என்ட்ரியான ஜீவானந்தம்.. குணசேகரனாக மாறிய கதிர்.. எதிர்நீச்சல் தொடர்கிறது!

சென்னை: தாராவிற்கு சடங்கு செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டு இருக்கிறது. அப்போது அங்கு வரும் விசாலாட்சி என் மகன் வந்தால் சடங்கு செய்ய வேண்டும் என்று சொல்கிறாள். இதனால் கடுப்பான நந்தினி, யாரு வந்தாலும் வராவிட்டாலும் எனக்கு கவலை இல்லை. நான் குறித்த நேரத்தில் என்னுடைய மகளுக்கு சடங்கை செய்து விடுவேன் என்று பிடிவாதமாக இருக்கிறாள். இதையடுத்து நேற்று என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

ஈஸ்வரி, தர்ஷனை கல்லூரிக்கு அழைத்து சென்று விட்டு வீட்டுக்கு திரும்பி வந்த பிறகு, நந்தினி உங்களுக்காகத்தான் காத்துக்கொண்டு இருந்தோம் என்று சொல்லிவிட்டு, சடங்கு செய்கிறாள். இதைப்பார்த்து, ஆத்திரப்பட்ட விசாலாட்சி, இவளுக்காகத்தான் இவ்வளவு நேரம் காத்திருந்தீர்களா... என் மகன் வந்த பிறகு தான் தண்ணீர் ஊற்ற வேண்டும், அப்படி இல்லை என்றால், தண்ணீர் ஊத்தும் கையை வெட்டிவிடுவேன் என்று சொல்லி சத்தம் போடுகிறாள். உடனே நந்தினி, அவர் வருவதற்குள் எமகண்டம் ஆரம்பமாகிவிடும். என்னுடைய மகளுக்கு நல்ல நேரத்தில் தண்ணீர் ஊற்ற வேண்டும் என்று சொல்லி ஈஸ்வரியை கூப்பிட மேலும் ஆத்திரமடைந்த, விசாலாட்சி, எங்களை அவமானப்படுத்துவதற்காகவே
இப்படி செய்றியா..என்று சொல்ல சரியான நேரத்திற்கு குணசேகரன் வீட்டிற்கு வருகிறார்.

Ethirneechal Thodargiradhu Suntv promo

எதிர்நீச்சல் தொடர்கிறது: உட்னே கதிர், சரியான நேரத்திற்கு வந்து விட்டீங்க அண்ணா, நீங்கள் என் மகளுக்கு தண்ணீர் ஊற்றுங்கள் என்று சொல்ல, இதனால் ஆத்திரப்படும் நந்தினி, இது பெண்கள் விஷயம், உங்களுடைய அண்ணன் எப்படி தண்ணீர் ஊத்த முடியும். ஈஸ்வரி அக்கா தான் தண்ணீர் ஊற்றவேண்டும், நீங்கள் சொன்னதால்தான் என்னுடைய அப்பா அம்மாவை கூட இந்த விசேஷத்திற்கு வர வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். அப்படி இருக்கும்போது என்னுடைய மகளுக்கு அவர், தண்ணீர் ஊற்றக்கூடாது என்று பிடிவாதமாக இருக்கிறாள். அப்போது குறுக்கிட்டு பேசிய குணசேகரன், யார் உன்னுடைய அம்மாவை வர வேண்டாம் என்று சொன்னது என்று கேட்க, விசாலாட்சி நான் தான் அவர்களை வீட்டிற்கு வரக்கூடாது என்று சொன்னேன் என்று சொல்கிறாள். உடனே குணசேகரன் நீங்கள் செய்தது தவறான விஷயம். உங்களுக்கு எப்படி தாரா மீது பாசம் இருக்கிறதோ. உரிமை இருக்கிறதோ, அதைப்போல நந்தினியின் குடும்பத்திற்கும் உரிமை இருக்கிறது என்று சொல்லிவிட்டு, வேறு ஒரு நல்ல நாளை பாருங்கள் அந்த நாளில் விசேஷத்தை வைத்துக் கொள்ளலாம் என்று சொல்லிவிட்டு வீட்டிற்குள் சென்றுவிடுகிறார்.

மொத்தமாக மாறி கதிர்: மறுநாள் காலை அண்ணன் தம்பி அனைவரும் பேசிக்கொண்டு இருக்க, பழைய கெட்டப்பில் வந்த கதிர், நீங்கள் எனக்கு எழுதிக்கொடுத்த என்னுடைய சொத்துக்கள் அனைத்தையும் உங்கள் பேரிலேயே எழுதி வைத்து விட்டேன். நீங்கள் வந்தவுடன், சொத்தை ஒப்படைத்து விடுகிறேன் என்று சொன்னேன். அதேபோல நான் உங்களிடம் ஒப்படைத்து விடுகிறேன். நீங்கள் இதை மறுக்காமல் வாங்கிக் கொள்ள வேண்டும் என்று சொல்கிறான்.

ஆர்டர் போட்ட சக்தி: இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகி உள்ளது. அந்த ப்ரோமோவில் கோவத்துடன் பேசும் ஈஸ்வரி, ஜனனி அவரை வர சொல்லவில்லை. அவர் தான் பிசினஸ் விஷயமாக பேசுவதற்காக வீட்டிற்கு வந்திருக்கிறார் என்று சொல்கிறாள். அடுத்து குணசேகரன், மணி விழாவில் இவர்கள் அனைவரும் சேர்ந்து என்னை அவமானப்படுத்தி விட்டார்கள் மீண்டும் மீண்டும் என்னை அவமானப்படுத்தினால் நான் என்ன செய்வது என்று கேட்கிறார். மறுபக்கம், கதிர் ஜனனியிடம் யார் இந்த உலகநாதன், இவருக்கு எப்படி உங்களை தெரியும் என்று கேட்டு சத்தம் போடுகிறான். அப்போது தர்ஷினி, ஜீவா அப்பாதான் அவரை அனுப்பினார். ஜனனி சித்திக்கு இதைப்பற்றி எதுவும் தெரியாது என்று சொல்கிறாள். இதையடுத்து, கதிர், ஜனனி இனி மேல் இந்த வீட்டில் நீ எதை செய்தாலும் என்கிட்ட கேட்டுவிட்டுத்தான் சொல்லவேண்டும் என்று சொல்கிறான். இதையடுத்து, அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X