மொத்த சொத்தையும் தம்பிகளுக்கு எழுதியாச்சு..குணசேகரனின் பிளான் அப்படி போகுதா? எதிர்நீச்சல் தொடர்கிறது
சென்னை: ஜனனியை சந்திக்க வரும் உலகநாதன் என்கிற தொழிலதிபர், கேட்ரிங் பற்றி பேசுகிறார். இதைப்பார்த்து கடுப்பான கதிர், அவரை அடித்து வெளியில் துரத்திவிடுகிறார். மறுபக்கம், குணசேகரன், சக்தியை அழைத்து, வீட்டில் இருக்கும் மற்ற பெண்கள் அனைவரும் ஒரு வழியாக அடங்கி விட்டார்கள். ஆனால், ஜனனி அடங்குவதாக தெரியவில்லை. ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு பிரச்சனையை கொடுத்துக் கொண்டே இருக்கிறாள். அவளை அடக்கி வை சக்தி, அப்படி இல்லை என்றால் இந்த குடும்பம் கெட்டுவிடும், ஜனனி செய்வது எதுவுமே சரி இல்லை என குணசேகரன் சக்தியை ஏற்றிவிடுகிறான்.
கோபத்தோடு மாடிக்கு வரும் சக்தி, ஜனனியிடம் தேவையில்லாமல் எல்லா விஷயத்திலும் மூக்கை நுழைத்து பிரச்சனை செய்வதே உன்னுடைய வேலையாக இருக்கிறது. யார் இந்த உலகநாதன், அவன் எதற்கு உங்களுக்கு உதவி செய்ய வேண்டும். மூடி இருக்கும் ஒரு கம்பெனிக்கு முதலீடு செய்யும் அளவிற்கு அவர் எந்த வகையில் தெரிந்தவர் என்று சொல்லிவிட்டு, இனி மேல், நீ எது செய்வதாக இருந்தாலும். என்னைக் கேட்டுத்தான் முடிவு செய்ய வேண்டும் என்கிறார். இதையடுத்து, நேற்று என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

எதிர்நீச்சல் தொடர்கிறது: ஜனனியை திட்டி விட்டு கீழே வரும் சக்தியிடம் குணசேகரன் இன்னைக்குத் தான் நீ நல்ல விஷயம் செய்து இருக்கிறாய். இப்படித்தான் ஜனனியை அடக்கி வைக்க வேண்டும் என்று சொல்கிறார். மேலும், இதே விஷயத்தை பேசிக்கொண்டு இருந்தால் குடும்பத்தில் அடுத்த நடக்க வேண்டிய வேலை எதுவும் நடக்காது. இதனால், நீங்கள் அனைவரும் தாராவின் சடங்கு விஷயமாக நந்தினியின் அப்பா அம்மாவை சந்தித்து அவர்களிடம் மன்னிப்பு கேட்டு அழைத்து வாருங்கள் என்று சொல்லி அனுப்புகிறார். இதையடுத்து, அனைவரும் நந்தினியின் அப்பாவை சந்தித்து அவரிடம் மன்னிப்பு கேட்டு அவரை சடங்கு அழைக்கின்றனர்.
சொத்தை பிரித்து கொடுத்த குணசேகரன்: அடுத்ததாக அனைவரும் வீட்டுக்கு வர, அப்போது ஆடிட்டர் வீட்டிற்கு வருகிறார். இவரை ஒரு முக்கியமான விஷயம் பேசுவதற்காக அழைத்து இருக்கிறேன் என்று சொல்லும் குணசேகரன். கதிர் என்னிடம் சொத்துக்களை ஒப்படைத்த போதே, நானும் ஒரு முடிவு செய்து விட்டேன். பல நாட்களுக்கு முன்பே என்னுடைய அனைத்து சொத்துக்களையும் அனைவருடைய பெயருக்கும் சரியாக பிரித்து எழுதி வைத்திருக்கிறேன் என்கிறார். இதைக்கேட்ட தம்பிகள் இப்போது எதற்கு சொத்தை பிரிக்க வேண்டும் என்று கேட்க, இதுதான் சரியான நேரம், இப்போது செய்வது தான் சரியாக இருக்கும் என சொல்லிவிட்டு, தர்ஷனை அழைத்து, இது உன்னுடைய பங்கு, இதில் தர்ஷினிக்கும் பங்கு பிரித்து இருக்கிறேன். அவளுக்கு என்னை பிடிக்கவில்லை என்றாலும், அவள் என் மகள் தான். அதேபோல, ஈஸ்வரியும் என்னை நம்பி வந்தவள் அவளுக்கும் இந்த சொத்தில் பங்கு இருக்கு என்றார்.
பின் கதிர், ஞானம், சக்தி என அனைவரையும் தனித்தனியாக அழைத்து அவர்களிடம் சொத்து பத்திரத்தை கொடுக்கிறார் குணசேகரன். இதில் வேறு ஏதாவது பிரச்சனை இருந்தால், தயங்காமல் சொல்லிவிடுங்கள் அதை நாம் சரி செய்து கொள்வோம். இதுபற்றி, உங்களின் மனைவிகளிடம் பேசுங்கள், அவர்களுக்கும் சில விருப்பம் இருக்கும். அவர்களின் முடிவை தெரிந்து கொண்ட பின், பத்திரமாக பதிவு செய்து கொள்ளலாம் என்கிறார். இதையடுத்து, அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை நாம் பொறுத்து இருந்து பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











