நடு இரவில் அலறிய நந்தினி.. நாலு பேரை பிரிக்க சதி செய்யும் குடும்பம்.. எதிர்நீச்சல் தொடர்கிறது!
சென்னை: ஜாமீன் கிடைத்து வெளியே வந்த குணசேகரன், தன்னுடைய தம்பிகளிடம், இனிமேல் நான் அந்த வீட்டுக்கு வர போவது இல்லை. அந்த வீட்டில் என்னுடைய மரியாதை மிகவும் குறைந்துவிட்டது. வீட்டில் இருக்கும் மருமகள்கள் நான்கு பேரும் ஒத்துமையாக இருக்கிறார்கள், அந்த ஒற்றுமை நம்மிடம் கூட இல்லை. அது தொழிலாக இருந்தாலும் சரி, குடும்பமாக இருந்தாலும் சரி, நான்கு பேரும் சேர்ந்து தான் முடிவு எடுக்கிறார்கள். மீண்டும் அந்த வீட்டிற்கு வந்து அவமானப்படவோ, அசிங்கப்படவோ, நான் தயாராக இல்லை. நான் எங்காவது போய்விடுகிறேன் என்று சொல்ல, தம்பிகள் அனைவரும் இனிமேல் யாரும் உங்களுக்கு எதிராக பேசமாட்டார்கள். உங்களுக்கு எந்த அவமானமும் நடக்காது என்று சொல்கின்றனர். அப்படி என்றால், அவர்கள் நான்கு பேரையும் பிரிக்க வேண்டும் என்று சொல்லிவிட்டு திருச்செந்தூர் செல்கிறார். இதையடுத்து, நேற்று என்ன நடந்தது என்று பார்க்கலாம்.
நந்தினி தனது பெற்றோரிடம் இந்த சடங்கு விழா சீரும் சிறப்புமாக நடக்க வேண்டும் அதற்கு எவ்வளவு பணம் செலவானாலும் பரவாயில்லை என்று சொல்ல, அப்போது நந்தினியின் அம்மா இந்த விஷயத்தில் கோபப்பட வேண்டாம். கொஞ்சம் அமைதியாக இரு, நாங்கள் போய்விட்டு பிறகு வருகிறோம் என்று சொல்கின்றனர். இதனால், கடுப்பான நந்தினி, இந்த வீட்டில் உங்களால் இரண்டு நிமிடம் கூட இருக்க முடியவில்லை. ஆனால், இப்படி ஒரு வீட்டில் தான் நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். தயவு செய்து, தாராவின் சடங்கு விஷயத்தை பேசி முடித்துவிட்டு, எனக்கு ஒரு முடிவு சொல்லிவிட்டு நீங்க வீட்டுக்கு போங்க என்று கோவத்துடன் கத்திவிட்டு சமையல் அறைக்கு செல்கிறாள் நந்தினி.
எதிர்நீச்சல் சீரியல்: மறுபக்கம், குணசேகரன் திருச்செந்தூர் சென்றுவிட தம்பிகள் அனைவரும் காரில் வந்து கொண்டு இருக்கின்றனர். அப்போது பேசிய கதிர், சத்தி அண்ணன் என்ன சொல்லிட்டு போனது ஞாபகம் இருக்கா, அவர் வருவதற்குள் வீட்டுல இருக்குற பொம்பளைங்கள நம்ப வழிக்கு கொண்டு வரணும். இதுல உன்னுடைய பொண்டாட்டி ஜனனி தான் விஷம். அவளை மட்டும் அடக்கிட்டால் மத்தவங்க அமைதியா ஆயிடுவாங்க என்று சொல்கிறான். அப்போது பேசிய ஞானம், நானும் இத்தனை நாளாக ஜனனி தான் இந்த வீட்டில் நடக்கும் பிரச்சனைக்கு காரணம் என்று நினைத்திருந்தேன். ஆனால், ஜனனியை விட மோசமானவர்களாக இருக்கிறார்கள் அண்ணி. அவங்க ஊர கூட்டி வச்சு கடைசில அவமானப்படுத்திட்டாங்க என்று சொல்கிறான். அப்போது, கதிர் எனக்கு வர கோவத்துல வீட்டுக்கு போனதும் எல்லாரையும் தூக்கி போட்டு மிதி மிதினு மிதிச்சா சரியாகிவிடும் என்று சொல்கிறான்.

ஆத்திரப்பட்ட சக்தி: உடனே சக்தி, என்ன அண்ணா முட்டாள் தனமா பேசுற, இப்ப நீ போயி அவங்கள அடிச்சா மட்டும் அவங்க எல்லாம் உன் வழிக்கு வந்துடுவாங்கன்னு நினைக்கிறியா... எல்லாம் கையை மீறி போய்விடும், எல்லாரும் அவங்க வீட்டுக்கு போயிடுவாங்க. இதுக்கு முன்னாடி அவங்க வீட்டுக்கு போன போது, அம்மாக்கு உடம்பு சரியில்லன்னு கூப்பிட்டதுனால வந்தாங்க. ஆனால், இந்த முறை அப்படி செய்ய மாட்டாங்க பிள்ளைகளையும் கூட்டிகிட்டு போயிடுவாங்க. நான் சில விஷயத்தில் அமைதியாக இருப்பதால், என் பொண்டாட்டிக்கிட்ட இந்த குடும்பத்தை அடமானம் வைப்பனு நினைக்காதீங்க. அவ எப்படி சில விஷயத்துல, நான் எடுக்கும் முடிவு தான் சரி என்று இருக்காளோ அதே போல, என்னுடைய குடும்ப விஷயத்துல நான் எடுக்கிறது தான் முடிவு. நான், ஜனனி கிட்ட பேசி இந்த பிரச்சனைக்கு ஒரு முடிவு கட்டுகிறேன். நீங்க அண்ணிங்க கிட்ட பேசி இந்த பிரச்சனைக்கு என்ன முடிவு செய்ய முடியுமோ அதை செய்யுங்க. அதை விட்டுவிட்டு அடிப்பேன் மிதிப்பே என்றால் குடும்பம் நடத்த முடியாது என்கிறான் சக்தி.
