கல்யாணமா.. கருமாதியா?அறிவுக்கரசியிடம் சிக்கிய தர்ஷன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது!
சென்னை: நந்தினி, ரேணுகாவை பார்த்து மேகமலைக்கு டூர் போகிற விஷயத்தை சொல்ல, ரேணுகாவும் நானும் ஊட்டிக்கு டூர் போகிறேன் என்கிறாள். அப்போது நந்தினி, நம்ம இரண்டு பேரையும் வெளியூருக்கு டூருக்கு அனுப்பி வைத்துவிட்டு, இங்கே ஜனனி மற்றும் ஈஸ்வரி அக்காவிற்கு பிரச்சனை கொடுக்க பார்க்கிறார்கள். இதனால், நிச்சயம் பிரச்சனை நடக்கும் என்று சொல்கிறாள். உடனே ரேணுகா, அதில் சந்தேகமே இல்லை அதற்காகத்தான் நம்மலை ஊருக்கு அனுப்ப பிளான் போடுகிறார்கள். ஆனால், இதை எப்படி தடுப்பது என்று தெரியவில்லை என்று சொல்கிறாள். இது மிகவும் ஈஸியான வேலை அக்கா, இந்த விஷயத்தை அத்தையிடம் சொல்லிவிட்டால் அவர்களை நாம் வெளியூருக்கு செல்வதை தடுத்து விடுவார்கள். அங்களுக்கு நாம புருசனுடன் சேர்ந்து தெருமுனைக்கு போவதே பிடிக்காது. அப்படி இருக்கும் டூருக்கு எப்படி அனுப்புவார்கள். இதனால், இந்த விஷயத்தை அவர்களிடம் சொல்லிவிடலாம், பின் அவர்களே தடுத்து விடுவார்கள் என்று பிளான் போடுகின்றனர். இதையடுத்து என்ன ஆனது என்று பார்க்கலாம்.
நந்தினியும் ரேணுகாவும் பிளான் போட்டபடியே விசாலாட்சியிடம் ஊருக்கு போற விஷயத்தை சொல்கின்றனர். அதைக்கேட்டு கடுப்பான விசாலாட்சி. என்னடி.. சொல்ற, டூருக்கு போறியா... இப்பதான் உன்னுடைய பொண்ணு பெரிய பொண்ணாகி இருக்கா, அவளுக்கு தலைக்கே ஊத்தல அதுக்கு முன்னாடி டூருக்கு நீ எப்படி போவ, தாராக்கு சடங்கு பண்ணாம வெளியில் எங்கேயும் போகக்கூடாது என்று உனக்கு தெரியாதா.. என்று கேட்கிறாள். உடனே நந்தினி, எனக்கு எல்லா விஷயமும் தெரியும் அத்தை. ஆனால், உங்களுடைய மகன் தான் ஊருக்கு போக வேண்டும், தாரா ஆசைப்பட்டுட்டா அவளை கூட்டிக்கிட்டு போக வேண்டும் என்று ஒத்த கால்ல நிக்கிறாரு என்று சொல்கிறாள். அப்போது குறுக்கிட்டு பேசிய ரேணுகா, நானும் ஊட்டிக்கு போறேன். என்னுடைய மகள் படிப்பு விஷயமாக என் புருஷன் என்னை ஊட்டிக்கு கூட்டிக்கிட்டுபோறாரு. அப்படியே அங்க ரெண்டு நாலு இருந்துவிட்டு எல்லா இடத்தையும் சுற்றி பார்த்தது விட்டு வரோம். காலம் போனால் கடைசியில இப்பதான் என்னுடைய வீட்டுக்காரருக்கு, என்ன ஊருக்கு கூட்டிட்டு போகணும்னு நினைப்பே வந்து இருக்கு, இதனால நான் ஊருக்கு கிளம்பி போயிட்டு வந்து விடுகிறேன் என்று சொல்கிறாள் ரேணுகா.

நாளைக்கு சடங்கு: இதைக்கேட்டு கோவப்பட்ட விசாலாட்சி, என்னங்கடி நெனச்சுக்கிட்டு இருக்கீங்க. ஜாமீனுக்கு போன என்னுடைய மகன் குணசேகரன் இன்னும் வீட்டுக்கு வரல. அவன் எந்த திசையில இருக்கான்னு தெரியல அவனுடைய ஃபோன் போகல, கோயிலுக்கு போறேன்னு சொன்னவன் இன்னும் வரவே இல்ல. அது மட்டும் இல்லாம தாரா பெரிய பொண்ணாகி இருக்கா. அவள பாக்காம நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து ஊர் சுத்த போறீங்களா? அதெல்லாம் முடியவே முடியாது என்று சத்தம் போடுகிறாள். மேலும் கதிரை அழைத்து கதிர் தாராவிற்கு சடங்கு செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய், நாளைக்கு சடங்கு செய்து விட வேண்டும் என்று சொல்கிறாள்.
