பரம எதிரியாக மாறி ஈஸ்வரி, ஜனனி.. குணசேகரின் திட்டம்.. எதிர்நீச்சல் தொடர்கிறது!
சென்னை: வீட்டிற்கு வரும் வழக்கறிஞர் குணசேகரன் மீது போட்ட வழக்கின் விசாரணை தேதி வந்துவிட்டது என்று சொல்கிறார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடையும் கதிர், அண்ணனுக்கு உடம்பு சரியில்லாததைவைத்து அவரால் விசாரணைக்கு வரமுடியவில்லை என்று சொல்லலாமா என்று கேட்க, வழக்கறிஞர் தாராளமாக சொல்லலாம். ஆனால், அதற்கு வீட்டில் இருக்கு பெண்கள், அது உண்மை தான் என ஒப்புக்கொண்டு கையெழுத்து போட்டுதரவேண்டும் என சொல்கிறார். வழக்கறிஞர் கேட்டபடியே நந்தினி, ரேணுகா, ஈஸ்வரி என அனைவரும் கையெழுத்து போட்டு கொடுகின்றனர்.
மறுபக்கம் சக்தி,தர்ஷனி, ஜனனி அனைவரும் சாரு பாலாவை பார்த்து வழக்கு குறித்து பேசுகின்றனர். அப்போது சாருபாலா, குணசேகரன் இந்த வழக்கில் இருந்து வெளியில் வர பெரிய திட்டம் போடுகிறார். தர்ஷனுக்கு கல்யாணத்திற்கு ஏற்பாடு செய்து இருக்கும் நாளில் தான் இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது. மேலும், வழக்கு விசாரணைக்கு குணசேகர் உடல்நலம் சரியில்லாததால் வரவில்லை என்றும், அதற்கு எங்களுக்கு சம்மதம் என 3 பேரும் கையெழுத்து போட்ட விஷயம் ஜனனிக்கு தெரியவருகிறது. இதனால், ஆத்திரப்படும் ஜனனி, அவரை நான் சும்மா விடமாட்டேன், இந்த வழக்கு குறிப்பிட்ட தேதியில் நடந்தே ஆக வேண்டும். விசாரணைக்கு ஆஜராகாமல் இருக்க குணசேகருக்கு உடம்பு சரி இல்லை என பொய் சொல்லுகிறார் என வழக்கு போட சொல்கிறார்.

எதிர்நீச்சல் தொடர்கிறது: இன்றைய எபிசோடில் இந்த விஷயத்தை வழக்கறிஞர் கதிருக்கு போன் செய்து சொல்கிறார். இதனால், ஆத்திரப்படும் கதிர், இந்த ஜனனி என்ன செய்து இருக்கா தெரியுமா, அண்ணன் உடம்பு சரியில்லை என பொய் சொல்லி, பெண்களை மிரட்டி கையெழுத்து வாங்கி இருப்பதாக சொல்கிறார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த ஈஸ்வரி இந்த ஜனனி எதுக்கு இப்படி எல்லாம் செய்ற, அவ என்ன செய்றா, எதுக்கு செய்றா என்று ஒன்னுமே புரிய வில்லை என வருத்தப்பட்டு பேசுகிறார்.
வீட்டை விட்டு வெளியேறிய ஜனனி: குணசேகரன் மீது வழக்கு போட்டு இருப்பதால் இதற்கு மேல் அந்த வீட்டில் இருக்க முடியாது எனாக புரிந்து கொண்ட ஜனனி மற்றும் சக்தி இருவருமே அந்த வீட்டை விட்டு வெளியே வருகின்றர். இது குறித்து மதிவதனியிடம் சொல்ல அவர் எதற்காக இப்படி சொல்லாமல் வந்தீர்க என கேட்கிறாள். அப்போது ஜனனி வழக்கு முடியும் வரை அதே வீட்டில் இருந்தால் சரிப்பட்டு வராது என்கிறார். மறுபக்கம் ஜனனி வழக்கு போட்டு இருப்பது குறித்து குணசேகரனிடம் கதிர் சொல்ல, ஆத்திரப்படும் குணசேகரன் இதற்கு மேல் அந்த ஜனனியை விட்டு வைக்கக் கூடாது அவளை முடித்துவிடு என சொல்கிறார்.


Click it and Unblock the Notifications