வன்மத்துடன் வந்த அறிவுக்கரசி.. தர்ஷனின் திருமணம் நடக்குமா? எதிர்நீச்சல் தொடர்கிறது!

சென்னை: குணசேகரன், தாராவை ஆசிர்வாதம் செய்து, மணி விழாவிற்காக வாங்கி வைத்திருந்த அனைத்து நகை, புடவைகளை எல்லாம் தாராவின் கையில் கொடுத்து இதுதான் உன்னுடைய பெரியப்பாவின் சீர், சந்தோஷமாக என்ன படிக்க வேண்டுமோ அதை படி, உன்னுடைய விருப்பம் போல இரு என்று சொல்லி வாழ்த்துகிறார். பின், ரேணுகா மற்றும் நந்தினியை அழைத்த குணசேகரன், நான் இந்த வீட்டிற்கு பரோலில் வந்தது மணி விழாவிற்காக இல்லை, அம்மா ஆசை பட்டாங்க, அது இப்போ இல்லை என்று ஆகிவிட்டது. அசிங்கமும் பட்டாச்சு. நான் பரோலில் வந்ததே தர்ஷனின் திருமணத்தை பார்ப்பதற்காகவும் என்னுடைய தம்பிகளுக்கு நான் செய்ய வேண்டிய கடமைகள் இருக்கிறது அதை செய்வதற்காகவும் தான் வந்தேன்.

இப்போது, நம் குடும்பத்தில் ஒரு நல்ல விஷயம் நடந்து இருக்கிறது. அதை எப்படி சீரும் சிறப்பாக செய்ய முடியுமோ அப்படி செய்யுங்கள். இன்று வீட்டில் நடந்த பிரச்சனைக்காக என் தம்பிகளை கஷ்டப்படுத்திடாதீங்க. நான் பாடுபட்டது, கஷ்டப்பட்டது எல்லாம் இந்த குடும்பம் நல்லா இருக்க வேண்டும் என்பதற்காகத்தான். அந்த குடும்பத்தை உடைத்துவிடாதீர்கள் என்று சொல்லி கண் கலங்குகிறாள். இதையடுத்து, நேற்று என்ன நடந்தது என்று முழு விமர்சனத்தை பார்க்கலாம்.

Ethirneechal Thodargiradhu Suntv promo

எதிர்நீச்சல் தொடர்கிறது: சக்தி மற்றும் ஜனனி இருவரும் தங்களுடைய அறையில் பேசிக் கொண்டு இருக்கிறார்கள். அப்போது ஜனனி, உன்னுடைய அண்ணாக்கு இப்படி பேசுவது தான் வழக்கம். இப்படி பேசியே ஒவ்வொருத்தரையும் தன்னுடைய வலையில் அவர் விழ வைக்கிறார். இது தெரியாமல் நீயும் ஆடிக்கிட்டு இருக்க என்கிறாள். இது கேட்டு கடுப்பான சக்தி, என்னுடைய அண்ணனை பத்தி எனக்கு நல்லா தெரியும், உன்னுடைய அப்பா எப்படி உன்னை கஷ்டப்பட்டு வளர்த்தாரோ, அதேபோலத்தான் எங்க அண்ணன் எங்களுக்காக நிறைய கஷ்டங்களை பட்டு இருக்காரு, எப்படி நீ உங்க அப்பாவை விட்டுக் கொடுத்து பேச மாட்டியோ, அதே போல நானும் என்னுடைய அண்ணாவை விட்டுக் கொடுக்க மாட்டேன். நீயும் நானும் குடும்பம் நடத்துறது வேற விஷயம். அதுக்காக இந்த குடும்பத்தினுடைய எல்லா விஷயத்துலயும் நீ தலையிடாதே ஜனனி, இதுதான் நான் உனக்கு சொல்ற கடைசி எச்சரிக்கை என்கிறான்.

என் மகள் செத்துவிட்டாள்: வீட்டிற்கு வரும் ஈஸ்வரியின் அப்பா, குணசேகரனை பார்த்து மன்னித்து விடுங்க மாப்பிள்ளை, இந்த மணி விழாவை நான் சீரும் சிறப்புமாக நடத்தி கொடுப்பேன் என்று வாக்கு கொடுத்தேன். ஆனால், அந்த வாக்கை என்னால் காப்பாற்ற முடியவில்லை. என்னுடைய மகளே இப்படி செய்வாள் என்று நான் நினைக்கவே இல்லை, இத்துடன் என்னுடைய மகளை நான் தலை முழுகி விட்டேன். நான் செத்தாக்கூட அவ என்னை வந்து பார்க்கவே கூடாது. இந்த வீட்டில் சொந்தம் என்றால் அது நீங்களும் தர்ஷன் மட்டும் தான் என்று கண் கலங்கி பேசி விட்டு செல்கிறார்.

