கலெக்டர் மதிவதனியால் கலங்கிய குணசேகரன்.. அடுத்த திட்டம் என்ன? எதிர்நீச்சல் தொடர்கிறது!

சென்னை: எதிர்நீச்சல் தொடர்கிறது நேற்றைய எபிசோடில் சொத்துக்களை எழுதி வைப்பதாக குணசேகரன் தனது தம்பிகளிடம் நாடகம் ஆடுகிறார். அதோடு மட்டுமல்லாமல் பாலில் அடித்து இருவரும் சத்தியம் செய்ய சொல்லி சொத்து பத்திரத்தில் கையெழுத்து வாங்குகிறார்.

இன்றைய எபிசோடில் கலெக்டர் மதிவதனி தான், குணசேகரன் ஜாமீனை ரத்து செய்வதற்கான அனைத்து வேலைகளையும் செய்து வருவது குணசேகரனுக்கு தெரிய வருகிறது. இதற்காகத்தான், குணசேகரன் அவசர அவசரமாக சொத்துக்களை எழுதி வைக்கும் நாடகத்தை அரங்கேற்றி உள்ளார். இதைத்தொடர்ந்து, மதிவதனி ஜனனியை பார்ப்பதற்காக வீட்டிற்கு வருகிறார். மதிவதனியை பார்த்த குணசேகரன், உங்களைப் பற்றி நான் நிறைய கேள்விப்பட்டு இருக்கிறேன். நீங்க ரொம்ப நேர்மையானவர் என பலரும் சொல்கிறார்கள் என சொல்கிறார்.

Ethirneechal Thodargiradhu Suntv promo
Photo Credit:

எதிர்நீச்சல் தொடர்கிறது: ரொம்ப நல்ல விஷயம் சார், நானும் உங்களைப் பற்றி நிறைய கேள்விப்பட்டு இருக்கிறேன். பெண்களை முன்னேற விடக்கூடாது என்பதற்காக ஒரு கூட்டமே செயல்பட்டு கொண்டு இருக்கும்போது, சில பெண்கள் தான் துணிந்து போராடுகிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு நான் ஆதரவாக இருக்க வேண்டி இருக்கிறது. அதனால் தான் நான் ஜனகிக்கு ஆதரவாக இருக்கிறேன் என்கிறார். இதைத்தொடர்ந்து மதிவதனி ஜனனியை சந்தித்து பேசுகிறார்.

மதிவதனி கொடுத்த அட்வைஸ்: இப்போது ஜனனி, குணசேகரன் செய்வதை எல்லாம் பார்க்கும்போது எனக்கு மிகவும் கோவம் வருகிறது. அராஜகம், துரோகங்களை செய்துவிட்டு எதுமே நடக்காதது போல வீட்டில் அனைவர் முன்பும் நாடகமாடுகிறார். இதையெல்லாம் பார்த்துக்கொண்டு என்னால் சும்மா இருக்கவே முடியவில்லை என சொல்கிறார். அப்போது மதிவதனி, அதைப்பற்றி நீங்கள் கவலைப்பட தேவையில்லை ஜனனி. நான் நிச்சயமாக அவரை சும்மா விடமாட்டேன். கர்ப்பமாக இருக்கும் நீங்கள் எதைப் பற்றியும் யோசிக்கவே கூடாது. இந்த மூன்று மாத காலம் நீங்கள் நிச்சயமாக நல்ல ஆரோக்கியத்துடன் நல்ல மனநிலையில் இருக்க வேண்டியதுதான் முக்கியம். குணசேகரனை பற்றி நீங்கள் கவலைப்படாதீர்கள் நான் பார்த்துக்கொள்கிறேன் என சொல்கிறாள். மேலும், உங்களுக்காக என் மகள் ஒரு படத்தை வரைந்து உங்களுக்கு கிப்டாக கொடுத்து இருக்கிறாள் என்கிறார். இதையடுத்து என்ன நடந்தது என்று பார்க்கலாம்,.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X