யாருடா சம்மந்தி.. அடிச்சி அவமானப்படுத்துனது மறந்துபோச்சா.. கொந்தளித்த ஜனனி..எதிர்நீச்சல் தொடர்கிறது!

சென்னை: குணசேகரனுக்கு மணி விழா நடத்துவதற்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து கொண்டு வருகிறது. சக்தி குந்தவையிடம் கடன் வாங்கி, சீர் செய்ய தேவையான அனைத்தையும் வாங்கி விட்டான். அதே போல, அனைவரும் விழாவிற்கு தேவையானதை வாங்கி விட்டார்கள். இந்த நேரத்தில், ஜான்சி ராணி மொத்தமாக மாறி காவி உடையில் வீட்டிற்குள் வருகிறாள். இதைப்பார்த்த குணசேகரன் என்ன இது ஆளே மாறி இருக்க, வந்தா உள்ளே வரவேண்டியது தானே வெளியில் உங்காந்து இருக்க என்று கேட்க, அப்போது ஜான்சி, இந்த வீட்டுக்கு வராதவங்க எல்லாம் வந்து இருக்காங்க, எல்லாரையும் அழைச்சி ஒன்னா குடும்பம் நடத்துறீங்க. அப்படி இருக்கும் போது, நான் வீட்டுக்குள் வருவது சரியா இருக்காது என்று, பொடி வைத்து பேசுகிறாள்.

உடனே விசாலாட்சி... உள்ளவாடி... வெளியில் இருந்து கொண்டே நியாயம் பேசுவ என்று உள்ளே அழைத்து செல்கிறாள். அப்போது, ஜான்சி, இப்போது தான் காசிக்கு போய்ட்டு வந்தேன். அந்த பிரசாதத்தை அண்ணணிடம் கொடுத்து விட்டு போகலாம் என்று வந்தேன் என்று பிரசாதத்தை கொடுக்கிறாள். அப்போது, விசாலாட்சி, என்ன ஜான்சி இப்படி மாறி இருக்க என்று கேட்க, ஆமாம்.. முன்னே இருந்த ஜான்சி ராணி அடங்காபிடாரி... இப்போ இருக்கும் ஜான்சி ராணி ஆன்மீக ஜான்சி ராணி என்று சொல்கிறாள். பின் விசாலாட்சி இனி மேல் நீ எங்கேயும் போக வேண்டாம் வீட்டிலேயே இரு என்று சொல்கிறாள். உடனே ஜான்சி அது எல்லாம் சரிபட்டு வராது, உங்க மருமகள்களுக்கு என்னை பார்த்தாலே பிடிக்காது. என்னால மீண்டும் குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சனை தான் வரும், நான், எங்கையாவது போகிறேன், என்று சொல்கிறாள். அப்போது, குணசேகரன், அட என்ன ஜான்சி ரொம்ப வீம்பு புடிச்சிக்கிட்டு இருக்க, யாரும் இல்லாத இடத்தில் தனியா போய் என்ன செய்ய போற, இந்த வீட்டிலேயே இரு என்று சொல்கிறாள். இதையடுத்து என்ன நடந்தது என்று பார்க்கலாம்.

Ethirneechal Thodargiradhu Suntv promo

எதிர்நீச்சல் தொடர்கிறது: இதையடுத்து, விசாலாட்சி சம்மந்திகளை அழைப்பதற்கான பேச்சுவார்த்தை நடந்து கொண்டு இருக்க... அப்போது ரேணுகா, யாரையும் அழைக்க வேண்டாம் அவர்களின் சார்பாக நாங்களே எல்லா சீர்களையும் செய்து விடுகிறோம் அவர்களை அழைத்துவிட்டு, மீண்டும் அவர்களை அவமானப்படுத்தி அனுப்புவீங்க, அதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை என்று சொல்கிறாள். இதைக்கேட்டு கோபமான ஞானம், உன்னிடம் யாரும் அனுமதி கேட்கவில்லை. நான் அனைவரையும் அழைத்து, அவர்களின் ஆசிர்வாதத்தோடு தான் அண்ணனுக்கு இந்த மணிவிழா நடைபெற வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறோம். இதனால், அனைவரையும் அழைப்போம் என்று சொல்கிறான்.

மன்னிப்பு கேட்டி சக்தி: பின் சக்தி ஞானம் கதிர் அனைவரும் ரேணுகாவின் அம்மா வீட்டிற்கு வந்து, அண்ணனுக்கு மணி விழா நடைபெற இருக்கிறது அதற்காக அழைப்பிதழை கொடுப்பதற்காக வந்தோம் என்று சொல்கிறான். உடனே, ரேணுகாவின் அம்மா அக்கம், பக்கத்தில் இருப்பவர்கள் அனைவரும் இதைப்பற்றி கேட்டார்கள். இந்த விஷயம் எனக்கு முன்பே தெரியும், ஆனால், இதுகுறித்து ரேணுகா எனக்கு எந்த விஷயத்தையும் சொல்லவே இல்லை. நான் என்னுடைய மருமகனை மகனாகத்தான் பார்த்தேன். ஆனால், மருமகன் என்னை அடித்து வெளியே துரத்திய பின்பு தான் நான் எந்த நிலைமையில் இருக்கிறேன் என்று எனக்கு தெரியவந்தது. அந்த விஷயத்திற்கு பிறகு ரேணுகா என்னிடம் பேசவே இல்லை. இப்போது நான், மீண்டும் இந்த விழாவிற்கு வந்தால் ரேணுகா, என்ன நினைப்பாள் என்பது கூட எனக்கு தெரியவில்லை. அதுவும் இல்லாமல் நான் வந்து என்ன செய்ய போகிறேன். என்னிடம் சீர் செய்வதற்குகூட பணம் இல்லை என்று சொல்கிறாள். உடனே, சக்தி, எல்லாரும் ஒவ்வொரு சூழ்நிலையில் தவறு செய்து இருக்கிறோம். அது எல்லாத்தையும் மறந்துவிட்டு வாங்க, சீர் செய்வதை பற்றி நீங்க கவலைப்படத் தேவையில்லை, நீங்க வந்தா மட்டும் போதும் என்கிறான்.