எதிரியை வேராடு அழிப்பேன்: இதையடுத்து ஜான்சி ராணி இந்த குடும்பத்துல யாருக்குமே உன்னை பத்தி கவலையே இல்ல, மணி விழா நடக்காம போச்சு, நீ எவ்வளவு வருத்தப்படுவேனு யாரும் உன்ன பத்தி கவலையே இல்லமா இருக்காங்க. எப்படி இருந்த ஆளு நீ, இப்போ இப்படி அடங்கி போயி இருப்பதை பார்க்கும் போது, எனக்கே கஷ்டமாக இருக்கிறது என்று குணசேகரனை உசுப்பு ஏத்துவது போல பேசுகிறாள். அதைக் கேட்டு கடுப்பான குணசேகரன், நான் அடங்கி போகவில்லை, அடங்கி போகவும் மாட்டேன் வெளியில் இருப்பவர்கள் எல்லாம் ஜெயிலுக்கு போன குணசேகரன் அடங்கிவிட்டான் என்று சொல்கிறார்கள். ஆனால் குணசேகரன் எதிரி மேல கரம் வைத்தால், அந்த எதிரியை கொத்தோடு வேரோடு அழிக்காமல் அடங்க மாட்டான். நீ கூட கொஞ்சம் ஜாக்கிரதையா இரு என்று ஜான்சியை பார்த்து கோவத்துடன் சொல்ல... ஜான்சி ராணி பதறிப் போகிறாள்.

Ethirneechal Thodargiradhu Suntv promo

கல்யாணம் நடக்குமா நடக்காதா: சிறையில் இருந்து ஜாமுனில் வெளியே வந்த அறிவு நேராக குணசேகரனின் வீட்டிற்கு வந்து என்னுடைய தங்கைக்கும் உங்களுடைய மகனுக்கும் திருமணமும் நடக்குமா? நடக்காதா அதை முதலில் சொல்லுங்கள். நான் இவ்வளவு கஷ்டத்தையும் தாங்கிக் கொண்டதற்கு காரணம் இந்த கல்யாணம் நடக்க வேண்டும் என்பதற்குத் தான். இந்த கல்யாணம் நடக்குமா... நடக்காதா.. அதை முதலில் சொல்லுங்க என்கிறாள். அப்போது குணசேகரன், அதை முடிவு செய்ய வேண்டிய நீயும், என் தம்பிகளும் தான் என்கிறார். இதைத்தொடர்ந்து, தர்ஷனை அழைத்து, இந்த கல்யாணம் நடக்கும் என்று நான் சொல்வதைவிட, நீ சொன்னால் தான் சரியாக இருக்கும் தர்ஷா, இந்த கல்யாணம் நடக்குமா என்று கேட்கிறார். அப்போது தர்ஷன் நான் உங்கள் தங்கையை திருமணம் செய்து கொள்கிறேன் என்று அறிவிடம் சொல்கிறான். இதைக்கேட்ட நந்தினி, ஈஸ்வரி என அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.

கோர்ட்டிற்கு வரக்கூடாது: தொடர்ந்து பேசிய குணசேகரன், நான் பரோலை கேன்சல் செய்துவிட்டேன், மீண்டும் ஜெயிலுக்கு செல்கிறேன். என்னுடைய பரோலை கேன்சல் செய்வதற்காக நான் அட்வகேட்டிடம் பேசிவிட்டேன் என்று சொல்ல குடும்பத்தில் இருக்கும் அனைவருமே எதற்கு இப்படி செய்தீர்கள் என்று கேட்கின்றனர். அப்போது, வீட்டுக்கு வரும் வழக்கறிஞர் நான் பரோலை கேன்சல் செய்வதற்காகத்தான் சென்றேன். ஆனால், உங்களுக்கு ஜாமீன் கிடைக்கவே வாய்ப்பு இருக்கிறது என்று தெரிந்ததும். ஜாமீனுக்கு அப்பில் செய்திருக்கிறேன். இந்த ஜாமீனில் கிடைக்க வேண்டும் என்றால், நந்தினியும் ரேணுகாவும் கோர்ட்டுக்கு வரக்கூடாது, அவர்கள் இருவரும் நான் சொல்லுவது போல நீதிமன்றத்தில் சொல்லிவிட்டால், இந்த வழக்கையே இல்லாமல் செய்துவிடலாம் என்று சொல்கிறார்.

இன்றைய ப்ரோமோ: இதையடுத்து, இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில், விசாலாட்சி, ஈஸ்வரியிடம் நீ இந்த வீட்டில் உன் பசங்களுக்கு அம்மா மட்டும் தான். மத்த எந்த விஷயத்திலும் நீ தலையிடக்கூடாது என்கிறாள். மறுபக்கம் அறிவு, இந்த திருமணம் நடந்தே ஆக வேண்டும், இந்த கல்யாணத்தில் எவ குறுக்கே வந்தாலும் அவளை நான் கொன்னு புதைத்துவிடுவேன். கோர்ட்டிற்கு வரும் குணசேகரன் நான் நிறைய விஷயங்களை பார்த்து நொந்து போய்விட்டேன். இதற்கு மேலும் என்னால் பொறுமையாக இருக்க முடியாது. எனக்கு பரோல் தேவை இல்லை நான் மீண்டும் உள்ளேயே போய்விடுகிறேன். இதற்கு மேல் நடக்கும் எல்லா விஷயத்தையும் நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள் என்று பொடி வைத்து பேசிவிட்டு செல்கிறார். இதையடுத்து, என்ன நடக்கப்போகிறது என்பதை அடுத்த செய்தியில் பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X