குணசேகரனின் அகங்காரத்திற்கு கிடைத்த அடி.. சாக முடிவெடுத்த விசாலாட்சி.. எதிர்நீச்சல் தொடர்கிறது!

சென்னை: ஈஸ்வரி, கல்யாணத்திற்கு சம்மதம் சொல்லிவிட்டு கீழே வந்து மாலையை போட்டு மணமேடையில் உங்காரும் நேரத்தில், தாரா பெரிய மனுஷியாகி ஆகிவிடுகிறாள். தீட்டாக இருக்கும் இந்த நேரத்தில், திருமணம் செய்யக்கூடாது என்று ஐய்யர் சொல்லிவிட்டு கிளம்பிவிட, விசாலாட்சி இந்த கல்யாணம் எப்படியாவது நடக்க வேண்டும் என்று ஈஸ்வரியை திருமணத்திற்கு கட்டாயப்படுத்துகிறாள். உன் காலில் விழுகிறேன் ஈஸ்வரி, இந்த கல்யாணத்திற்கு ஒத்துக்கோ என்று சொல்லி அழுகிறாள். இதையடுத்து, நேற்று வெளியான ப்ரோமோவில், ஈஸ்வரி, மாலையை கழட்டியதும், குணசேகரன் மாலையை தூக்கி வீசி விட்டு, தம்பிகளிடம் கையேடுத்து கும்பிட்டு கதறி அழுதையும் பார்த்தோம். இதையடுத்து, எதிர்நீச்சல் சீரியலில் நேற்று என்ன நடந்தது என்று பார்க்கலாம்.

திருமணத்தை நடத்தி வைக்க மாட்டேன் என்று அய்யர் கூறி விட்டு சென்று விட்டதால், விசாலாட்சி இந்த குடும்பத்தில் நான் தான் பெரியவள், நான் திருமணத்தை நடத்தி வைக்கிறேன் என்று சொல்கிறாள். அப்போது குறுக்கிட்ட ஜனனி, இந்த விஷயத்துல ஈஸ்வரி அக்கா தான் முடிவு எடுப்பாங்க, தேவையில்லாமல் யாரும் அவங்கள கட்டாயப்படுத்தாதீங்க என்று சொல்கிறாள் ஜனனி. அதைத் தொடர்ந்து ஈஸ்வரி, பல விஷயங்களை யோசித்து விட்டு மாலையை கழட்டி வைத்துவிட்டு அங்கிருந்து சென்று விடுகிறாள். இதைப்பார்த்து ஆத்திரம் அடைந்த விசாலாட்சி, என்ன செய்வது என்று தெரியாமல், கதறி அழுகிறாள். அப்போது ஜான்சி ராணி, மலை போல இருந்த எங்க அண்ணனை இப்படி சாய்ச்சிட்டாளே, சொந்த பந்தங்களை எல்லாத்தையும் கூட்டி, மூக்கை அறுத்து விட்டாளே என்று கத்துகிறாள். அப்போது, குணசேகரன் மாலையை கழற்றி வீசி விட்டு அங்கிருந்து வெளியே வந்து விடுகிறார்.

Ethirneechal Thodargiradhu Suntv promo

எதிர் நீச்சல் தொடர்கிறது: அண்ணன் வெளியே போனதால் அனைவரும் வெளியே வந்து திசைக்கு ஒருவராக அழுது கொண்டு இருக்கின்றனர். அப்போது, குணசேகரன் அனைவரையும் அழைத்து நமக்கு அவமானம் நடந்தது உண்மைதான். அதற்காக, இப்படியே அழுது கொண்டு இருந்தால் என்ன அர்த்தம். கதிர், உன்னுடைய மகள் தாரா இப்போது பெரிய பெண்ணாக இருக்கிறாள். இந்த நேரத்தில், நீ சண்டித்தனத்தை எல்லாம் காட்டிக் கொண்டு இருந்தால் குடும்பம் நடத்த முடியாது. இதனால் அனைத்தையும் விட்டுவிட்டு உன்னுடைய குடும்பத்தை பார் என்கிறார். என்னுடைய திருமண வாழ்க்கை அஸ்தமித்து விட்டது. தர்ஷினி வேறு ஒரு போக்கில் போய்விட்டால், தர்ஷனுக்கு நல்ல படியாக ஒரு திருமணத்தை செய்து வைக்க வேண்டும். நான் தனிமரமாக இருக்கிறேன் என்பதற்காக உங்களுடைய வாழ்க்கை எல்லாம் நான் கெடுக்க முடியாது என்கிறார்.

மனதில் வன்மம்: அப்போது ஞானம், இத்தனை நாளா ஜனனி தான் இந்த பிரச்சனைக்கு எல்லாம் காரணம் என்று நான் நினைத்துக் கொண்டு இருந்தேன். ஆனால், இன்றைக்கு நடந்த பிரச்சனைக்கு காரணம் ஈஸ்வரி தான் என்று தெரிகிறது, அவர் அந்த மாலையை கழட்டி வைத்துவிட்டு பார்த்த பார்வையில் அத்தனை வன்மமும் தெரிந்தது இப்படி பட்டவர்களுடன் வாழ்வதைவிட நாங்களும் தனியாகவே இருந்து விடுகிறோம். அவர்கள் அனைவரையும், இன்னைக்கே வீட்டை விட்டு அனுப்பி விடுகிறோம் என்று ஆத்திரத்தோடு சொல்கிறான். அவரை தடுத்து நிறுத்தும் குணசேகரன், ஏற்கனவே நான் பட்ட கஷ்டம் எல்லாம் போதும், மேலும் மேலும் என்னை கஷ்டப்படுத்தாதீங்க என்று சொல்லி கையேடுத்து கும்பிட்டு கதறி அழுகிறார் குணசேகரன். நம்ம வீட்டு பொண்ணு தாரா பெரிய பொண்ணாகி இருக்கா, போய் அவளை பாருங்க என்று, தம்பிகளை சமாதானப்படுத்தி அனுப்புகிறார்.