கோவப்பட்ட நந்தினி: இதைக்கேட்டு ஆத்திரமடைந்த நந்தினி, நேற்று இந்த வீட்டில் விசேஷம் நடந்தால் அது தர்ஷன் உடைய திருமணம் தான் என்று சொன்னீங்க, இப்போ தாராவிற்கு நாளைக்கே சடங்கு செய்ய வேண்டும் என்று சொன்ன என்ன அர்த்தம். என்னுடைய மகளுடைய சடங்கு, தடபுடலா நடக்கணும், எங்க வீட்டு சொந்த பந்தங்களை அழைத்து நடக்க வேண்டும். இப்படி அவசரப்பட்டு செய்யக்கூடாது எங்கள் வீட்டில் இருந்து என் அப்பா, அம்மா, மாமா என அனைவரும் வருவார்கள் அவர்களிடம் பேசி என்ன விஷயம் என்று முடிவு செய்து கொள்ளலாம் என்று சொல்கிறாள். இதைக்கேட்டு ஆத்திரமடைந்த விசாலாட்சி, அதெல்லாம் வேண்டாம், தலைக்கு தண்ணீர் ஊற்றி உட்கார வைத்தால் போதும் என்று சொல்ல நந்தினி ஆத்திரமடைகிறாள்.

கல்யாணம்,கருமாதியா: மறுபக்கம் தர்ஷன் தன்னுடைய டிகிரி விஷயம் பற்றி நண்பர்களுடன் பேசிக்கொண்டு இருக்கிறான். அப்போது அங்கு வரும் அறிவுக்கரசி, என்ன மாப்பிள்ளை ரோட்டுல நின்னு பேசிக்கிட்டு இருக்கீங்க, இப்போ நீங்க குணசேகரன் பையன் இல்ல, எங்க வீட்டு மாப்பிள்ளை, இனிமே இப்படி ரோட்டுல நின்னுக்கிட்டு பேசாதீங்க என்று சொல்லிவிட்டு, உங்களிடம் ஒரு முக்கியமான விஷயம் பேச வேண்டும். காரில் ஏறுங்க என்று சொல்லி அழைத்து செல்கிறாள். இதோ, பாருங்க மாப்பிள்ளை, அன்னைக்கு அப்பா முன்னாடி, அன்புவை கல்யாணம் செய்து கொள்கிறேன் என்று சொல்லிவிட்டீர்கள். ஆனால், அன்பு ஃபோன் பண்ணா எடுப்பதே இல்லையாமே. இனிமே அவள் ஃபோன் பண்ண எடுக்கணும். மாப்பிள்ளை இந்த திருமணத்திற்காக நான் நிறைய கஷ்டங்களை பட்டுவிட்டேன். இந்த கல்யாணம் நிச்சயம் நடந்தே ஆக வேண்டும். அப்படி இந்த கல்யாணம் மட்டும் நடக்கவில்லை என்றால். நிச்சயமாக உங்கள் வீட்டில் பல கருமாதிகள் நடக்கும் என்று எச்சரிக்கிறாள். இதைக்கேட்டு தர்ஷன் என்ன செய்வது என்று தெரியாமல் ஒரு விதமான பயத்தில் இருக்கிறான்.
வக்கத்தவங்க இல்ல: மறுபக்கம் நந்தினியின் அப்பா அம்மா வீட்டுக்கு வருகின்றனர். அப்போது நந்தினி காலையில் அனைவரும் கூடி நாளைக்கே சடங்கை வைத்துக்கொள்ளலாம் என்று பேசி விட்டார்கள். நான் நிறைய விஷயத்தை விட்டு கொடுத்துவிட்டேன். ஆனால், என்னுடைய மகள் விஷயத்தில் இனிமேல் விட்டுக் கொடுக்க மாட்டேன். என்னுடைய மகளின் சடங்கு சீரும் சிறப்புமாக நடக்க வேண்டும். அவங்க இஷ்டப்படி நடக்கக்கூடாது. அதைப்பற்றி அனைவர்களிடமும் பேசி முடிவு செய்து விடுங்கள் என்று சொல்கிறான். நந்தினியின் அப்பா மற்றும் அம்மா இருவரும் வருவதை பார்த்த விசாலாட்சி... ஏய்.. நந்தினி, நான் காலையிலேயே எல்லாத்தையும் தெளிவாக சொல்லிவிட்டேன். மறுபடியும் எதுக்கு உங்க அப்பன் வந்து இருக்கான். அவரை வெளியில கூட்டிட்டு போயி, நான் சொன்ன விசயத்தை சொல்லி, அப்படியே அனுப்பிவிடு என்று சொல்கிறார். இதை கேட்டு கடுப்பான நந்தினி, வெளியிலேயே நிக்க வச்சு பேசி அனுப்பும் அளவிற்கு எங்க அப்பன் ஒன்னும் வக்கத்தவன் இல்லை. என்னை கட்டுனவன் கிட்டையே என்ன விஷயம் என்று அவர்கள் கேட்டுக்கொள்ளட்டும் என்கிறாள்.
இன்றைய ப்ரோ: இதையடுத்து இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில், நன்தினி அழுதுக்கொண்டு இருக்க, அப்போது அங்கு வரும் தாரா, அம்மா என்னை மன்னிச்சுடுமா, நான் மட்டும் அங்கே அப்படி சொல்லவில்லை என்றால், எல்லாம் உன்ன, தாத்தா, அம்மாச்சியை திட்டுவாங்க, அம்மாச்சிக்கே உடம்பு சரியில்லை, அவங்க எதுக்கு அவமானப்படவேண்டும் என்று தான், நான் அப்படி சொன்னேன் என்று தேம்பி அழுகிறாள். அவளை அனைவரும் சமாதானப்படுத்துகின்றனர். இதையடுத்து, அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை நாளை பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











