விஷ பாம்பாக மாறிய குணசேகரன்.. அண்ணனின் சூழ்ச்சியில் சிக்கிய தம்பிகள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது!
சென்னை: குணசேகரன், நான் பரோலை கேன்சல் செய்துவிட்டேன், இதுபற்றி நான் அட்வகேட்டிடம் பேசிவிட்டேன் என்று சொல்ல குடும்பத்தில் இருக்கும் அனைவருமே எதற்கு இப்படி செய்தீர்கள் என்று கேட்கின்றனர். அப்போது, வீட்டுக்கு வரும் வழக்கறிஞர் நான் பரோலை கேன்சல் செய்வதற்காகத்தான் சென்றேன். ஆனால், குணசேகரனுக்கு ஜாமீன் கிடைக்கவே வாய்ப்பு இருக்கிறது என்று தெரிந்ததும். ஜாமீனுக்கு அப்பில் செய்திருக்கிறேன். ஆனால், நந்தினி, ரேணுகா நான் சொல்வது போல சொன்னால், நிச்சயம் ஜாமீன் கிடைத்துவிடும் என்கிறார்.
மறுபக்கம் அறிவுகரசி, என் தங்கையின் திருமணம் நடந்தே ஆக வேண்டும், இந்த கல்யாணத்திற்காக நான் படாத கஷ்டத்தை எல்லாம் பட்டுவிட்டேன். கொற்றவை என் மேல இல்லாத பழி எல்லாத்தையும் போட்டு என்ன சிறையில் கொடுமைப்படுத்துனா... அதே போல, இந்த பவித்ராவால் தான் நான் ஜெயிலுக்கு போனேன் இவளுங்க ரெண்டு பேரையும் பழிதீர்த்தால் தான் நன்றாக இருக்கும். அதுமட்டுமில்லாமல் இந்த கல்யாணத்தில் எவ குறுக்கே வந்தாலும் அவளை நான் கொன்னு புதைத்துவிடுவேன் என்று தீராத பழியுடன் இருக்கிறாள் அறிவுக்கரசி. இதையடுத்து, நேற்று என்ன நடந்தது என்று பார்க்கலாம்.

எதிர்நீச்சல் தொடர்கிறது: ஜாமீன் கிடைத்து வெளியே வந்த குணசேகரன், தன்னுடைய தம்பிகளிடம், ஒரு முக்கியமான விஷயம் பேச வேண்டும் என்று சொல்லிவிட்டு, இனிமேல் நான் அந்த வீட்டுக்கு வர போவது இல்லை. அந்த வீட்டில் என்னுடைய மரியாதை மிகவும் குறைந்துவிட்டது. நீங்கள் அனைவரும் சேர்ந்து இருந்து என்னுடைய மகன் தர்ஷன் திருமணத்தை நடத்தி விடுங்கள் என்று கூறுகிறார். மேலும், வீட்டில் இருக்கும் மருமகள்கள் நான்கு பேரும் ஒத்துமையாக இருக்கிறார்கள், அந்த ஒற்றுமையை நம்மிடம் கூட இல்லை. அது தொழிலாக இருந்தாலும் சரி, குடும்பமாக இருந்தாலும் சரி, நான்கு பேரும் சேர்ந்து தான் முடிவு எடுக்கிறார்கள். ஈஸ்வரி மணி விழாவில் மணமேடைவையில் உட்காருவதற்கு ரெடியாகிவிட்டால். ஆனால், ஜனனி இந்த திருமணம் நடக்காது என்று சொன்னதும் மாலையை கழட்டி வீசிவிட்டு சென்றுவிட்டாள். அந்த வீட்டில் அவர்களின் கை தான் ஓங்கி இருக்கிறது.
குணசேகரன் போட்ட பிளான்: அவர்களுடைய ஒரே எதிரி நான் மட்டும் தான், உங்களிடம் அவர்கள் நன்றாகத்தான் நடந்து கொள்கிறார்கள். ஆனால், அவர்களுக்கு எதிரியாக இருப்பது நான் தான். மீண்டும் அந்த வீட்டிற்கு வந்து அவமானப்படவோ அசிங்கப்படவோ, நான் தயாராக இல்லை. இதனால், இங்கிருந்தே விலகிக் கொள்கிறேன். அம்மாவிடம் மட்டும் சொல்லிவிடுங்கள் என்று சொல்ல, தம்பிகள் அனைவரும் பரிதவித்து போயி என்ன அண்ணா சொல்றீங்க, இனிமே அவங்க உங்களுடைய பிரச்சனையில் தலையிடவே மாட்டாங்க எப்பொழுதும் போல நீங்க தான் அந்த வீட்டின் ராஜா என்கின்றனர். உடனே குணசேகரன் அது எல்லாம் சரிபட்டு வராது மீண்டும் அந்த வீட்டிற்கு நான் வந்தால், நான் பட்ட அவமானத்தை நினைத்தே இறந்து விடுவேன். தயவு செய்து என்னை தனியாக விட்டுவிடுங்கள் என்கிறார்.