பின் அனைவரும் வீட்டுக்கு வர, விசாலாட்சி குணசேகரனை வரவேற்பதற்காக ஆர்த்தி எடுத்துக்கொண்டு செல்கிறாள். ஆனால், குணசேகரன் இல்லாததை பார்த்து அதிர்ச்சி அடைந்த விசாலாட்சி அவனுக்கு ஜாமீன் உண்மையிலேயே கிடைத்ததா இல்லை என்று கேட்க, அப்போது கதிர், அவருக்கு ஜாமீன் கிடைத்துவிட்டது. ஆனால், அவர் திருச்செந்தூர் போய் இருக்கிறார் நாளை காலை வந்து விடுவார், நீ எதுக்கும் பயப்பட வேண்டாம் என்று சொல்லிவிட்டு உள்ளே செல்கிறார்.
அடிக்க பாய்ந்த கதிர்: அப்போது நந்தினியின் அப்பா, கதிரிடம் தாராவிற்கு சடங்கு வைக்க வேண்டும் அதற்காக நாள் குறித்து விட்டு போகலாம் என்று வந்தோம் என்று சொல்கிறார். அப்போது கதிர், அண்ணன் இப்போது இல்லை அண்ணன் வந்தவுடன் இது பற்றி பேசிக் கொள்ளலாம் என்று சொல்கிறான். அதனால் ஆத்திரமடைந்த நந்தினி பெத்தவங்க, அப்பா அம்மா இருக்கும்போது மூலவர் கிட்ட கேட்டுத்தான் சடங்கு செய்ய வேண்டுமா? உங்கள் அம்மா, தாராவிற்கு எந்த விஷயத்தை செய்யக்கூடாது. அடுத்து இந்த வீட்டில் நடக்கும் விசேஷம் தர்ஷன் உடைய கல்யாணம் தான் என்று சொல்றாங்க. அப்போ என்னுடைய மகளுக்கு எந்த ஒரு நல்ல விசேஷமும் நடக்க கூடாதா என்று ஆத்திரத்தில் சண்டை போட, ஆத்திரப்படும் கதிர் அவளை அடிக்க பாயா அனைவரும் கதிரை சமாதானம் படுத்துகின்றனர். பின் நந்தினியின் அப்பா, இந்த வீட்டில் உன்னுடைய மகளுக்கு முதல் முதலாக ஒரு விசேஷம் நடக்கும்போது, உன்னுடைய அப்பா அம்மா இருக்க வேண்டும் என்று நீ ஆசைப்படுவியோ.. அதேபோல தான் மாப்பிள்ளையும் அவருடைய அண்ணன் இருக்க வேண்டும் என்று விருப்பப்படுவார். இதனால் அவர் வந்த பிறகு இது குறித்து பேசிக் கொள்ளலாம் என்று சென்று விடுகின்றனர்.
இன்றைய ப்ரோமோ: இது தொடர்ந்து கதிர், நந்தினியிடம் நாளை காலை வெளி ஊருக்கு போக வேண்டும், போய் இரண்டு நாட்கள் தங்கிவிட்டு வரலாம், நீ நாளைக்கு சீக்கிரம் எழுந்துவிடு என்று சொல்கிறான். உடனே நந்தினி, தாரா இப்போத்தான் பெரிய பொண்ணாகி இருக்கிறாள் அவளை வைத்துக்கொண்டு வெளியில் எங்குமே போகக்கூடாது என்று சொல்கிறாள். ஆனால், கதிர் நிச்சயமாக நாம் போக வேண்டு என்று சொல்ல நந்தினி என்ன செய்வது என்று தெரியாமல் குழம்புகிறாள். இதையடுத்து, இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில், சக்தி, ஜனனியிடம் உனக்கு பிடிவாத குணம் அதிகமாக இருக்கு எதற்கு எடுத்தாலும் ரொம்ப பிடிவாதம் பிடிக்கிற என்கிறான். மறுபக்கம் ரேணுகா ஹாலில் படுத்துக்கொண்டு இருக்க அப்போது வரும் நந்தினி, அக்கா இவங்க நம்ம இரண்டு பேரையும் ஊருக்கு கூட்டிக்கொண்டு போய்விட்டு, ஜனனிக்கும், ஈஸ்வரி அக்காவிற்கும் பிரச்சனை கொடுக்க பார்க்கிறார்கள் என்று சொல்ல, ரேணுகாவும் எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது. இருந்தாலும், இந்த திட்டத்தை எப்படி முறியடிப்பது என்று யோசிக்கிறார்கள். இதையடுத்து என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











