குணசேகரன் பட்ட அவமானம்.. குடும்பத்தை ஆட்டிப்படைக்க போட்ட பிளான்.. எதிர்நீச்சல் தொடர்கிறது!
சென்னை: தாராவிற்கு நலங்கு வைப்பதற்கான அனைத்தையும் நந்தினி செய்துவிட்டு, ஈஸ்வரியை நலங்கு வைக்க வரும் படி கூப்பிட, அந்த நேரம் பார்த்து அங்கு வந்த கதிர், நலங்கு கிண்ணத்தை தட்டி விட்டு என் மகளை தொடுவதற்கு நீங்க யார்.. என் அண்ணனோட மேடையில உட்கார மாட்டீங்க, ஆனால், தம்பி புள்ள மட்டும் உங்களுக்கு கேக்குதா... ஆடு பகை குட்டி உறவா... மொத்த குடும்பத்தையும் கூட்டி கடைசியில எல்லாரையும் அவமானப்படுத்திட்டீங்க. நீங்க என்னுடைய மகள் இருக்கும் பக்கம் கூட வரக்கூடாது அப்படி வந்தீங்க என்றால், என்ன நடக்கும்னு தெரியாது என்று சத்தம் போடுகிறான்.
அப்போது பேசிய ஜனனி, கல்யாணம் என்பது ஈஸ்வரி அக்காவின் தனிப்பட்ட உரிமை, அதில் நீங்கள் தலையிடாதீர்கள் என்று சொல்ல. ஆத்திரத்தின் உச்சத்திற்கு சென்ற கதிர், ஜனனி இது உனக்கு தேவையில்லாத விஷயம் இந்த விஷயத்தில் நீ தலையிடாதே என்று சொல்லிவிட்டு, இதோ பார் கதிர், ஒரு விஷயம் மட்டும் சொல்கிறேன் என்னுடைய மகள் தாராவிற்கு நீ சித்தப்பா என்கிற முறையில் என்ன வேண்டுமானாலும் செய், அவளை வெட்டி போட்டால் கூட நான் கேட்க மாட்டேன். ஆனால், உன்னுடைய மனைவி ஜனனி என் மகள் இருக்கும் திசையில் கூட நிற்கவே கூடாது. ஜனனி ஒரு ராங்கி என்றால், ஈஸ்வரி ஒரு விஷம், அவர்களுக்கு உடம்பெல்லாம் விஷமாக இருக்கு என்று சொல்லி சத்தம் போட்டுக் கொண்டே இருக்கிறான். அப்போது நந்தினி, தாரா உங்களுக்கு மட்டும் மகள் இல்ல, நான் சுமந்து பெத்த மகள், அவளுக்கு யார் யார் என்ன என்ன செய்ய வேண்டும் என்று எனக்கும் தெரியும் என்று குரலை உயர்த்தி பேச, ஆத்திரத்தில் இருக்கும் கதிர், நந்தினியை அடிக்க பாய்கிறான். அப்போது நந்தினி அவன் கையை பிடித்து தடுக்கிறாள். இதையடுத்து என்ன ஆனது என்று பார்க்கலாம்.

எதிர்நீச்சல் தொடர்கிறது: அடிக்கப் பாய்ந்த கதிரின் கையை பிடித்த நந்தினி, இனி மேல் என் மேல கையை வெச்சா, நானும் என் மகளும் எங்கையாவது திசை தெரியாம போய்விடுவோம். அவ்வளவு தான் உங்களுக்கு மரியாதை, என் மகளுக்கு யாரு நலங்கு வைக்க வேண்டும் என்று நான் தான் முடிவு பண்ணனும். மீறி யாராவது நலங்கு வைக்க வந்து என் பொண்ணை தொட்டா அது, என் பிணத்தை தாண்டி தான் தொட முடியும் என்று ஆத்திரத்தில் கத்துகிறாள். அப்போது, கதிர், நீ செத்துப் போடி என்று, நந்தினியின் கழுத்தை பிடித்து நெரிக்க அனைவரும் தடுக்கின்றனர். அப்போது குறுக்கிட்ட ஈஸ்வரி, என்னால உங்களுடைய குடும்பத்தில் பிரச்சனை வேணாம். இப்போ, தாராவிற்கு ஒரு நல்ல விஷயம் நடந்திருக்கு. அப்பா, அம்மா போடுற சண்டையால் குழந்தைகள் பாதிக்கப்படக்கூடாது. கதிர் அவங்க அண்ணனுக்காக பேசுகிறார், நீ எனக்காக பேசுற, யார் முதலில் நலங்கு வைச்சா என்ன, யார் என்ன சொன்னாலுமே தாரா எனக்கும் மகள் தான். கதிர் சொல்வதை கேளு என்றார்.
