறுபக்கம் மதிவதனி வீட்டில் ஜனனி பேசியதை நினைத்துக்கொண்டு இருக்க, அப்போது அவரிள் மகள் வந்து, அம்மா நான் பழைய அறையில் இருந்து ஒரு போட்டோவை எடுத்தேன். அந்த போட்டோவில் இருப்பது யார் என்று கேட்டு அந்த போட்டோவை காட்டுகிறாள். அந்த போட்டோவில் மதிவதனி மாலையும் கழுத்துமாக இருக்க அருகில் ராணா என்கிற ராவணன் இருக்கிறான். இதன் மூலம் ராணா தான் மதிவதனியின் கணவர் என்பது தெரியவருகிறது.


Click it and Unblock the Notifications