மறுபக்கம் தாராவிற்கு நலங்கு வைப்பதற்கான அனைத்தையும் நந்தினி செய்துவிட்டு, ஈஸ்வரியை நலங்கு வைக்க வரும் படி கூப்பிட, அந்த நேரம் பார்த்து அங்கு வந்த கதிர், நலங்கு கிண்ணத்தை தட்டி விட்டு என் மகளை தொடுவதற்கு நீங்கள் யார்.. என் அண்ணனோட மேடையில உட்கார மாட்டீங்க, ஆனால், தம்பி புள்ள மட்டும் உங்களுக்கு கேக்குதா... ஆடு பகை குட்டி உறவா... மொத்த குடும்பத்தையும் கூட்டி கடைசியில எல்லாரையும் அவமானப்படுத்திட்டீங்க. நீங்க என்னுடைய மகள் இருக்கிறான் பாக்கம் கூட வரக்கூடாது அப்படி வந்தீங்க என்றால், என்ன நடக்கும்னு தெரியாது என்று சத்தம் போடுகிறான்.

Ethirneechal Thodargiradhu Suntv promo

உடம்பெல்லாம் விஷம்: அப்போது பேசிய ஜனனி, கல்யாணம் என்பது அவர்களுடைய தனிப்பட்ட உரிமை, அதில் நீங்கள் தலையிடாதீர்கள் என்று சொல்ல. ஆத்திரத்தின் உச்சத்திற்கு ஏறிய கதிர், ஜனனி இது உனக்கு தேவையில்லாத விஷயம் இந்த விஷயத்தில் நீ தலையிடாதே என்று சொல்லிவிட்டு, இதோ பார் கதிர், ஒரு விஷயம் மட்டும் சொல்கிறேன் என்னுடைய மகள் தாராவிற்கு நீ சித்தப்பா என்கிற முறையில் என்ன வேண்டுமானாலும் செய்யலாம், அவளை வெட்டி போட்டால் கூட நான் கேட்க மாட்டேன். ஆனால், உன்னுடைய மனைவி ஜனனி என்னுடைய மகள் இருக்கும் திசையில் கூட நிற்கவே கூடாது. ஜனனி ஒரு ராங்கி என்றால், ஈஸ்வரி ஒரு விஷம், அவர்களுக்கு உடம்பெல்லாம் விஷமாக இருக்கு, சரியாக ப்ளான் போட்டு அனைத்தையும் செய்து, குடும்பத்தை கெடுத்துவிட்டாள் என்று சொல்லி சத்தம் போட்டுக் கொண்டே இருக்கிறான்.

இன்றைய ப்ரோமோ: அப்போது நந்தினி, தாரா உங்களுடைய மகள் மட்டும் இல்லை எனக்கும் மகள் தான், அவளுக்கு யார் யார் என்ன என்ன செய்ய வேண்டும் என்று எனக்கும் தெரியும் என்று குரலை உயர்த்தி பேச, ஆத்திரத்தில் இருக்கும் கதிர், நந்தினியை அடிக்க பாய்கிறான். அப்போது நந்தினி அவன் கையை பிடித்து தடுக்கிறாள். இதோடு நேற்றைய எபிசோடு முடிவடைந்தது. இதையடுத்து, இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில், சக்தி, எல்லாம் நீ நினைத்த மாதிரியே நடக்க வேண்டும் என்று இருக்காதே, தயவு செய்து உள்ளே போ என்று கோவத்துடன் சொல்ல, ஜனனி உள்ளே சென்றுவிடுகிறாள். அடுத்து, விசாலாட்சி கதறி அழுதுக்கொண்டே, அவளுங்க கூடவே இருந்து, குழிப்பறிக்கத்தான் இந்த வீட்டுக்கு வந்து இருக்காளுங்க, இந்த அசிங்கத்தை எல்லாம் பார்ப்பதற்கு அன்னைக்கே நான் விஷம் குடித்து செத்து இருக்கனும் என்கிறாள். தொடர்ந்து வீட்டிற்குள் வரும் குணசேகரன், நான் ஜெயிலில் இருந்து வெளியே வந்தது மணி விழாவிற்காக இல்லை, என் மகன் தர்ஷனின் கல்யாணத்தை பார்ப்பதற்காகவும், உங்களுக்கு செய்ய வேண்டிய கடமையை சரியாக செய்துவிட்டு போகலாம் என்றுத்தான் வந்தேன் என்று சொல்கிறார். இதையடுத்து, எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் என்ன நடந்தது என்று அடுத்த செய்தியில் பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X