அன்னைக்கே செத்து இருப்பேன்: இதையடுத்து, விசாலாட்சியை நலங்கு வைக்க அழைத்தும் அவர் வராததால், ரேணுகா நலங்கு வைக்கிறாள். பின், கதிர் விசாலாட்சியின் அறைக்கு தாராவை அழைத்துச் சென்று வாழ்த்தும்படி கூறுகிறார். ஆனால், விசாலாட்சி என்னை இனிமே எந்த விசேஷத்திற்கும் அழைக்காதீங்க, வெளியில வந்தா அவளுங்க முகத்தை நான் பாக்கணும் அவளுங்க என் மேல இருக்கிற பாசத்துனால, இந்த வீட்டுக்கு வந்தாங்கன்னு நினைச்சேன். ஆனால், அது எல்லாமே வேஷம். இவளுங்க கூட இருந்து குழி பறித்து இந்த குடும்பத்தை கெடுக்க தான் வீட்டுக்கு வந்து இருக்காளுங்க. என் மகன் இப்போ தலை குனிஞ்சு இருக்கிறதா என்னால பாக்கவே முடியல, இதை பார்ப்பதற்கு நான் அன்னைக்கே விஷம் குடித்து செத்து இருப்பேன். நான் இனிமே எந்த நல்ல காரியத்தையும் நான் பண்ண மாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கிறார் விசாலாட்சி.

குடும்பத்தை உடைச்சிடாதீங்க: விசாலாட்சி அறையில் இப்படி சொல்லிக் கொண்டு இருப்பதை கேட்ட குணசேகரன், கதிரை அழைத்து, நான் என் மகளை ஆசிர்வாதம் செய்கிறேன் என்று, மணி விழாவிற்காக வாங்கி வைத்திருந்த அனைத்து நகை, புடவைகளை எல்லாம் தாராவின் கையில் கொடுத்து இதுதான் உன்னுடைய பெரியப்பாவின் சீர், சந்தோஷமாக என்ன படிக்க வேண்டுமோ அதை படி உன்னுடைய விருப்பம் போல இரு என்று சொல்லி வாழ்த்துகிறார். பின், ரேணுகா மற்றும் நந்தினியை அழைத்த குணசேகரன், நான் இந்த வீட்டிற்கு பரோலில் வந்தது மணி விழாவிற்காக இல்லை, அம்மா ஆசை பட்டாங்க, அது இப்போ இல்லை என்று ஆகிவிட்டது. அசிங்கமும் பட்டாச்சு. வந்ததே தர்ஷனின் திருமணத்தை பார்ப்பதற்காகவும் என்னுடைய தம்பிகளுக்கு நான் செய்ய வேண்டிய கடமைகள் இருக்கிறது அதை செய்வதற்காகவும் தான் வந்தேன். இப்போது, நம் குடும்பத்தில் ஒரு நல்ல விஷயம் நடந்து இருக்கிறது. அதை எப்படி சிறப்பாக செய்ய முடியுமோ அப்படி செய்யுங்கள். இன்று வீட்டில் நடந்த பிரச்சனைக்காக என் தம்பிகளை கஷ்டப்படுத்தாதீங்க. நான் பாடுபட்டு பட்ட கஷ்டம் எல்லாம் இந்த குடும்பம் நல்லா இருக்க வேண்டும் என்பதற்காகத்தான். அந்த குடும்பத்தை உடைத்துவிடாதீர்கள் என்று சொல்லி கண் கலங்குகிறார்.
இன்றைய ப்ரோமோ: இதைவிடத்தில் இன்றைய எபிசோடு காண ப்ரமோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் ஈஸ்வரியின் அப்பா நான் என் மகளை தலை முழுகி விட்டேன். அவள் செத்துவிட்டாள் மாப்பிள்ளை என்று குணசேகரனின் கையை பிடித்து கதறுகிறார் மறுபக்கம், குணசேகரன் பெயிலை கேன்சல் செய்துவிட்டு சிறைக்கு செல்ல இருப்பது, தம்பிகளுக்கு தெரிய வர, கோவப்படும் கதிர், யாருக்குமே சொல்லாமல் இப்படி ஒரு முடிவை ஏன் எடுத்தீர்கள் என்று கேட்கிறார். அப்போது, வழக்கறிஞர், இந்த வழக்கில் நந்தினி மற்றும் ரேணுகா நீதிமன்றத்திற்கு வரவில்லை என்றால் நிச்சயம் இந்த வழக்கில் ஒரு நல்ல முடிவு கிடைத்துவிடும் என்று சொல்கிறார். இப்படி பரபரப்பான சூழ்நிலையில் எதிர்நீச்சல் தொடர்கிறது சென்று கொண்டிருக்கிறது பரோலில் வந்து இருக்கும் குணசேகரன், மணி விழா நடக்காத ஆத்திரத்தில் இருக்கிறார். இதனால், தம்பிகளை பகடை காயாக வைத்து வைத்து பெரிய திட்டத்தை போடுகிறார். இதையடுத்து எதிர்நீச்சல் சீரியலில் என்ன நடந்தது என்று அடுத்த செய்தியில் பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











