பொண்டாட்டிய அடக்கி வை சக்தி.. ஜனனியை பழி தீர்த்த குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது!
சென்னை: எதிர்நீச்சல் சீரியலில் அண்ணன் தம்பி அனைவரும் பேசிக்கொண்டு இருக்க, பழைய கெட்டப்பில் வந்த கதிர், நீங்கள் எனக்கு எழுதிக்கொடுத்த என்னுடைய சொத்துக்கள் அனைத்தையும் உங்கள் பேரிலேயே எழுதி வைத்து விட்டேன். நீங்கள் வந்தவுடன், சொத்தை ஒப்படைத்து விடுகிறேன் என்று சொன்னேன். அதேபோல நான் உங்களிடம் ஒப்படைத்து விடுகிறேன். நீங்கள் இதை மறுக்காமல் வாங்கிக் கொள்ள வேண்டும் என்று சொல்கிறான். இதையடுத்து, நேற்று என்ன நடந்தது என்று பார்க்கலாம்.
குணசேகரன் சிறைக்கு செல்வதற்கு முன்பாக கதிருக்கு எழுதிக் கொடுத்த சொத்துக்கள் அனைத்தையும், கதிர் மீண்டும் தன்னுடைய அண்ணன் பெயருக்கே மாற்றி எழுதிக் கொடுக்கிறார். அதை, குணசேகரன் வாங்கிக் கொள்கிறார். அந்த நேரத்தில் தொழிலதிபர் உலகநாதன் என்பவர் வீட்டிற்கு வருகிறார். அவர் ஜனனியை பார்க்க வந்திருப்பதாகவும், கேட்டரிங் சர்வீஸ் குறித்து பேசுவதற்காக வந்திருக்கிறேன் என்கிறார். உடனே ஜனனி, இது குறித்து, நான் அனைவரிடம் பேசி முடிவு சொல்கிறேன் என்று சொல்கிறாள். இதை கேட்டு கடுப்பான கதிர், யாருடா நீ வீட்டுக்குள்ள வந்து பொம்பளைங்க கிட்ட பிஸ்னஸ் பேசிட்டு இருக்க, உனக்கு அறிவே இல்லையா? மரியாதையா வெளியே போ என்று கத்துகிறான்.
எதிர்நீச்சல் தொடர்கிறது: அப்போது விசாலாட்சி வீட்டில் சடங்கு வேலை இருக்கு, தலைக்கு மேல பிரச்சனைகள் இருக்கு, இந்த நேரத்துல சமைக்க போறேன்னு வெளியில போக போறீங்களா டி? ஏன் பெரிய மனுஷா, இன்னொருவாட்டி இவ பேர சொல்லிக்கிட்டு இந்த வீட்டுக்கு வந்தேனா அவ்வளவுதான் மானம் கெட்டு போயிடும். வீட்டுக்குள்ள வந்து பொம்பளைங்க கிட்ட தொழில பாத்தி பேசுற, நீ எல்லாம் ஒரு ஆம்பளையா.. மரியாதையா.. வெளியிலே போ என்று சொல்ல, கதிர் உலகநாதனின் சட்டையை பிடித்து வெளியே தள்ளுகிறார். ஒட்டுமொத்த குடும்பமும் செய்த அவமானத்தால் தலை குனிந்து போன உலகநாதன் காரில் கிளம்பி சென்று விடுகிறார்.
மறுபக்கம் மருமகள்கள் அனைவரும், மாடியில் பேசிக்கொண்டு இருக்கின்றனர். அப்போது ஈஸ்வரி உலகநாதனுக்கு போன் செய்து மன்னிப்பு கேட்க வேண்டும் அவர் நமக்கு உதவி செய்ய வந்தார். கடைசியில் அவரை அனைவரும் சேர்ந்து அவமானப்படுத்தி விட்டார்கள் என்று சொல்லிக் கொண்டு இருக்கிறாள். அப்போது ஜனனி, நாம் மன்னிப்பு கேட்க வேண்டியது உலகநாதன் சாரிடம் இல்லை. ஜீவானந்தம் சாரிடம் அவர் தான், அவர் ஒவ்வொரு முறையும் நமக்காக உதவி செய்கிறார். ஆனால், கடைசியில் அவருக்கு அவமானம் தான் மிஞ்சுகிறது என்கிறாள்.

