தாரா உங்க அண்ணனுக்கா பொறந்தா? வரம்பு மீறி பேசிய நந்தினி.. கொந்தளித்த கதிர்.. எதிர்நீச்சல் தொடர்கிறது

சென்னை: தம்பிகளுக்கு சொத்துக்களை பங்கு போட்டு கொடுத்த குணசேகரன், அடுத்த திட்டத்தை செயல்படுத்துவதற்காக காத்துக்கொண்டு இருக்கிறான். இதை தெரிந்து கொண்ட மருமகள்கள், வேறு ஒரு திட்டத்தை போடுகின்றனர். அந்த திட்டத்தின் படி, நந்தினி, கதிரிடம் உங்க அண்ணன் குணசேகரன் உங்களுக்கு கம்மியான சொத்தை கொடுத்து ஏமாற்றிவிட்டார் என்று அழுகிறாள். அதே போல, ரேணுகாவும் தன்னுடைய கணவர் ஞானத்திடம் அழுதுக்கொண்டே, கதிருக்கு உங்க அண்ணன் நிறைய சொத்தை எழுதி கொடுத்து இருக்காரு, உங்களுக்கு சுண்ணாம்பு பேக்டரியை தான் கொடுத்து இருக்கார். அந்த சுண்ணாம்பு பேக்டரியை வச்சு, நாம என்ன பண்றது. சொத்தை எழுதி கொடுத்து இருப்பதை பார்க்கும்போது எனக்கே மனசு சங்கடமா இருக்கிறது என்று சொல்கிறாள். இதையடுத்து என்ன ஆனது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.

காலையில் குணசேகரன், ஈஸ்வரியும் தர்ஷினியும் சொத்து வேண்டாம் என்று சொல்லிட்டாங்க, உங்களுடைய மனைவிகள் என்ன சொன்னாங்க என்று கேட்கிறார். அப்போது, கதிர், அவளுங்க எல்லாம் ஒரு ஆளு, அவங்க கிட்ட நாங்க அனுமதி கேட்க வேண்டுமா... இந்த வீட்ல நீங்க என்ன முடிவு எடுப்பதாக இருந்தாலும், அதை நீங்களே எடுத்து விடுங்கள். இவளுங்க நம்ம நாலு பேரையும் பிரிப்பதற்காக வந்த சகுனிகள். இவளுங்களுக்கு நம்ம நாலு பேரும் சேர்ந்து இருப்பதில் விருப்பமே இல்ல. இதனால நீங்க என்ன முடிவு எடுக்குறீங்களோ.. அதுதான் எங்களுடைய முடிவும் என்று சொல்கிறார் கதிர். அதேபோல சக்தியும் எனக்கும் சொத்துக்களை பிரித்து கொடுப்பதில் உடன்பாடே கிடையாது. நீங்க எந்த இடத்தில் கையெழுத்து போட சொல்கிறீர்களோ அந்த இடத்தில் நாங்க கையெழுத்துப்போடுகிறோம் என்று சொல்லிவிட்டு. ஆடிட்டர் முன் மூன்று பேரும் கையெழுத்து போடுகின்றனர்.

Ethirneechal Thodargiradhu Suntv promo

ஆசைப்பட்ட தாரா: இவர்கள் பேசுவதை சமையல் அறையில் இருந்து கேட்டுக்கொண்டு இருந்த நந்தினி, ஆத்திரத்தில் பாத்திரத்தை போட்டு உடைக்கிறாள். அப்போது, ரேணுகா, நந்தினியை சமாதானப்படுத்தி, ஏய்.... இவங்கள திருத்தவே முடியாது. இவங்க மாறவே மாட்டாங்க, நீ ஏன் டென்ஷன் ஆகிட்டு இருக்க என்று சொல்லி அவளை சமாதானப்படுத்துகிறாள். அங்கு தாரா மற்றும் தர்ஷினி இருவரும் வருகின்றனர். அப்போது, தாரா, எனக்கு சடங்கு அந்த காலத்துல செய்வது போல செய்யாமல், இப்போ டிரெண்டிங்கில் சடங்கு செய்வது போல செய்ய வேண்டும் என்று சொல்கிறாள். அப்போது, நந்தினி, இந்த விஷயத்தில் நான் முடிவு எடுக்க முடியாது, உங்க அப்பாத்தான் முடிவு எடுக்க வேண்டும் என்று சொல்கிறாள். உடனே சரி.. நானே அப்பாவிடம் பேசிக்கொள்கிறேன் என்கிறாள். '

Ethirneechal Thodargiradhu Suntv promo

அடிக்க பாய்ந்த கதிர்: மறுபக்கம், நந்தினி துணி மடித்துக்கொண்டு இருக்க, கதிர் கணக்கு பார்த்துக்கொண்டு இருக்கிறார். அப்போது அங்கு வரும் தாரா, அப்பா எனக்கு சடங்கு , இந்த காலத்துல டிரெண்டிங்கில் செய்வது போல செய்யுங்க, அது தான் ஜாலியா இருக்கும் என்று சொல்கிறாள். உடனே, கதிர், அந்த முடிவை நான் எடுக்க முடியாது, அண்ணா என்ன செய்ய சொல்கிறாரோ அப்படித்தான் சடங்கு நடக்கும் என்று சொல்கிறான். இதைக்கேட்டு கடுப்பான நந்தினி, தாராவுக்கு நீங்க அப்பனா... இல்ல உங்க அண்ணன் அப்பனா என்று கேட்க, கோவத்தின் உச்சத்திற்கு சென்ற கதிர், நந்தினியை அடிக்கப்பாய்கிறான். கதிரை தாரா தடுத்துவிட்டு, எனக்கு எந்த சடங்கும் தேவையில்லை என்று சென்றுவிடுகிறாள். இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X