இல்ல தம்பி, ரேணுகா வர சொன்னா நான் வருகிறேன் என்று சொல்ல, ஞானம் ரேணுகாவிற்கு ஃபோனை போட்டு, அம்மாவிடம் கொடுத்து பேச சொல்கிறான். அப்போது ரேணுகா, வருவதும் வராததும் உங்களுடைய விருப்பம் நான் சொல்வதால் நீங்கள் வராமல் இருக்கப் போவதில்லை. இதில், என்னுடைய தலையை ஏன் உருட்டுறீங்க என்று கேட்கிறாள். உங்களுக்கு நடந்த அவமானம் எல்லாம் மறந்து போச்சா, நீங்கள் வர வேண்டாம் என்கிறாள். உடனே, கடுப்பான ஞானம் என்ன, அவங்களை வரவேண்டாம் என்று சொல்லி ஏத்திவிடுறியா என்று கேட்டு ஃபோனை வைத்துவிடுகிறான். உடனே , ரேணுகாவின் அம்மா, நீங்க கவலைப்படாம போங்க தம்பி, நான் வருகிறேன். என் மகளுக்காக நான் கண்டிப்பா வருகிறேன் என்கிறார்.

Ethirneechal Thodargiradhu Suntv promo

இன்றைய ப்ரோமோ: ஜனனி மருத்துவமனையில் செக்கப்பிற்காக சென்றிருக்க, வீட்டில் இருக்கும் நந்தினி, ஜனனிக்கு போன் செய்து, டாக்டர் என்ன சொன்னார் என்று கேட்க, டாக்டர் இன்னும் வரவில்லை, அவருக்காகத்தான் காத்து இருக்கிறேன் என்று சொல்கிறாள். அதை தொடர்ந்து நந்தினி, வீட்டில் இருப்பவர்கள் அனைவரும், சம்மந்திகளை அழைப்பதற்காக வீட்டிற்கு சென்று இருக்கிறார்கள் என்று சொல்கிறாள். மேலும், உன்னுடைய அப்பாவையும் அழைப்பார்கள் என்று நினைக்கிறோம் என்று சொல்கிறாள். அப்போது ஜனனி, இல்ல அக்கா அவரை கூப்பிட மாட்டார்கள். அப்படியே கூப்பிட்டாலும் அப்பா வரமாட்டார். சக்தி என்னைக் கேட்காமல் எதுவுமே செய்ய மாட்டான் என்று சொல்கிறாள்.

இதையடுத்து இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில், சக்தி, ஜனனியிடம் அப்பாவிற்கு ஃபோன் செய்து, விழாவிற்கு அழைத்தேன் என்று சொல்கிறான். இதைக்கேட்டு ஆத்திரமடைந்த ஜனனி, யாரை கேட்டு, அவருக்கு ஃபோன் பண்ணி கூப்பிட்ட என்று சத்தம் போடுகிறாள். அப்போது, விசாலாட்சி, விசேஷத்திற்கு சம்மந்தியை கூப்பிடாமல் எப்படி என்று கேட்க, இப்போ தான் அவர் சம்மந்தி என்று உங்க கண்ணுக்கு தெரியுதா.. கதிரை வைத்து அவரை அடித்து வெளியில் அனுப்பும் போது அவர் சம்மந்தி என்று தெரியவில்லையா.. என்று கேட்டு சத்தம் போடுகிறாள். ஜனனி தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்ததால், கடுப்பான சக்தி, என்னடி, உனக்கு பிரச்சனை, அவரே என்கிட்ட நல்ல பேசுறார். நான் சொன்னதும் சரி வரேன் என்று சொல்லிவிட்டார். உன்கிட்ட சொல்லாமல் அவரை கூப்பிட்டது பிரச்சனையா என்று கேட்டு சத்தம் போடுகிறான்.

அப்போது, ஜனனி, ஆமாம் பிரச்சனை தான், என்னை கேட்காமல் கூப்பிட்டது பிரச்சனை தான், எங்க அப்பாவும் உங்க அண்ணன் போல மோசமான ஆளு தான் என்று சொல்ல, கோவப்பட்ட கதிர், ஏய் என்ன வாய்க்கு வந்ததை பேசிகிட்டு போற என்று அடிக்க பாய்கிறான். அவனை தடுத்து நிறுத்திய குணேசேகரன், தேவையில்லாமல் வார்த்தையை விடாதே, இருடா என்று சொல்லி அவனை சமாதானப்படுத்துகிறான். இந்த சண்டையை வைத்தே சக்தி, ஜனனியை பிரிக்க குணசேகரன் பிளான் போடுகிறான். இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்றுபார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X