ஆறுதல் கூறிய ஜீவானந்தம்: உடனே ஜனனி, ஜீவானந்தத்திற்கு ஃபோன் செய்து நடந்த விஷயத்தை கூற, அவர் எனக்கு முன்பே தெரியும் உலகநாதன் வெளியே வந்ததும் நடந்த விஷயத்தை சொல்லிவிட்டார். என்னிடம் அவர் சொல்லாமல் வந்துவிட்டார். சொல்லி இருந்தால் நான் போக வேண்டாம் என்று சொல்லி இருப்பேன். மணி விழாவில் நடந்த பிரச்சனைகள் எனக்கு நன்றாகவே தெரியும், அப்படி இருக்கும்போது அவர்கள், அப்படித்தான் நடந்து கொள்வார்கள், இதைப் பற்றி நீங்கள் கவலைப்பட தேவையில்லை. நான் அவரிடம் பேசி விட்டேன். நீங்கள் எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டாம். அடுத்து என்ன செய்ய வேண்டுமோ அதை துணிச்சலாக செய்யுங்கள், இப்படி நடந்து விட்டது என்று ஓய்ந்துவிடாதீர்கள் என்கிறார்.
ஏற்றி விட்ட குணசேகரன்: மறுபக்கம் குணசேகரன், சக்தியை அழைத்து, வீட்டில் இருக்கும் மற்ற பெண்கள் அனைவரும் ஒரு வழியாக அடங்கி விட்டார்கள். ஆனால், ஜனனி அடங்குவதாக தெரியவில்லை. ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு பிரச்சனையை கொடுத்துக் கொண்டே இருக்கிறாள். அவளை அடக்கிவைய் சக்தி, அப்படி இல்லை என்றால் இந்த குடும்பம் கெட்டுவிடும், ஜனனி செய்வது எதுவுமே சரி இல்லை என குணசேகரன் சக்தியை ஏற்றிவிடுகிறான். அதே கோபத்தோடு மாடிக்கு வரும் சக்தி, ஜனனியிடம் தேவையில்லாமல் எல்லா விஷயத்திலும் மூக்கை நுழைத்து பிரச்சனை செய்வதே உன்னுடைய வேலையாக இருக்கிறது. யார் இந்த உலகநாதன், அவன் எதற்கு உங்களுக்கு உதவி செய்ய வேண்டும். மூடி இருக்கும் ஒரு கம்பெனிக்கு முதலீடு செய்யும் அளவிற்கு அவனுக்கும் உனக்கும் என்ன பழக்கம் என்று ஆத்திரத்தில் கத்துகிறான்.
ஆத்திரத்தில் கத்திய சக்தி: அப்போது, அந்த இடத்திற்கு வரும் தர்ஷினி இந்த வீட்டில் ஜனனி சித்தியால் மட்டும் தான் பிரச்சனையும், சண்டையும் வருகிறதா... மத்த யாராலும் பிரச்சினை வரவில்லையா... உலக நாதனை ஜனனி சித்தி வர சொல்லவில்லை, அவரை ஜீவா அப்பா தான் அனுப்பி வைத்தார். ஜனனி சித்திக்கும் எதுவுமே தெரியாது என்று சொல்கிறாள். இதைக் கேட்ட பின்பும் சமாதானம் ஆகாத சக்தி, ஜனனிடம் இனிமேல் இந்த வீட்டில் நீ எது செய்வதாக இருந்தாலும், என்னிடம் சொல்லிவிட்டு அனுமதி வாங்கிவிட்டு தான் செய்ய வேண்டும் இதுதான் நான் உனக்கு கொடுக்கும் கடைசி எச்சரிக்கை என்பது போல கடுமையாக மிரட்டி விட்டு செல்கிறான். இதையடுத்து என்ன ஆனது என்று பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











