ஈஸ்வரி எடுத்த அதிரடி முடிவு.. அவமானத்தால் தலைகுனிந்த குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது!
சென்னை: எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில், மணி விழாவிற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நேரத்தில் ஜனனி, ஈஸ்வரியை அழைத்து வருவதற்காக மேலே செல்கிறாள். அப்போது, ஈஸ்வரி இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை என்று அழுது கொண்டு இருக்கிறாள். இதையடுத்து நேற்று என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.
ஈஸ்வரிக்கு இந்த திருமணத்துல விருப்பமே இல்ல என்பதால் என்ன செய்வது என்றே தெரியாமல் குழப்பத்தில் இருக்கிறாள். இதனால், முகூர்த்த நேரம் தாண்டிவிட்டால் இந்த திருமணம் நின்றுவிடும் என்று ஜனனி ஐடியா கொடுக்க. ஈஸ்வரி மற்றும் ஜனனி இருவரும் ஒரு அறையில் யாருக்கும் தெரியாமல் ஒளிந்து கொள்கின்றனர். பலமுறை அழைத்தும் ஈஸ்வரி கீழே வராததால் அனைவரும் தேடுகின்றனர். ஆனால், அறையில் ஈஸ்வரி இல்லாததால் ஆத்திரம் அடைந்த, கதிர் ஜனனி தான் இந்த திருமணம் நடக்கக்கூடாது என்று முடிவு செய்து இருக்கிறாள். அவள் தான் இது அனைத்திற்கும் காரணம் என்று சண்டை போட்டுக்கொண்டு இருக்கிறான்.

எதிர்நீச்சல்: அப்போது ரேணுகாவும் நந்தினியும் அனைவரையும் சமாதானப்படுத்திவிட்டு, ஈஸ்வரியை தேடி வருகின்றனர். அப்போது, இருவரும் ஒரு அறையில் இருக்கின்றனர். அப்போது, ஈஸ்வரி எனக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை என்று சொல்லிக்கொண்டு இருக்க, கதிர், ஞானம் இருவரும் வந்து. இப்போ கீழே வந்து மேடையில் உங்கார போறீங்களா.. இல்லையா என்று சத்தம் போடுகிறான். அப்போது, ஜனனி, அடுத்தவர்களின் மனதை புரிந்து கொள்ளவே மாட்டீங்களா.. அவங்கங்களுக்கு இதில் விருப்பம் இல்லை என்று சொல்கிறான். உடனே, ககிர், ஜனனி பார்த்து உன்னால் தான் இந்த குடும்பத்தில் பிரச்சனை நீ மட்டும் இல்லை என்றால், இந்த குடும்பம் நன்றாக இருக்கும் என்று சொல்கிறான். அப்போது, ஜனனி அப்போ நான் இந்த வீட்டை விட்டு போய்விடுகிறேன் என்று சொல்ல, போ நீ போனாதான் இந்த குடும்பமே நல்லா இருக்கும் என்று சொல்கிறான்
ஈஸ்வரி எடுத்த முடிவு: இப்படியே இருவருக்கும் இடையே சண்டை பெரிதாகிக் கொண்டு இருக்க, ஈஸ்வரி, கல்யாணத்திற்கு சம்மதம் சொல்லிவிட்டு கீழே வந்து மாலையை போட்டு மணமேடையில் உங்காரும் நேரத்தில், தாரா பெரிய மனுஷியாகி ஆகிவிடுகிறாள். இதை தெரிந்து கொண்ட ஜனனி, எல்லாத்தையும் நிறுத்துங்க, இந்த கல்யாணம் நடக்காது என்கிறாள். இதைக்கேட்டு ஆத்திரமடைந்த கதிர், ஏய்.. ஜனனி, நீ ஒழுங்க வாயமூடிட்டு இருக்கியா.. இல்லை என்று சொல்லிக்கொண்டு அடிக்க பாய்ந்து வருகிறான். அப்போது ஜனனி, தாரா பெரிய பெண்ணாகி விட்டாள். இந்த நேரத்தில் எப்படி நீங்க கல்யாணம் பண்ணுவீங்க என்று கேட்கிறாள். இதைக்கேட்டு, நந்தினி, ரேணுகா அனைவரும் சந்தோஷப்படுகின்றனர்.
வயதுக்கு வந்த தாரா:ஆனால், ஜான்சி ராணி, இவளுங்க இந்த கல்யாணத்தை நிறுத்துவதற்காக பொய்க்கூட சொல்லுவாங்க, நான் போய் பார்த்துவிட்டு வருகிறேன் என்று சொல்ல, விசாலாட்சியும் நானும் வருகிறேன் என்று இருவரும் செல்கின்றனர். அப்போது, ரேணுகா, நந்தினி இருவரும்... அய்யோ அத்தை, இந்த விஷயத்துல கூடவா, நாங்க பொய் சொல்லுவோம். உண்மையிலேயே தாரா பெரிய மனுஷியாகிவிட்டாள் என்று சொல்ல, விசாலாட்சி, சோகமான முகத்தோடு, ஐய்யரிடம், என் பேத்தி பெரிய மனுஷியாகிவிட்டாள் என்று சொல்கிறாள். இதைக்கேட்ட, ஐய்யர், இந்த நேரத்தில், இந்த திருமணத்தை செய்யக்கூடாது என்கிறார். உடனே விசாலாட்சி, அவளை நாங்க யாரும் தொடவில்லை. அவளும் மாடியில் தானே இருக்கா, நாம இங்கே கல்யாணத்தை நடத்திவிடலாம் என்று சொல்கிறாள். உடனே, ஐய்யர் என்னம்மா, பேசுறீங்க, உங்க பேத்தி பெரிய பொண்ணாகி இருக்க, இந்த வீட்டுக்கே தீட்டுபட்டு இருக்கும் போது எப்படி, கணபதி பூஜை செய்து கல்யாணத்தை நடத்த முடியும் என்னால், முடியாது. எனக்கு நீங்க பணம் கூட தரவேண்டாம் நான் கிளம்புகிறேன் என்கிறார்.
