என் மகளுக்கு சீர் செய்ய நீ யாருடி.. சம்பவம் செய்த நந்தினி..எதிர்நீச்சல் தொடர்கிறது!

சென்னை: தாராவிற்கு சடங்கிற்கு சீர் செய்யவதற்கு அறிவுக்கரசியை கூப்பிட வேண்டும் என குணசேகரன் சொல்கிறாள். ஆனால், நந்தினியோ அவங்க எதற்காக வரவேண்டும், கீழ்த்தனமான ஒருத்தி என் மகளுக்கு சீர் செய்யக்கூடாது, அவளை சீர் செய்ய நான் விட மாட்டேன் என்கிறாள். இதனால், கோவப்படும் குணசேகரன், அவங்க என் சம்மந்தி நானே அவர்களை கூப்பிட்டுக்கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு வெளியில் சென்றுவிடுகிறார்.

இதைத்தொடர்ந்து, அண்ணன் தம்பிகள் அனைவரும் ஒரு ஜோசியரிடம் சென்று குறி கேட்க செல்கின்றனர். அப்போது, அவர், அண்ணன் தம்பிகள் ஒத்துமையோடு இருக்கின்றனர். ஆனால், இந்த வீட்டுக்கு வந்த மருமகள்களால் குடும்பம் வீணாப்போய்விடும், மேலும், வீட்டில் நடக்க இருக்கும் கல்யாணத்தில் பல பிரச்சனைகள் போராட்டம் நடக்கும் என்று சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். இதைடுத்து நேற்று என்ன நடந்தது என்று பார்க்கலாம்.

எதிர்நீச்சல் தொடர்கிறது: தாராவின் சடங்குக்கு அறிவுக்கரசி வரக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கும் நந்தினி அழுதுக்கொண்டே இருக்கிறாள். அப்போது, ஜனனி அவளை சமாதானப்படுத்துகிறாள். இந்த வீட்டில் எப்போதுமே நாம நினைச்சது நடக்காது அக்கா, அவங்க எல்லாம் ஒரு திட்டம் போட்டு இருப்பாங்க அதுதான் நடக்கும். அதற்காக நீங்க வருத்தப்பட்டால், பின் தாராவும் கஷ்டப்படுவாள் என்று சொல்கிறாள். இதைக்கேட்ட நந்தினி, இத்தனை வருஷமா நான் என் மகளுக்காகத்தான் இந்த வீட்டில் இருக்கிறேன். அந்த அறிவுக்கரசி, ரொம்ப மோசமான பொம்பளை மட்டும் இல்ல, கீழ்த்தனமானவ, ஒரு நாள் என் புருஷன் ஃபோனை எடுத்து பார்த்தேன். அசிங்க அசிங்கமா அவளுக்கு மெசேஜ் அனுப்பி அனுப்பி இருக்கான், அறிவுக்கரசியும் பதிலுக்கு மோசமாக மெசேஜ் அனுப்பி இருக்கா. எல்லாத்தையும் என் மகளுக்காக பொருத்துக்கிட்டேன். ஆனால், இந்த விஷயத்தில் நான் அமைதியா இருக்க மாட்டேன். அவர்கள் இந்த சடங்கு விஷயத்தில் எப்படி எல்லாம் கூத்து அடிக்கிறார்களே அப்படி அடிக்கட்டும், நானும் ஒரு கை பார்த்துவிடுகிறேன் என்கிறாள்.

Ethirneechal Thodargiradhu Suntv promo

சம்பவம் செய்த நந்தினி: மறுநாள் காலை, விசாலாட்சி, கதிரிடம், இந்த வீட்டில் உன் பொண்டாட்டி மட்டுமில்லாமல் நாலு பேரு ஒரு தினுசா இருக்குறாங்க, என்ன பிரச்சனை செய்யப்போகிறாள்கள் என்றே தெரியவில்லை, மணி விழால பெரியவனை அவமானப்படுத்திவிட்டார்கள், மறுபடியும் இந்த சடங்குல ஏதாவது நடந்தால், நான் சும்மா இருக்க மாட்டேன் என்று சொல்கிறாள். அந்த நேரம் பார்த்து, நந்தினியின் அம்மா வருகிறார். அவரைப் பார்த்த விசாலாட்சி, என்ன இவ்வளவு சீக்கிரம் வந்துவிட்டீங்க என் கிண்டலாக கேட்க, கடுப்பான நந்தினி, நான் தான் சீக்கிரம் வர சொன்னேன். கடைசி நேரத்தில் வரசொல்விட்டு, அப்புறம் அவங்க வருவதற்குள் தண்ணீயை ஊத்திடுவீங்க, அதான் சீக்கிரமா வர சொனேன் என்கிறாள்.

மரியாதை கெட்டுவிடும்: இதையடுத்து இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில், அறிவுக்கரசி சீரை எடுத்து வந்து கொடுக்க கோவத்தின் உச்சத்திற்கு சென்ற நந்தினி, சீரை தட்டிவிட்டு, எல்லாம் என்ன நினைச்சிக்கிட்டு இருக்கீங்க, என் மகளுக்கு கண்டவன் வந்து சீர் செய்வானா... எல்லாருக்கும் மரியாதை கெட்டுவிடும் என்று கத்த, கதிர் பாய்ந்து வந்த கதிர், என்ன ஓவரா ஆட்டம் போட்டுக்கிட்டு இருக்க என்று அடிக்கிறார். உடனே குணசேரன் தம்பி பொண்டாட்டி என்று பார்க்கிறேன் இல்லை என்றால் அவ்வளவு தான் என்று சொல்கிறார். இதையடுத்து என்ன நடந்தது என்று பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X