கையெடுத்து கும்பிட்ட குணசேகரன்.. மீண்டும் தர்ஷன் வாழ்க்கையில் அன்புக்கரசி.. எதிர்நீச்சல் தொடர்கிறது!
சென்னை: குணசேகரன் உயிருக்கு போராடிக்கொண்டு இருக்கிறார். இந்த நேரத்தில் அவர் மனதில் தீராத ஒரு வேதனை இருக்கிறது. அந்த வேதனை என்னவென்றால் அவர் பெயரில் வழக்கு இருக்கு அந்த வழக்கில் இருந்து விடுபட வேண்டும் என்றால், நீங்க 3 பேரும் கையெழுத்து போட வேண்டும் என வழக்கறிஞர் சொல்கிறார். இதையடுத்து, நந்தினி, ரேணுகா, ஈஸ்வரி தனியாக சந்தித்து பேசுகின்றனர். அதில், நந்தினி, ஈஸ்வரியிடம் குணசேகரன் பற்றி கேட்க அவர் தவறு செய்தது உண்மை தான் ஆனால், அப்போ அவர் மாறிக்கொண்டு இருக்கிறார். இந்த நேரத்தில் அவருக்கு துணையாக இருக்க வேண்டும் என சொல்கிறாள்.
எதிர்நீச்சல் தொடர்கிறது: இன்றைய எபிசோடில், மூன்று பேரும் சேர்ந்து குணசேகரன் மீது இருக்கும் வழக்கை வாபஸ் வாங்குகின்றனர். ஆனால், ஜனனியிடம் இதுபற்றி யாரும் பேசவே இல்லை. ஜனனி குணசேகருக்கு தண்டனை வாங்கிக்கொடுக்கும் முடிவில் உறுதியாக இருக்கிறாள். ஈஸ்வரி அக்காவை இந்த குணசேகரன் எப்படி மாற்றி இருக்கிறார் என நினைத்து ஜனனி யோசித்துக்கொண்டு இருக்க அப்போது தர்ஷன் வந்து தனக்கு மதுரையிலேயே வேலை கிடைத்து இருப்பதாக சொல்ல ஜனனி சந்தோஷப்படுகிறாள்.

கையெடுத்து கும்பிட்ட குணசேகரன்: மறுநாள் காலை மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு வரும் குணசேகரன், மீனாட்சி அம்மன் படத்தை கும்பிட்டுவிட்டு, ஈஸ்வரியிடம் மீண்டும் இந்த வீட்டுக்கு வரவேமாட்டேன் என நினைத்தேன். உங்க புண்ணியத்தில் தான் இந்த வீட்டுக்கு வந்து இருக்கேன். என் மேல இருந்த வழக்கை வாபஸ் வாங்கியதற்கு மிகவும் நன்றி என கையெடுத்து கும்பிட்டு ஈஸ்வரி, நந்தினி, ரேணுகாவிற்கு நன்றி சொல்கிறார். இதையடுத்து ஈஸ்வரியின் அப்பா, நல்லபடியாக நீங்க வீட்டுக்கு வந்ததே போதும், நான் வீட்டுக்கு கிளம்புகிறேன் என்கிறார்.
தர்ஷன் அதிர்ச்சி: அதோடு அவர் ஜனனியிடம் சென்று, ஜனனி எதுக்கு நீ இப்படி பிடிவாதம் பிடிக்கிற, இந்த குடும்பத்தோடு அனுசரித்து போன என்ன என்று கேட்கிறார். அப்போது இந்த வீட்டில் எல்லாரும் நல்லா டிராமா ஆடிக்கொண்டு இருக்கிறார்கள். அதெல்லாம் கேட்க இங்கே யாருக்கும் தைரியம் இல்ல, எனக்கு எதுக்கு அட்வைஸ் என கேட்கிறார். மற்றொரு பக்கம் தர்ஷன் வேலைக்கு செல்லும் இடத்தில் அன்புக்கரசி இருக்க அதைப்பார்த்து தர்ஷன் அதிர்ச்சி அடைகிறார். மேலும் நீ எப்படி இங்கே என்று கேட்க, நான் இந்த உங்களுடைய TL என சொல்கிறார். அதோடு மட்டுமில்லாமல் அன்புக்கரசி செம ஸ்டைலாக இருக்கிறார். இதையடுத்து நாளை என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்


Click it and Unblock the Notifications