ஈஸ்வரி எடுத்த முடிவு: உடனே, கதிர், ஐய்யரிடம் கொஞ்சம் அமைதியா இருங்க நான் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறேன் என்று சொல்ல, நீங்க எவ்வளவு பணம் கொடுத்தாலும், நான் இதை செய்ய மாட்டேன். பேத்திக்கு தீட்டு கழித்தபிறகு, ஒரு நல்ல நாளாக பார்த்து கல்யாணத்தை வைத்துக்கொள்ளுங்கள் என்று வெளியில் சென்றுவிடுகிறார். ஐய்யர் வெளியில் சென்றுவிட்டதால், என்ன செய்வது என்று தெரியாமல் பதறிபோன விசாலாட்சி, அவன் போனா என்னடா... இந்த வீட்டிற்கு நான் தானே பெரியவள், நான் என் மகனுக்கு கல்யாணத்தை நடத்திவைக்கிறேன். ஈஸ்வரி நீ போய் உங்காரு என்று சொல்ல, ஈஸ்வரி... எதுவுமே பேசாமல் இருக்கிறாள். உடனே விசாலாட்சி, அடியே ஈஸ்வரி என் மகன் முகத்தை பாருடி... உன் காலில் வேண்டுமானாலும் விழுகிறேன் இந்த கல்யாணத்திற்கு சம்மதம் சொல்லு என்று கொஞ்சுகிறாள். அப்போது, ஜனனி, ஈஸ்வரி அக்காவை யாரும், கட்டாயப்படுத்தக்கூடாது. இந்த கல்யாணம் வேண்டுமா.. வேண்டாமா என்று அவங்க தான் முடிவு எடுப்பாங்க என்கிறாள்.
மறுபக்கம், ஈஸ்வரியின் அப்பா, ஈஸ்வரி நான் சொல்வதை கேளு, இந்த குடும்பம் நல்லா இருக்க வேண்டும் என்றால், இந்த கல்யாணம் எப்படியாவது நடந்தே ஆக வேண்டும் என்று அனைவரும் ஈஸ்வரியை திருமணத்திற்கு கட்டாயப்படுத்துகின்றனர். இதையடுத்து இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில், ஈஸ்வரி இந்த திருமணத்தில் எனக்கு விருப்பம் இல்லை என்று மாலையை கழட்டி விடுகிறாள். இதனால், ஆத்திரம் அடைந்த குணசேகரன், கழுத்தில் அணிந்து இருந்த மாலையை தூக்கி வீசிவிட்டு வெளியே சென்றுவிடுகிறான்.

குடும்பத்தில் வெடித்த பிரச்சனை: பின் தம்பிகளிடம், ஏற்கனவே நான் அனுபவித்த கஷ்டம் எல்லாம் போதும், இதற்கு மேலயும் எனக்கு எந்த கஷ்டத்தையும் கொடுத்துவிடாதீர்கள் என்று கையேடுத்து கும்பிட்டு கதறி அழுகிறார். அண்ணன் அழுததைப் பார்த்து பதறிப்போன, அனைவரும் கோவத்தின் உச்சத்திற்கு செல்கின்றனர். மறுபக்கம், தாரா பெரிய மனுஷியாகிவிட்டதால், அவளுக்கு நலங்கு வைக்கப்படுகிறது. அப்போது, நந்தினி, என் மகள் நல்லா வாழவேண்டும் என்று ஆசைப்படுவது, நீங்க தான் அக்கா, நீங்க வந்து நலங்கு வைங்க என்று ஈஸ்வரியுடம் சொல்ல, ஈஸ்வரி நலங்கு வைக்கும் போது, குறுக்கே வந்து தடுத்த கதிர், என் மகளை தொடுவதற்கு நீங்க யார்.. உங்களுக்கு எங்க அண்ணன் வேண்டாம். ஆனால், தம்பியோட மகள் மட்டும் வேணுமா.. ஆடு பக குட்டி உறவா.. எங்க அண்ணணையே வேண்டாம் என்று சொல்லிவிட்ட பிறகு இந்த வீட்டுல உனக்கு என்ன வேலை, என்று கேட்டு சண்டை போடுகிறான். இதையடுத்து இன்று என்ன ஆகப்போகிறது என்பதை பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