தம்பிகளை தூண்டிவிட்ட குணசேகரன்: அப்போது சக்தி குறுக்கிட்டு, இனிமேல் நான்கு பேரோட பிரச்சனையும் உங்களுக்கு இருக்கவே இருக்காது. யாரும் உங்கள் வார்த்தையை மீறி பேச மாட்டார்கள் என்கிறார். இதையடுத்து, குணசேகரன், நான் இரண்டு நாட்கள் திருச்செந்தூர் சென்று விட்டு வருகிறேன். அதற்குள் உங்களுடைய வீட்டில் இருப்பவர்களை பேசி சமாதானம் செய்து விடுங்கள் நான் வீட்டுக்கு மீண்டும் வரும் போது வீடு பழையபடி இருக்க வேண்டும். முதலில் அவர்கள் நான்கு பேரையும் பிரிக்க வேண்டும். மீண்டும் அந்த வீட்டில் ஏதாவது எனக்கு அவமானம் நடந்தால், நான் அந்த வீட்டில் இருக்கவே மாட்டேன் என்று. தம்பிகளை பொண்டாட்டிக்கு எதிராக தூண்டிவிடுகிறார் குணசேகரன்.
அவமானப்படுத்தும் விசாலாட்சி: மறுபக்கம் வீட்டில் நந்தினியின் பெற்றோர், தாரா பெரிய பொண்ணாகி விட்டதால், அதற்காக விழா நடத்துவதற்கான ஏற்பாடுகளை குறித்து பேசுவதற்காக வருகின்றனர். அப்போது விசாலாட்சி, ஜான்சி ராணி இருவரும் சமைத்துக் கொண்டு இருக்க, இவர்களின் குரல் கேட்டு வெளியே வந்து பார்க்கின்றனர். அப்போது விசாலாட்சி எதற்காக வீட்டிற்கு வந்தீர்கள். என்னுடைய பையனின் மணி விழாவிற்கு வர மட்டும், சம்மந்தி அம்மாளுக்கு முடியாம இருந்தது. இப்போது எதுக்கு வந்தீங்க என்றும், இந்த வீட்டில், இனி மேல், வேறு எந்த விழாவும் நடக்ககக்கூடாது. இந்த வீட்டில் விசேஷம் நடக்கிறது என்றால் அது தர்ஷனின் திருமண மட்டும் தான் என்று சொல்ல, இதை கேட்டு நந்தினி ஆத்திரப்படுகிறாள். இப்படி பேசுவது உங்களுக்கே சரியானதாக தெரிகிறதா... தர்ஷன் உங்களுடைய பேரன் என்றால் தாராவும் உங்களுடைய பேத்தி தானே. வீட்டில் எப்பொழுதுமே நீங்களும் உங்களுடைய மூத்த மகன் மட்டும் தான் சந்தோஷமாக இருக்க வேண்டுமா. நீங்கள். நினைத்தது மட்டும் தான் நடக்க வேண்டுமா என்று ஆத்திரத்தோடு கத்துகிறாள். தொடர்ந்து பேசிய நந்தினி, தன்னுடைய அப்பாவிடம், தாராவோட விசேஷம் தடபுடலாக நடக்கணும். அதுக்காக நீங்க எந்த சொத்தை விப்பீங்கன்னு எனக்கு தெரியாது. நான் இந்த விசேஷத்தை நிச்சயம் நடத்துவேன் என்று கோவப்பட்டு கத்துகிறாள்.
மொத்தமாக மாறி சக்தி: இதையடுத்து இன்றைய எபிசோடுக்கான ப்ரமோ வெளியாகி உள்ளது. அந்த ப்ரோமோவில், கதிர், சக்தி, ஞானம் என அனைவரும் காரில் வந்து கொண்டிருக்க, அப்போது, சக்தி, இப்போது, நாம் பிரச்சனை செய்தால், அவர்கள் குழந்தைகளை அழைத்துக் கொண்டு சென்று விடுவார்கள், ஏற்கனவே அம்மாவிற்கு உடம்பு சரியில்லை என்று சொன்னதால் தான் மீண்டும் வந்தார்கள் வீட்டிற்கு வந்தார்கள். இந்த முறை, அவர்கள் வீட்டை விட்டு வெளியே சென்றால் மீண்டும் திரும்ப வரவே மாட்டார்கள் என்கிறார். மறுபக்கம், கதிரிடம் நந்தினியின் பெற்றோர் தாராவின் விசேஷம் குறித்து பேசுகிறார். அப்போது, கதிர், அண்ணா இப்போது இல்லை அவர் வந்த உடனே பேசிக் கொள்ளலாம் என்று சொல்கிறார்.
இதை கேட்டு, மேலும் ஆத்திரம் அடைந்த நந்தினி வீட்டில் மூலவரை கேட்டு தான் எல்லாத்தையும் முடிவு செய்ய வேண்டுமா... தாரா நம்முடைய மகள், நாம என்ன செய்கிறோமோ, அதனை இஷ்டப்படி செய்யலாம் என்று சொல்ல கோவப்படும் கதிர், நந்தினியை அடிக்க பாய்கிறான். இப்படி பரபரப்பான சூழ்நிலையில் எதிர் நீச்சல் தொடர்கிறது சீரியல் சென்று கொண்டு இருக்கிறது. இதையடுத்து என்ன ஆனது என்பதை அடுத்த செய்தியில் பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











